Saturday, December 06 2025 | 12:38:56 PM
Breaking News

Tag Archives: Tamil Nadu

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் எஃப்எஸ்எஸ்ஏஐ தலைமைச் செயல் அதிகாரி ஆலோசனை: மாநிலத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுப்பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தல்

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு ஆணையர் திரு லால்வேனா மற்றும் அதிகாரிகளுடன் இந்திய உணவுப் பாதுகாப்பு  மற்றும் தர நிர்ணய ஆணைய (எஃப்எஸ்எஸ்ஏஐ) தலைமைச் செயல் அதிகாரி திரு ஜி. கமலா வர்தன ராவ் இன்று ஆலோசனை நடத்தினார்.  தமிழகத்தில் உணவு நிறுவனங்களில் ஆய்வுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், உணவு பரிசோதனை ஆய்வகங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போது அவர் வலியுறுத்தினார். ஆரோக்கியமான, சுகாதாரமான உணவக மையங்களை (ஃபுட் ஸ்ட்ரீட்) …

Read More »

குடியரசுத் தலைவரின் அழைப்பிதழ்களை வழங்குவதில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் பங்களிப்பு

தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில்  சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள்,  அரசுத் திட்டத்தின்  பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும். அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும்  நோக்கமாகக் …

Read More »

புள்ளியியல் நடைமுறைகளை வலுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவி – தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பணிகளை நிறைவு செய்துள்ளன

நம்பகமான அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை சேகரித்தல், தொகுத்தல், வெளியிடுதல் ஆகியவற்றில் மாநிலங்களின் திறன்களையும் செயல்பாடுகளையும் வலுப்படுத்த ‘புள்ளியியல் வலுப்படுத்துதலுக்கான ஆதரவு நடைமுறை’ என்ற மத்திய அரசின் துணைத் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு புள்ளியியல் – திட்ட அமலாக்க அமைச்சகம் மானிய உதவி வழங்குகிறது. இந்த துணைத் திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவிலான புள்ளிவிவரங்களைத் தொகுத்தல், ஒருங்கிணைந்த மாநில தரவுத்தளங்களை உருவாக்குதல், தரவு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான ஆய்வுகள் …

Read More »

தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு அருங்காட்சியகங்களுக்கான மானியத் திட்டத்தின் கீழ் அதிக நிதி ஒதுக்கீடு

மண்டல, மாநில, மாவட்ட அளவில் மத்திய அரசு, மாநில அரசுகள், சங்கங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் ஆகியவற்றால் புதிய அருங்காட்சியகங்கள் அமைக்க இத்திட்டத்தின் கீழ் உதவி வழங்கப்படுகிறது.  தற்போதுள்ள அருங்காட்சியகங்களை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் உதவி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களில் உள்ள கலைப் பொருட்களை டிஜிட்டல் மயமாக்கி, அவை தொடர்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், அருங்காட்சியக வல்லுநர்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கும் இந்த உதவி வழங்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அதாவது 2019-2024 ஆம் ஆண்டு …

Read More »

தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சட்டவிரோதமாக இணைய அடிமைகளாக கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயன்ற முகவரின் முயற்சி முறியடிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு இணைய அடிமைகளாக அனுப்ப முயன்ற சட்டவிரோத முகவரின் முயற்சியை சென்னையில் உள்ள குடியேற்ற பாதுகாவலர், தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முறியடிக்கப்பட்டது. சட்டவிரோத முகவரும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்து பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் …

Read More »