ஆசிய விதை மாநாடு 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். அப்போது ஆசிய விதை மாநாடு 2025-க்கான இலட்சினையும் வெளியிடப்பட்டது. தரமான விதைகள் மூலம் செழுமைக்கான விதைகளை விதைத்தல் என்பது இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருளாகும், இந்நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், …
Read More »கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவன விஞ்ஞானிகளுக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது – மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் வழங்கினார்
கோயம்புத்தூரில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் திரு கே ஹரி, திரு புத்ரபிரதாப், திரு பி முரளி, திரு ரமேஷ் சுந்தர், திரு வி சிங்காரவேலு ஆகிய 5 பேருக்கு தேசிய வேளாண் அறிவியல் விருது வழங்கப்பட்டுள்ளது. புதுதில்லியில், நேற்று (16.07.2025) நடைபெற்ற இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் 97-வது நிறுவன தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்கு மத்திய வேளாண் …
Read More »தன தானிய வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் அறிக்கை வெளியிட்டார்
‘பிரதமரின் தன தானிய வேளாண்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அமைச்சரவையின் முக்கிய முடிவு குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றினார். உணவு தானிய உற்பத்தி 40% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்றும், பழங்கள், பால் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியும் வரலாற்று வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், மாநிலங்களுக்கு இடையே, ஒரே மாநிலத்திற்குள் உள்ள மாவட்டங்களுக்கு …
Read More »உரங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான இயக்கத்தைத் தொடங்க வேண்டும் – மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் கடிதம்
போலியான, தரமற்ற உரங்கள் பிரச்சினை தொடர்பாக உடனடியாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். போலி உரங்களின் விற்பனை, மானிய விலை உரங்களின் கறுப்புச் சந்தை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்தக் கடிதத்தை அமைச்சர் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், மத்திய அமைச்சர், விவசாயம் இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும், விவசாயிகளின் வருமானத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய, அவர்களுக்கு சரியான நேரத்தில், மலிவு விலையில், தரமான உரங்களை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். 1955-ம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வரும் உர (கட்டுப்பாட்டு) ஆணை, 1985-ன் கீழ் போலி அல்லது தரமற்ற உரங்களை விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் மாநிலங்களுக்கு பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்: * தேவைப்படும் இடங்களில் உரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்வது மாநிலங்களின் பொறுப்பாகும். எனவே, கருப்புச் சந்தை, அதிக விலை நிர்ணயம், மானிய விலை உரங்களை திசை திருப்புதல் போன்ற நடவடிக்கைகளை மாநிலங்கள் கண்டிப்பாக கண்காணித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். * உர உற்பத்தியையும் விற்பனையையும் தொடர்ந்து கண்காணித்து, உரிய சோதனைகள் மூலம் போலியான, தரமற்ற உரங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். * வழக்கமான உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி-தூண்டுதல் தயாரிப்புகளை கட்டாயமாக இணைத்து டேக் செய்வது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். * முறைகேட்டில் ஈடுபடுபவர்களின் உர விற்பனை உரிமங்களை ரத்து செய்தல், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். * கண்காணிப்பு செயல்பாட்டில் விவசாயிகளையும் விவசாயிகள் குழுக்களையும் ஈடுபடுத்த வேண்டும். உண்மையான மற்றும் போலியான பொருட்களை அடையாளம் காண்பது குறித்து விவசாயிகளுக்கு கல்வி கற்பிப்பதற்கான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். போலியான, தரமற்ற உரங்களால் ஏற்படும் பிரச்சினைகளை அகற்ற, இந்த வழிகாட்டுதல்களின்படி மாநிலம் தழுவிய இயக்கத்தைத் தொடங்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் வலியுறுத்தியுள்ளார். மாநில அளவில் இந்தப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும்போது விவசாயிகளின் நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஏற்படுத்த முடியும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Read More »பருத்தி உற்பத்தி குறித்த சிறப்பு கூட்டம் கோவையில் ஜூலை 11 இல் நடைபெறும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் காணொளி செய்தியில் அறிவிப்பு
பருத்தி உற்பத்தி, முக்கிய பயிர் வகைகள் குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக, ஜூலை 11-ம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற உள்ள சிறப்பு கூட்டம் பற்றிய அறிவிப்பை காணொலி செய்தி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று வெளியிட்டார். இது தொடர்பாக விவசாயிகள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில் கூறியிருப்பதாவது: “பருத்தி …
Read More »வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களை வழிநடத்த வேண்டும் – திரு சிவராஜ் சிங் சௌகான்
மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், மகாராஷ்டிராவின் புனே அருகே நாராயண்கோன் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் (KVK) விவசாயிகளுடன் இன்று (03.06.2025) கலந்துரையாடினார். முன்னதாக, மத்திய அமைச்சர் நாராயண்கோன் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு, தக்காளி சந்தை, உள்ளூர் பண்ணை வயல்கள், குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து அவர் பார்வையிட்டார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் திரு சௌகான், வேளாண் விஞ்ஞானிகள் வயல்களுக்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தின் நோக்கங்களை எடுத்துரைத்த அவர், விவசாயத் துறையில் வளர்ச்சியும், விவசாயிகளின் செழிப்பும் இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க முடியாது என்று கூறினார். …
Read More »மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்தார்
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு இன்று புதுதில்லியில் உள்ள கிரிஷி பவனில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகானை சந்தித்து ஆந்திராவில் மிளகாய் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதித்தார். இந்த சந்திப்பின்போது வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு ராம்மோகன் நாயுடு, ஆந்திர அரசு மிளகாயை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பல்வேறு …
Read More »சமையல் எண்ணெய்களுக்கான தேசிய இயக்கம் – பனை எண்ணெய் திட்டத்தின் கீழ் முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் வலியுறுத்தல்
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், தேசிய சமையல் எண்ணெய்கள் இயக்கம் -பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளார். சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவது, இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது போன்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் இந்த சமையல் எண்ணெய்களுக்கான இயக்கம் செயல்படுகிறது. உள்நாட்டு சமையல் எண்ணெய் …
Read More »உலகின் உணவு உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுக்கும்: திரு சிவராஜ் சிங் சவுகான்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 18 சதவீதமாக உள்ளது. குறிப்பாக கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், நாட்டின் வேளாண் துறை பிற நாடுகளைக் காட்டிலும் வலுவானதாக இருந்தது என்பதை உலக நாடுகள் அறிந்து கொண்டுள்ளன. இந்தத் துறையை வலுப்படுத்த மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை உலகின் உணவு உற்பத்தி மையமாக உருவாக்குவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் …
Read More »மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை …
Read More »
Matribhumi Samachar Tamil