அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடியை, வாஷிங்டனில் நேற்று அதிபர் டொனால்ட் ஜே.டிரம்ப் வரவேற்றார். சுதந்திரமான, சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள், பன்முகத்துவத்தை மதிக்கும் இறையாண்மை மற்றும் உலகின் பெரிய ஜனநாயக நாடுகளின் தலைவர்களான, அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி ஆகியோர் இந்தியா-அமெரிக்காவின் உறுதியான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையின் வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு நாட்டு மக்களிடையேயான நம்பிக்கை, நல்லெண்ணம் மற்றும் வலுவான ஈடுபாடுகளையும் அவர்கள் உறுதிபடுத்தினர். இரு நாடுகளிடையே “21-ம் நூற்றாண்டிற்கான ராணுவ கூட்டாண்மைக்கான வாய்ப்புகள், விரைவான வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவித்தல்” குறித்து அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி புதிய முயற்சியைத் தொடங்கினர். ஒத்துழைப்பில் மாற்றத்தை …
Read More »தேசிய தொலைபேசி எண்ணை மாற்றியமைக்கும் திட்டத்திற்கான பரிந்துரையை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது
தொலைபேசி எண்ணை மாற்றியமைப்பது தொடர்பான தேசிய திட்டத்திற்கான பரிந்துரைகளை இந்திய தொலைத்தொடர்பு ஓழுங்குமுறை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தொலைபேசி பயனாளர்கள், சேவை வழங்குநர்கள், கட்டமைப்பு கூறுகள், சாதனங்கள் மற்றும் அங்கீகார நிறுவனம் ஆகியவை குறித்த தனித்துவ அடையாளத்தைப் பயன்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு அடையாள குறியீடுகளின் அவசியத்தை இந்தப் பரிந்துரை குறிப்பிடுகிறது. தற்போது டிஜிட்டல் முறையிலான ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத் தொடர்பு சேவைகள் மூலம் லட்சக்கணக்கான தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் பயனாளர்களின் தேவைகளைப் …
Read More »சட்டமுறை எடையளவு (இந்திய நிலையான நேரம்) விதிகள், 2025-ன் வரைவு அறிக்கையை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது
‘ஒரே நாடு, ஒரே நேரம்’ என்ற முறையை இலக்காகக் கொண்டு, துல்லியமான நேரத்தை நாடு முழுவதிலும் கடைபிடிக்கும் வகையில் மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் துறையானது தேசிய இயற்பியல் ஆய்வகம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய நிலையான நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐந்து எடையளவு தொடர்பான சட்டமுறை ஆய்வகங்களிலிருந்து நேரத்தை கணக்கிடும் முறைக்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் …
Read More »நான்கு நகரங்களில் நடத்தப்பட்ட மொபைல் சேவைகள் குறித்த அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது
புதுதில்லி, ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), அகமதுநகர் (மகாராஷ்டிரா) , ஹைதராபாத் (ஆந்திரப் பிரதேசம்) ஆகிய நான்கு நகரங்களில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது அதிகாரப்பூர்வ முகமை மூலம் வெளிப்படையான சோதனையை நடத்தியது. குரல், தரவு சேவைகளுக்கான செல்லுலார் மொபைல் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்களின் சேவை தொடர்பான தரத்தை மதிப்பீடு செய்வதற்கு இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் போன்ற நிறுவனங்களின் செயல்திறன், சேவைகளுக்கான உரிமம் பெற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும் …
Read More »15-வது நிதிக்குழு பரிந்துரை: ராஜஸ்தானுக்கு ரூ.614 கோடி, ஒடிசாவுக்கு ரூ.455 கோடி விடுவிப்பு
ராஜஸ்தான், ஒடிசாவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு (XV FC) பரிந்துரை ஒதுக்கீடுகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை, 2024-25 நிதியாண்டின் இரண்டாவது தவணையான நிபந்தனையற்ற மானியங்களின் இரண்டாவது தவணை ரூ.560.63 கோடியும், 2024-25 நிதியாண்டிற்கான நிபந்தனையற்ற நிதியின் முதல் தவணையின் நிறுத்தி வைக்கப்பட்ட தொகையான ரூ.53.4123 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் 10,105 தகுதியான கிராம ஊராட்சிகள், 315 தகுதியான வட்டார ஊராட்சிகள், 20 மாவட்ட ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். ஒடிசாவில் உள்ள ஊரக உள்ளாட்சி …
Read More »
Matribhumi Samachar Tamil