Friday, February 13 2026 | 09:02:01 PM
Breaking News

Tag Archives: rare earth permanent magnets

இந்தியாவின் அடுத்த தொழில்நுட்ப பாய்ச்சலுக்கு ஊக்கம் அளிக்கும் அரிய புவி நிரந்தர காந்தங்கள் உற்பத்தி

7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆர்இபிஎம் எனப்படும் அரிய புவி நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் ஒருங்கிணைந்த ஆர்இபிஎம் உற்பத்தி திறனை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டதாகும். உள்நாட்டில் இதன் ஒருங்கிணைந்த உற்பத்திச் சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம், மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள், மின்னணுவியல் சாதனங்கள், விண்வெளிப் பயன்பாடுகள், பாதுகாப்புத் துறை சாதனங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான இந்த வகை காந்தங்களின் உற்பத்தியில் தற்சார்பு அதிகரிக்கும். அரசின் இந்த நடவடிக்கை உலகளாவிய ஆர்இபிஎம் சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய நாடாக நிலைநிறுத்தும். அரிய புவி நிரந்தர காந்தம் (ஆர்இபிஎம்) என்பது வலிமையான காந்த வகைகளில் ஒன்றாகும். அவை சிறிய சாதனங்களில், ஆனால் உயர் செயல்திறன் கொண்ட காந்த சக்திகள் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன . அவற்றின் உயர் காந்த வலிமையும் நிலைத்தன்மையும் பெரிய பயன்களை கொடுக்கின்றன. இந்தியாவில் கணிசமான அளவு அரிய புவி தாதுக்கள் உள்ளன. குறிப்பாக பல கடலோர பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் உள்ள மோனசைட் படிவுகளில் சுமார் 13.15 மில்லியன் டன் மோனசைட் உள்ளது. இதில் 7.23 மில்லியன் டன் அரிய புவி ஆக்சைடுகள் உள்ளன. ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரை மணல், டெரி/சிவப்பு மணல் …

Read More »