அஞ்சல் துறையின் 100 நாள் செயல் திட்டமானது குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் சேவை வழங்குவதை மாற்றியமைப்பதையும் செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது நாடு முழுவதும் 5000 அஞ்சல் சேவை முகாம்களை ஒருங்கிணைத்து அரசின் சேவைகள் நேரடியாக கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் குறிக்கோள், அரசின் சேவைகளை நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கும் கொண்டு செல்வதாகும். எனவே, இது வேலைவாய்ப்பு சார்ந்த திட்டம் அல்ல. மாறாக ஒரு சேவை வழங்கும் திட்டமாகும். 100 நாட்கள் இயக்கத்தின் போது, 16,014 அஞ்சல் சேவை முகாம்கள் நடைபெற்றன. இதில் மொத்தம் 9,31,541 நபர்கள் பங்கேற்றனர். அஞ்சல் ஏற்றுமதி மையத்தின் இணையதளத்தில் 3000 புதிய ஏற்றுமதியாளர்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி ஆவண உதவி, சந்தை தகவல், பார்-குறியீடு லேபிள் அச்சிடுதல் மற்றும் காகிதமற்ற சுங்க அனுமதி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குகிறது. ‘ஒரு மாவட்டம் – ஒரு தயாரிப்பு’ முன்முயற்சியுடன் இணைந்து, இந்தத் திட்டம் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும், பொருளாதார வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கும். 100 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 3400க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்துள்ளனர். மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர். பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
Read More »
Matribhumi Samachar Tamil