கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சல் மற்றும் மன உறுதியை நினைவு கூர்ந்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது: இன்று, கோவா விடுதலையான தினம். இத்தினத்தில், விடுதலைக்காக தங்களைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் அசாத்திய துணிச்சலையும் மன உறுதியையும் நினைவு கூர்கிறோம். அவர்களின் வீரம் கோவாவின் முன்னேற்றத்திற்காகவும், மாநில மக்களின் வளமைக்காகவும் தொடர்ந்து பணியாற்ற எங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்துள்ளது.
Read More »அந்தமான் நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்: பிரதமர்
அந்தமான், நிக்கோபாரில் உள்ள தீவுகளுக்கு நமது நாயகர்களின் பெயர்களை சூட்டுவது, அவர்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவையை வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூர்வதை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்தார். தங்களின் வேர்களோடு இணைந்திருக்கும் நாடுகள், வளர்ச்சியிலும் தேச நிர்மாணத்திலும் முன்னேறிச் செல்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஷிவ் அரூரின் பதிவுக்கு பதிலளித்து திரு மோடி கூறியிருப்பதாவது: “அந்தமான், …
Read More »
Matribhumi Samachar Tamil