அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தில் நேரிட்ட ஏராளமான உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பங்களுக்கு அவர் தமது இரங்கலைத் தெரிவித்தார், அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் மகத்தான வலி மற்றும் இழப்பை தான் உணர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவிதாதர். இன்று முன்னதாக, அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட திரு மோடி, பேரழிவிற்குப் பிறகு அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் அவசரகால …
Read More »நாட்டின் தற்சார்பை வலுப்படுத்துவதாகஇளையோர் தலைமையிலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன – பிரதமர் பாராட்டு
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் தற்சார்பு நிலையை அடைவதற்கு நாட்டில் உள்ள இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியா திட்டமானது இளைஞர்கள் புதுமைகளைப் படைப்பதற்கு அதிகாரம் அளித்துள்ள தாகவும் அவர் கூறினார். இது உலக அளவில் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதாக உள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், தொழில்நுட்பப் பயன்பாடு நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை …
Read More »கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது: பிரதமர்
வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் பெண்கள் ஆற்றிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான பங்களிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துவதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் ஒவ்வொரு கட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று பிரதமர் கூறினார். ஆனால் இன்று அவர்கள் வளர்ந்த இந்தியா என்ற தீர்மானத்தில் தீவிரமாகப் பங்கேற்பது மட்டுமல்லாமல், கல்வி முதல் …
Read More »விவசாய நலனுக்கான எங்கள் முயற்சிகள் வரும் காலங்களில் அதிக வீரியத்துடன் தொடரும்: பிரதமர்
கடந்த 11 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான அரசின் ஆதரவு முயற்சிகளின் நீண்டகாலத் தாக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார். இது விவசாய சமூகத்திற்கு கண்ணியம் மற்றும் முன்னேற்றத்துக்கான குறிப்பிடத்தக்க வளர்ச்சி கட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் கிசான் சம்மான் நிதி மற்றும் விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற முக்கிய முயற்சிகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அவை விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கைகள் என்று அவர் விவரித்தார். குறைந்தபட்ச ஆதரவு …
Read More »பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டின் போது பிரதமரின் உரை
மேன்மை தங்கிய பிரதிநிதிகளே, அன்பான நண்பர்களே, வணக்கம். பேரிடர்களைத் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாடு- 2025-க்கு உங்களை வரவேற்கிறோம். இந்த மாநாடு ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படுகிறது. எனது நண்பர் அதிபர் மக்ரோன் மற்றும் பிரான்ஸ் அரசின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கிறேன். வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாட்டிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, இந்த மாநாட்டின் கருப்பொருள் ‘கடலோரப் பகுதிகளுக்கு தாங்கும் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குதல்’. இயற்கைப் பேரழிவுகள் மற்றும் …
Read More »29 நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பை இந்தியா நிறுவியுள்ளது: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக நடத்தப்படும் 2025-ம் ஆண்டுக்கான பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த சர்வதேச மாநாட்டிற்கு வந்த பங்கேற்பாளர்களை பிரதமர் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் திரு இம்மானுவேல் மக்ரோனுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு ஆதரவளித்த பிரான்ஸ் அரசுக்கு …
Read More »பிரதமர் திரு நரேந்திர மோடியை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி சந்தித்தார்
இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார். இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். …
Read More »இந்திய இளைஞர்கள் உலகளவில் முத்திரை பதித்துள்ளனர். நாட்டின் இளையோர் சக்தி சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதி கொண்டதாகும்: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இந்திய இளைஞர்கள் படைத்துள்ள சர்வதேச சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். நாட்டில் உள்ள இளைஞர்கள் உலக அளவில் ஒரு முத்திரையைப் பதித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவை சுறுசுறுப்பு, புத்தாக்கம், மனஉறுதியின் சின்னங்களாக உள்ளன என்று விவரித்த பிரதமர், கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியானது நாட்டின் இளையோர் சக்தியின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் நம்பிக்கையால் தூண்டப்பட்டுள்ளது என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளைஞர்களின் …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார். ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதிகள் பல சுற்றுச்சூழல் …
Read More »பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்
ஜம்மு & காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார், இவை பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் …
Read More »
Matribhumi Samachar Tamil