பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், சங்கமத்தின் புனித பூமியான பிரயாக்ராஜுக்கு பக்தியுடன் தலைவணங்கி, மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட துறவிகள், சாதுக்களுக்கு மரியாதை செலுத்தினார். தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் மகா கும்பமேளாவை மாபெரும் வெற்றியாக்கிய ஊழியர்கள், தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு திரு மோடி நன்றி தெரிவித்தார். மகா கும்பமேளாவின் பிரம்மாண்டம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 45 நாட்கள் நீடிக்கும் மகா …
Read More »டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜில் …
Read More »