நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்று கூறிய பிரதமர், அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது: “நியூ ஆர்லியன்ஸில் நிகழ்ந்த கோழைத்தனமான தீவிரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் உள்ளது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீளும் போது அவர்களுக்கு வலிமையும் ஆறுதலும் கிடைக்கட்டும்”
Read More »விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர்
2025-ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய முடிவுகளின் அடிப்படையில், விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது: “விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாய சகோதர, சகோதரிகள் அனைவரையும் நினைத்து நாடு பெருமிதம் கொள்கிறது. 2025-ம் ஆண்டின் முதலாவது …
Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் மறைவு தமக்கு ஆழ்ந்த மனவேதனையை அளிக்கிறது. சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியான அவர், உலக அமைதி, நல்லிணக்கத்திற்காக அயராது பணியாற்றியவர். இந்தியா-அமெரிக்கா இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பு அளப்பரியது. அவரை …
Read More »“நாடு முழுவதும் வலுவாக ஒன்றுபடட்டும்” என்பதே மகா கும்பமேளாவின் செய்தி: பிரதமர் திரு நரேந்திர மோடி
இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி, மகா கும்பமேளாவின் சிறப்பு அதன் மகிமையில் மட்டுமல்ல, அதன் பன்முகத்தன்மையிலும் உள்ளது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியைக் காண கோடிக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். லட்சக்கணக்கான துறவிகள், ஆயிரக்கணக்கான பாரம்பரியங்கள், நூற்றுக்கணக்கான பிரிவுகள், பல அகாராக்கள், அனைவரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் என அவர் தெரிவித்தார். எங்கும் பாகுபாடு இல்லை, யாரும் பெரியவர், …
Read More »ஆயுர்வேதம் உலக அளவில் பிரபலம் அடைந்து வருவதைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி, மனதின் குரல் 117- வது அத்தியாயத்தில், ஆயுர்வேதத்தின் உலகளாவிய பிரபலத்தை எடுத்துரைத்தார். ஆயுர்வேதம் தொடர்பாக பராகுவேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் எழுச்சியூட்டும் பணிகளை அவர் மேற்கோள் காட்டினார். பிரதமர் கூறுகையில், “தென் அமெரிக்காவில் பராகுவே என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கு வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் இருக்காது. பராகுவேயில் ஒரு அற்புதமான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பராகுவேயில் உள்ள இந்திய தூதரகத்தில், எரிகா ஹூபர் ஆயுர்வேத ஆலோசனைகளை …
Read More »மனதின் குரல் நிகழ்ச்சியின் 117-வது அத்தியாயத்தில், 29.12.2024 அன்று பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று மனதின் குரலில், 2025ஆம் ஆண்டு…… இதோ வந்தே விட்டது, வாயிற்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறது. 2025ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நமது அரசியலமைப்புச்சட்டத்தின் 75ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றது. நம்மனைவருக்கும் இது மிகவும் கௌரவம்மிகு தருணமாகும். நமது அரசியலமைப்புச்சட்ட பிதாமகர்கள் நம்மிடத்தில் ஒப்படைத்திருக்கும் அரசியல்சட்டம், காலத்தின் அனைத்துக் காலகட்டங்களிலும் வெற்றிகரமாக வழிகாட்டியிருக்கிறது. அரசியல் சட்டமானது நம்மனைவருக்கும் பாதை துலக்கும் ஒளிவிளக்காய், வழிகாட்டியாய் விளங்குகிறது. …
Read More »செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமருடன் சந்திப்பு
செஸ் சாம்பியன் குகேஷ் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். அவரது உறுதிப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிய திரு மோடி, அவரது நம்பிக்கை ஊக்கமளிப்பதாகக் கூறினார். இன்றைய உரையாடல் யோகா, தியானத்தின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைப் பற்றி இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தியாவின் பெருமையாக விளங்கும் செஸ் சாம்பியனான குகேஷுடன் ஒரு …
Read More »முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் விடுத்துள்ள இரங்கல் செய்தியின் தமிழாக்கம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜியின் மறைவு எங்கள் இதயங்களை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ஒரு தேசமாக எமக்கு மிகப்பெரிய இழப்பாகும். பிரிவினையின் போது இவ்வளவு இழந்து, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்த பிறகு பாரதத்திற்கு வருவது சாதாரண சாதனை அல்ல. கஷ்டங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி பெரிய உயரங்களை எவ்வாறு அடைவது என்பதற்கு எதிர்கால சந்ததியினருக்கு அவரது வாழ்க்கை ஒரு பாடமாக அமைகிறது. கனிவான …
Read More »ஒசாமு சுசூகி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
உலக வாகனத் தொழில்துறையில் புகழ்பெற்ற ஒசாமு சுசுகி மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஒசாமு சுசூகியின் தொலைநோக்குப் பார்வை உலகளாவிய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ், சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் உலகளாவிய அதிகார மையமாக உருவெடுத்தது. சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு புதுமை, தொழில் விரிவாக்கத்தை மேற்கொண்டது. இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் …
Read More »வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாத்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்
வீர பாலகர் தினத்தையொட்டி சாஹிப்ஜாதேக்களின் இணையற்ற வீரத்தையும், தியாகத்தையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு கூர்ந்தார். அவர்களின் தியாகம் வீரம், ஒருவரின் மதிப்புகள் மீதான உறுதிப்பாட்டிற்கு பிரகாசமான எடுத்துக்காட்டாகும் என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். மாதா குஜ்ரி, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் ஆகியோரின் துணிச்சலையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: “இன்று, வீர பாலகர் தினத்தையொட்டி, சாஹிப்ஜாதேக்களின் …
Read More »
Matribhumi Samachar Tamil