Wednesday, December 17 2025 | 10:02:15 AM
Breaking News

Tag Archives: Om Birla

சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

தொழில்முனைவு, கலாச்சாரம், சேவை உள்ளிட்டவற்றில் சிந்தி சமூகத்தினரின் அர்ப்பணிப்பு அவர்களை நாட்டின் சமூக, பொருளாதார வலிமையின் தூணாக மாற்றியுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். புதுதில்லி விஞ்ஞான் பவனில் விஸ்வ சிந்தி இந்து சங்கங்களின் அறக்கட்டளை இன்று (23.11.2025) ஏற்பாடு செய்திருந்த  ” வலுவான சமூகம் – வளமான இந்தியா” (சஷக்த் சமாஜ் – சம்ரித் பாரத்) என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். சிந்தி சமூகத்தினரின் சேவைக்கான உறுதியான அர்ப்பணிப்பையும், ஆழமான கலாச்சார பாரம்பரியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்த குணங்கள் இந்தியாவின் சமூக, பொருளாதார, கலாச்சார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சமூகத்தின் வலிமையையும், மீட்சித் தன்மையையும் பாராட்டிய திரு ஓம் பிர்லா, வலுவான இந்தியாவின் அடித்தளத்தை உருவாக்கும் கொள்கைகளை இந்த சமூகம் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். வணிகம், தொழில், வங்கி, சேவைகள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் இந்த சமூகம் தொடர்ந்து சிறந்து விளங்கி வருவதாகவும், இதன் மூலம் பல லட்சக் கணக்கானவர்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார். இந்த சமூகத்தினரின் வெற்றி பொருளாதாரத்தில் மட்டுமல்லாமல், நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றின் ஆழமான மதிப்புகளிலும் வேரூன்றியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த மதிப்புகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கின்றன என அவர் கூறினார். தேசப் பிரிவினையின் போது சிந்தி சமூகத்தினர் சந்தித்த சோதனைகள், இந்த சமூகத்தை மேலும் வலுப்படுத்தியதாக மக்களவைத் தலைவர் தெரிவித்தார். பொருள் இழப்பு உள்ளிட்ட பல இழப்புகள் இருந்தபோதிலும், சிந்தி சமூகத்தினர் தங்கள் மதம், மரபுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சார அடையாளத்தை கடுமையாக பின்பற்றுவதாக அவர் கூறினார். அசாதாரண உறுதியுடன் அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பியதாகவும் துன்பங்களை வாய்ப்பாக மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சமூகத்தினரின் மீட்சித் தன்மைக்கும் கலாச்சார பெருமைக்கும் ஒரு ஆழமான எடுத்துக்காட்டாக உள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read More »

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாக கொண்ட ஆளுகை மூலம் நிதி மேற்பார்வை செயல்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் மக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மூலம், நிதிசார் கண்காணிப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுச் செலவினங்களில் கூடுதல் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகள், செயல்திறன் ஆகியவற்றை உறுதிசெய்வதன் மூலம், நிதிசார் ஒழுங்குமுறை பராமரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நிர்வாக நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும், நிதிசார் கண்காணிப்பு வழிமுறைகள் பயனுள்ள வகையில் …

Read More »

உலகம் முழுவதும் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மூலம் அங்கீகரிக்கப்பட்ட யோகாவின் நேர்மறையான தாக்கம்: மக்களவைத் தலைவர்

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற 11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா தலைமை தாங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை செயலகம் மற்றும் மாநிலங்களவை செயலக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்கள்  யோகா நெறிமுறையில் பங்கேற்க கூடினர். கூட்டத்தில் உரையாற்றிய திரு பிர்லா, யோகா உடல், மனம் மற்றும் ஆன்மா இடையே நல்லிணக்கத்தை அடைவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும், தனிநபர்களின் …

Read More »

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜோத்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்

மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா ஜூன் 09 (திங்கட்கிழமை) அன்று ஜோத்பூரின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கு  ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிகழ்வில், ஸ்ரீ பிர்லா நிறுவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது விரிவுரை மண்டப வளாகத்தைத் திறந்து வைக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் திரு ராஜேந்திர கெலாட், சமூக சேவகர் திரு  நிம்பராம், புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியும் ஐஐடி ஜோத்பூரின் ஆளுநர் குழுவின் தலைவருமான திரு  ஏ.எஸ். கிரண் குமார், ஐஐடி ஜோத்பூர் இயக்குநர் …

Read More »

வலிமையும் உத்வேகமும் பெற இளைஞர்கள் புத்தகங்களின் பக்கம் திரும்ப வேண்டும்: மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா

மக்கள், குறிப்பாக இளைஞர்கள் வலிமையும் உத்வேகமும் பெற புத்தகங்களை நோக்கி திரும்ப வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார். புகழ்பெற்ற பத்திரிகையாளரும் ராஜஸ்தான் பத்திரிகாவின் தலைமை ஆசிரியருமான திரு குலாப் கோத்தாரி எழுதிய ‘ஸ்ட்ரீஃ தேஹ் சே ஏஜ்’, ‘மைண்ட் பாடி இன்டலெக்ட்’ ஆகிய இரண்டு புத்தகங்களை புதுதில்லி உலக புத்தகக் கண்காட்சி 2025-ல் அவர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புத்தகங்கள் தனிப்பட்ட …

Read More »

காசநோய் இல்லாத பாரதம் பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாக மாற்றுமாறு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா வேண்டுகோள்

‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக  மாற்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் இன்று ‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான நட்பு கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு பிர்லா, காசநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு வெகுஜன விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை முக்கியமானவை என்று கூறினார். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளும் காசநோய் இல்லாதவையாக மாற போட்டியிடும் ‘ஆரோக்கியமான போட்டி’ என்ற உணர்வைத் தூண்டினார். உலக சுகாதார அமைப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க உலகளாவிய இலக்கை நிர்ணயித்துள்ளது, ஆனால் பிரதமர் மோடியின் கீழ், இந்தியா 2025 க்குள் காசநோயை ஒழிக்க அதிக லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் திரு பிர்லா கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா காசநோய் இல்லாத நாடாக மாறுவதை உறுதி செய்ய உறுதியுடன் பணியாற்றுமாறு அவர்களை திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். 20 ஓவர் நட்பு கிரிக்கெட் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த எம்.பி.யுமான திரு அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால் இந்தியாவை காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகர் லெவன் அணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார், மாநிலங்களவை தலைவர் லெவன் அணிக்கு திரு கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். மக்களவை தலைவர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அனுராக் சிங் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Read More »