மஹாகும்பமேளா 2025-ல் யாத்ரீகர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் மேளா நிர்வாகம் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளது. பொதுவான நோய்கள் முதல் சிறப்பு சிகிச்சைகள் வரை, விரிவான சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. இதுவரை, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளை உலகத் தரமானதாக மாற்ற, கனடா, ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், தில்லி எய்ம்ஸ் மற்றும் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஐ.எம.எஸ். மருத்துவர்களுடன் …
Read More »மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். …
Read More »குடியரசுத் தலைவர் நாளை பிரயாக்ராஜ் செல்கிறார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (2025 பிப்ரவரி 10) உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜ் செல்கிறார். பிரயாக்ராஜுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர், சங்கத்தில் புனித நீராடி வழிபாடு நடத்துவார். அக்ஷய்வத், ஹனுமான் கோவில் ஆகியவற்றில் அவர் வழிபாடு செய்யவுள்ளார். மேலும் டிஜிட்டல் கும்பமேளா அனுபவ மையத்தையும் திருமதி திரௌபதி முர்மு பார்வையிடுவார்.
Read More »பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது. …
Read More »பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு பிரதமர் பிப்ரவரி 5-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு நரேந்திர மோடி பிப்ரவரி 5-ம் தேதி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-க்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், அவர் சங்கமத்தில் புனித நீராடி, கங்கை அன்னைக்கு பிரார்த்தனை செய்வார். பௌஷ் பூர்ணிமாவில் (ஜனவரி 13, 2025) தொடங்கிய மகா கும்பமேளா 2025, உலகின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார ஒன்று கூடலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி மகா சிவராத்திரி வரை தொடரும். இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் தமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, புனித யாத்திரைத் தலங்களில் …
Read More »பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின் போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.
Read More »பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சருடன் தாம் பேசியுள்ளதாகவும், இந்தத் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு மோடி கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் திரு மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; “பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில் நிகழ்ந்த விபத்து மிகவும் வருத்தமளிக்கிறது. குடும்பத்தினரை …
Read More »மஹா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகத்தின் அரங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா – 2025-ல் பார்வையாளர்களிடையே சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுதல் அமைச்சகம் 2025 ஜனவரி 13 முதல் 15 வரை ஓர் அரங்கை அமைத்திருந்தது. நீடித்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு தொழில்நுட்பங்களை இந்த அரங்கு காட்சிப்படுத்தியது. மெய்நிகர் காட்சி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைக்கிள் ஓட்டுதல், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செல்ஃபி போன்ற நவீன தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு இந்த அரங்கிற்கு வருகை புரிந்தவர்களுக்கு கிடைத்தது. இந்த அரங்கிற்கு வருகைபுரிந்தவர்கள் …
Read More »அகில இந்திய வானொலியின் சிறப்பு ‘கும்பவாணி’ அலைவரிசை, ‘கும்ப மங்கல்’ த்வனியை நாளை பிரயாக்ராஜில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்
மகா கும்பமேளா 2025-க்கு என்று சிறப்பு ஏற்பாடாக அகில இந்திய வானொலியின் சிறப்பு கும்பவாணி அலைவரிசையை (எஃப்எம் 103.5 மெகாஹெர்ட்ஸ்) பிரயாக்ராஜில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில், மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் காணொலிக் காட்சி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியின் போது, கும்ப மங்கள் த்வனியையும் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இந்த …
Read More »மியாவாக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் பிரயாக்ராஜில் சுமார் 56,000 சதுர மீட்டர் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன
மஹாகும்பமேளா 2025-க்கு தயாராகும் வகையில், பிரயாக்ராஜ் முழுவதும் பல்வேறு இடங்களில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், தூய காற்று மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக பிரயாக்ராஜ் மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜப்பானிய மியாவாக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி, பல பிராண வாயு ஆக்ஸிஜன் வங்கிகளை நிறுவியது. அவை இப்போது பசுமையான காடுகளாக மாறியுள்ளன. இந்த முயற்சிகள் பசுமையை மேம்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், காற்றின் தரத்தை …
Read More »
Matribhumi Samachar Tamil