மத்திய அரசு நிறுவனமான இந்தியா அஞ்சல் வங்கி, பிரயாகராஜில் நடைபெறும் மஹாகும்பமேளா-2025-ல் கோடிக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வங்கிச் சேவைகளை வழங்குவதில் பெரும் பங்காற்றி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக ஒன்று கூடலான, மஹாகும்பமேளாவானது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையுடன், இந்திய அஞ்சல் வங்கி, அனைவருக்கும் விரிவான வங்கிச் சேவைகள் கிடைக்க உதவுகிறது. நிதி பரிவர்த்தனைகளின் வசதி மற்றும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மஹாகும்பமேளா முழுவதும் 5 முக்கிய இடங்களில் …
Read More »மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் வழங்க சிறப்புத் திட்டம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 2025-ன் போது பக்தர்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு தானியங்கள் (ரேஷன் பொருட்கள்) வழங்குவது மத்திய அரசின் சிறப்புத் திட்டமாகும். நேஃபெட் (NAFED) எனப்படும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் சார்பில் கோதுமை மாவு, பருப்பு வகைகள், அரிசி, பிற அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. பக்தர்கள் வாட்ஸ்அப் அல்லது போன் அழைப்பு மூலமாக ரேஷன் பொருட்களை வாங்க ஆர்டர் செய்யலாம். …
Read More »மகாகும்பமேளா 2025: 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம் 24 மணி நேரமும், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கப்படுகிறது
பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளாவில் நாடு முழுவதிலுமிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களுக்குத் தூய்மையான குடிநீர் வழங்க பெரும் அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதியில் மொத்தம் 233 குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவை 24 மணி நேரமும் எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகின்றன. இந்தக் குடிநீர் தானியங்கி இயந்திரங்கள் மூலம், யாத்ரீகர்கள் தினமும் தூய்மையான ஆர்ஓ (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) குடிநீரைப் பெறுகிறார்கள். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 …
Read More »பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின் போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.
Read More »சவால்களுக்கு தீர்வு காண கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்கு ‘யோசனை மற்றும் புத்தாக்கம் போட்டியை’ என்.சி.சி தலைமை இயக்குநர் தொடங்கி வைத்தார்
தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால் சிங் இன்று (ஜனவரி 10) புதுதில்லியின் சஃப்தர்ஜங்கில் உள்ள என்.சி.சி கட்டிடத்தில் ‘யோசனை மற்றும் புதிய கண்டுபிடிப்பு போட்டியை’ தொடங்கி வைத்தார். என்.சி.சி குடியரசு தின முகாமில் (ஆர்.டி.சி) முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்தத் தனித்துவமான முயற்சியானது என்.சி.சி. மாணவர்களுக்கு விமர்சன ரீதியாக சிந்திக்கவும் நிஜ உலக சவால்களுக்கு தீர்வுகளை உருவாக்கவும் உதவக்கூடிய கருவிகள் மற்றும் வழிகாட்டுதல்களை …
Read More »பயணிகளுக்கு பாதுகாப்பான, விரைவான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்குவதை ரெயில்வே நோக்கமாகக் கொண்டு நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76% செலவிடுகிறது
நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு விரைவான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை குறைந்த செலவில் வழங்குவது எளிதான காரியம் அல்ல. ஆனால், இந்திய ரயில்வே புவியியல், கலாச்சாரம், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனது பட்ஜெட் ஒதுக்கீட்டில் 76 சதவீதத்தை நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 4 நாட்களில் செலவிட்டுள்ளது. 2025-ம் ஆண்டு ஜனவரி 5 வரை இந்திய ரயில்வேயின் …
Read More »தரமான கல்வியை வழங்கும் வகையில் உயர்கல்வி நிறுவனம் மேம்படுத்தப்பட்டு வருகிறது- திரு தர்மேந்திர பிரதான்
நாட்டில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எளிதான அணுகுமுறை, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உயர்கல்வி நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். 1.கல்வி நிலையங்கள் அதிகரிப்பு உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 2014-15-ல் 51534 ஆக இருந்தது 2022-23-ல் 58643-ஆக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 760-ல் இருந்து 1213-ஆக அதிகரித்துள்ளது. கல்லூரிகள் எண்ணிக்கை 38498-ல் இருந்து 46624 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உயர்கல்வி நிறுவனங்கள்13.8%, பல்கலைக்கழகங்கள் 59.6% மற்றும் கல்லூரிகள் 21.1% அதிகரித்து உள்ளன. 2.மாணவர் சேர்க்கை அதிகரிப்பு 2014-15-ம் ஆண்டில் 3.42 கோடியாக இருந்த மொத்த சேர்க்கை 2022-23-ம் ஆண்டில் 4.46 கோடியாக 30.5% அதிகரித்துள்ளது.
Read More »
Matribhumi Samachar Tamil