Saturday, December 06 2025 | 03:13:27 AM
Breaking News

Tag Archives: Tamil Nadu

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் இரண்டாம் கட்டம் – தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடி படிவங்கள் விநியோகம்

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில், தமிழ்நாட்டில் இதுவரை 6,00,54,300 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது 93.67 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,14,583 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு இன்று (16.11.2025) மாலை 3 மணி வரை 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்குமாறு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, …

Read More »

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 38 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள்: மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன் சென்னையில் பேட்டி

தமிழ்நாட்டு மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ஏற்று, நாளை (18.08.2025) முதல் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் 38 ரயில்கள், கூடுதல் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று (17 ஆகஸ்ட் 2025) செய்தியாளர்களிடையே பேசிய அவர், விரைவு ரயில்கள், அதிவிரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்கள் கூடுதல் நிலையங்களில் நின்று செல்ல …

Read More »

தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களில் ஜூலை மாதத்தில் நுகர்வோர் வழக்குகளுக்கு 100 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது

நாட்டில் நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் குறிப்பிடத்தக்க சாதனையாக, பத்து மாநில நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையத்துடன் (NCDRC) இணைந்து,  2025 ஜூலை மாதத்தில் 100 சதவீதத்துக்கும் அதிகமான தீர்வு விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் தரவுகளின்படி, நுகர்வோர் ஆணயங்கள், தேசிய நுகர்வோர் தகராறு தீர்வுக்கான ஆணையம், 122 சதவீத தீர்வு விகிதத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு 277 சதவீதத்தையும், ராஜஸ்தான் …

Read More »

தமிழ்நாட்டின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசின் நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு குறைதீர் முகாம்கள் நடைபெறுகின்றன

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் சமூக மேம்பாட்டுக்கான பல்வேறு நிதிசார் திட்டங்கள் குறித்த சிறப்பு குறைதீர் முகாம்கள் நடந்துவருகின்றன. ஜூலை 1 முதல் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் பிரதமரின் ஜன் தன் வங்கிக் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரும் வகையில் திருத்தங்கள் செய்வது, பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம், பிரதமரின் சுரக்‌ஷா பீமா திட்டம், …

Read More »

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். புனித …

Read More »

தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க 1 கோடியே 53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன

வேளாண் உற்பத்தி மற்றும் மண்வள மேலாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக சமநிலையைப் பராமரிப்பது மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து விவசாயிகளுக்கும் மண் ஆரோக்கியம் மற்றும் மண்வளம் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சக இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி. என். …

Read More »

தமிழ்நாட்டில் சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு:மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்

தமிழ்நாட்டில்  சுற்றுலா மேம்பாட்டுக்கு சென்ற நிதியாண்டில் ரூ.242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலா அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் திரு ஜி.செல்வம், திரு சி என் அண்ணாதுரை ஆகியோரின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், ராமேஸ்வரம் தீவு, தஞ்சாவூர், தேவலா (நீலகிரி மாவட்டம்), மாமல்லபுரம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று …

Read More »

நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் 44-வது நிறுவக தின விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.  இதில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார். இவ்விழாவில், முக்கிய உரையாற்றிய அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் கணினி மையமாக நபார்டு மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டினார். …

Read More »

தமிழ்நாட்டில் பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ரூ.1853 கோடி மதிப்பிலான 4-வழி தேசிய நெடுஞ்சாலை (NH-87) அமைக்கும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில்  பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 46.7 கி.மீ தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் ரூ.1,853 கோடி செலவில் கலப்பின ஆண்டுத்தொகை மாதிரியில்  அமைக்கப்பட உள்ளது. தற்போது, மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி இடையிலான 2-வழி தேசிய நெடுஞ்சாலை எண் 87,  அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த நான்கு வழிச் சாலை …

Read More »

தமிழ்நாடு ஆளுநர் 16 வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மை பாரத் (என்ஒய்கேஎஸ்) உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து 16 வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை சென்னையில் நடத்துகின்றன. இந்த முகாமினை இன்று (08/02/2015) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார். இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர்,  ஜார்க்கண்ட் …

Read More »