ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான 42 புள்ளிவிவர அறிக்கைகளையும், 2024-ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தலின் 14 புள்ளிவிவர அறிக்கைகளையும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தேர்தல் நடைமுறையின் அடித்தளமாக விளங்கும் மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாகும். அதிகபட்ச தகவல்களை வெளிப்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தேர்தல் தொடர்பான தரவுகளை அணுகுதல் ஆகிய அம்சங்கள் அடங்கிய ஆணையத்தின் கொள்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் …
Read More »இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ, டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் நாளை வெளியிடுவார்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், துறையின் செயலாளர் திருமதி லீனா நந்தன் முன்னிலையில் இந்திய வனங்களின் நிலை அறிக்கை 2023-ஐ நாளை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐசிஎஃப்ஆர்இ, எஃப்ஆர்ஐ, ஐஆர்ஓ, பிஎஸ்ஐ போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 1987 முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய வனநில அளவை நிறுவனத்தால் “இந்திய வனங்களின் நிலை அறிக்கை” வெளியிடப்படுகிறது. வன அடர்த்தி வரைபடம், வனநில அளவை நிறுவனத்தின் தேசிய வனப்பட்டியல் ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் வனம் மற்றும் மர வளங்கள் குறித்த முக்கிய தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது. இந்த அறிக்கைத் தொடரில் இது 18-வது அறிக்கையாகும்.
Read More »