சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தொடரின் போது அவை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், அனைத்துவிதக் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா இன்று வலியுறுத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மகாராஷ்டிரா சட்டமேலவை உறுப்பினர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், இது பொதுப் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதிலும் அவற்றுக்கு தீர்வு காண்பதிலும் பரந்த கண்ணோட்டத்தை வளர்க்க உதவும் …
Read More »மக்கள் 10 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை அனுபவித்துள்ளனர் – இப்போது அவர்களின் எதிர்பார்ப்பு அதிரித்து உள்ளது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
இளைஞர்கள் தங்களை நம்ப வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குருகிராமில் நடைபெற்ற முதுநிலை மாணவர் சங்கத்தின் 4-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், எல்லாவற்றிலும் கேள்வி கேட்க வேண்டும், என்று கூறினார். நாட்டின் பொருளாதார, தொழில்துறை, வணிக சூழலை ஜனநாயகப்படுத்துவது இளைஞர்கள்தான் என்று அவர் தெரிவித்தார். இப்போது முன்னேற பரம்பரை தேவையில்லை எனவும், …
Read More »கர்நாடகாவில் இரண்டு பேருக்கு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது
கர்நாடகாவில் இரண்டு பேர் ஹியூமன் மெட்டாநியூமோ வைரசால் (எச்.எம்.பி.வி) பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.எம்.ஆர்) கண்டறிந்துள்ளது. நாடு முழுவதும் சுவாச பாதிப்பு நோய்களைக் கண்காணிப்பதற்கான ஐ.சி.எம்.ஆரின் தற்போதைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, பல சுவாச வைரஸ் நோய்க்கிருமிகளுக்காக மேற்கொள்ளப்படும் வழக்கமான கண்காணிப்பு மூலம் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர். எச்.எம்.பி.வி பாதிப்பு ஏற்கனவே இந்தியா உட்பட உலக நாடுகளில் உள்ளதாகவும், எச்.எம்.பி.வி உடன் தொடர்புடைய சுவாச …
Read More »சேவை பெறும் உரிமை ஆணையத்தின் தானியங்கி மேல்முறையீட்டு முறை ஹரியானா மக்களுக்கு சேவை வழங்கலில் புதிய முன்னுதாரணத்தை அமைத்துள்ளது: பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை செயலாளர்
ஹரியானா மாநில அரசுப் பணியாளர் உரிமை ஆணையத்தின் தலைமை ஆணையர் அழைப்பின் பேரில், நிர்வாக சீர்திருத்தங்கள், பொது மக்கள் குறை தீர்ப்புத் துறையின் செயலாளர் திரு வி.சீனிவாஸ் தலைமையிலான மத்திய அரசின் தூதுக்குழு அந்த ஆணையத்தை பார்வையிட்டது. இந்த குழு தடையற்ற சேவை வழங்கல் செயல்முறைகளை ஆய்வு செய்தது. அத்துடன் காணொலி மூலம் மக்கள் கலந்துரையாடல் அமர்வில் கலந்து கொண்டது. ஹரியானாவில் சேவை பெறும் உரிமை ஆணையம், மாநிலத்தில் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை மாற்றியுள்ளது. அறிவிக்கப்பட்ட 422 சேவைகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் வழங்கப்பட்டு வருகின்றன. …
Read More »தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பலை ஆராய, பழமையான ஒயிட் ரானைக் கண்டறியுமாறு பிரதமர் வலியுறுத்தல்
மார்ச் 2025 வரை நடைபெறும் ரான் உற்சவத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் அழைத்துள்ளார். இந்த விழா மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “கட்ச் உங்கள் அனைவருக்காகவும் காத்திருக்கிறது! தற்போது நடைபெற்று வரும் ரான் உற்சவத்தின் போது கட்ச் பகுதியின் அழகிய ஒயிட் ரானின் ( உப்பு சதுப்பு நிலம்) , கண்கவர் கலாச்சாரம் மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றைக் கண்டறிய வாருங்கள். மார்ச் 2025 வரை நடைபெறும் இந்தத் திருவிழா உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’.
Read More »நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகளை மதிக்க வேண்டும்: மாநிலங்களவைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளிக்கு இடையில், நாடாளுமன்ற நடவடிக்கைகளின் நிலை குறித்து மாநிலங்களவை தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கவலை தெரிவித்துள்ளார். “மாண்புமிகு உறுப்பினர்களே என விளித்து உலகநாடுகள் நமது ஜனநாயக நடவடிக்கைகளை கவனித்து வருவதாகவும் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளுக்கு ஏற்படுத்தும் இடையூறுகள் மக்களின் நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் சீர்குலைப்பதாகவும் அவர் கூறினார். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய கடமையை புறந்தள்ளக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டுமென்றும், …
Read More »
Matribhumi Samachar Tamil