குடியரசுத் துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் , தில்லி சட்டமன்றத்தில் நடைபெற்ற ‘அரசியல் சாசன தின’ கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். திரு. வித்தல்பாய் படேல் இந்தியாவின் முதல் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 100 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், இந்தியாவின் சட்டமன்றப் பயணம் குறித்த சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். குடியரசுத் துணைத்தலைவர் உரையாற்றுகையில், இந்திய அரசியலமைப்பை ஒரு ‘உயிருள்ள ஆவணம்’ என்று கூறினார், இது நாட்டின் ஜனநாயகப் …
Read More »பழங்குடியினர் நல அமைச்சகத்தின் திட்டம் மற்றும் சாதனைகள் குறித்து குடியரசுத் துணைத்தலைவர் கேட்டறிந்தார்
மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் குடியரசுத் துணைத் தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து, பழங்குடியின மக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக விளக்கினார். இந்தச் சந்திப்பின்போது, பழங்குடியின உரிமைகளைப் பாதுகாப்பது, கல்வி மற்றும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவது, பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் மற்றும் கலாச்சாரத்துக்கு புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், …
Read More »தெலுங்கு கங்கைக் கால்வாயைப் புத்துயிர் பெறச் செய்து, சென்னைக்கு குடிநீர் கிடைக்கச் செய்ததில் ஸ்ரீ சத்ய சாய்பாபா முக்கியப் பங்காற்றினார் : குடியரசுத் துணைத்தலைவர்
ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (23.11.2025) கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சத்ய சாய் பாபாவை கடவுளின் சிறந்த தூதர் என்றும் அமைதி, அன்பு, தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் அடையாளம் என்றும் கூறினார். அவரது போதனைகள் சாதி, மதம், வர்க்கம் என அனைத்து தடைகளையும் தாண்டியது என்று குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார். அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் என்பதே பாபாவின் கொள்கை என்று அவர் கூறினார். திருவள்ளுவரின் ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டிய, குடியரசுத் துணைத்தலைவர், ஸ்ரீ சத்ய சாய்பாபா, தமது முழு வாழ்க்கையையும் மனிதகுலத்தை நேசிப்பதற்கும் சேவை செய்வதற்கும் அர்ப்பணித்து காலத்தால் அழியாத நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். உண்மை, நீதி, அமைதி, அன்பு, அகிம்சை ஆகியவற்றில் வேரூன்றிய பாபாவின் போதனைகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத்தலைவர், சிறந்த, முற்போக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு இந்த மதிப்புகள் அவசியமானவை என்று கூறினார். முரண்பாட்டை நல்லிணக்கத்தாலும், சுயநலத்தை தியாகத்தாலும் மாற்ற வேண்டும் என்ற பாபாவின் அறிவுரையை அவர் சுட்டிக் காட்டினார். ஸ்ரீ சத்ய சாய் அறக்கட்டளையின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைத்த அவர், சுகாதாரம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றில் அதன் விரிவான முயற்சிகளைப் பாராட்டினார். தொலைதூர சமூகங்களுக்கு முக்கியமான உயிர்நாடியாக இந்த அறக்கட்டளையின் நடமாடும் கிராமப்புற சுகாதார சேவைகள் உள்ளன என்று அவர் பாராட்டினார். உலகத்தரம் வாய்ந்த, கல்வியை கட்டணமில்லாமல் வழங்குவதற்காக அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களையும் அவர் பாராட்டினார். சென்னைக்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தெலுங்கு கங்கை கால்வாயை புத்துயிர் பெறச் செய்த ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் முக்கிய பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார். இது தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்கக் கூடிய சிறந்த சேவை என்று அவர் குறிப்பிட்டார். பாபாவின் அனைத்து பக்தர்களும் மக்களும் அவரது மரபை, தங்கள் செயல்பாடுகள் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதா கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இந்த விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளையும் குடியரசுத் துணைக்தலைவர் கண்டுகளித்தார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என். சந்திரபாபு நாயுடு, திரிபுரா ஆளுநர் திரு என். இந்திரசேனா ரெட்டி, தெலங்கானா முதலமைச்சர் திரு ஏ. ரேவந்த் ரெட்டி, ஆந்திரப் பிரதேச அரசின் மின்னணுவியல் துறை அமைச்சர் திரு நாரா லோகேஷ், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு சேகர் பாபு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு ஆர்.ஜே. ரத்னாகர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »பயிற்சி மையங்கள் இளைஞர்களை அச்சுறுத்தும் மையங்களாக மாறிவிட்டன: குடியரசு துணைத்தலைவர்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் இன்று, “ காளான்களைப் போல பெருகி வரும் பயிற்சி மையங்கள், நமது எதிர்காலமான நமது இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கவலைக்குரிய இந்தத் தீமையை நாம் அகற்ற வேண்டும். நமது கல்வி இவ்வளவு கறைபடுவதையும் களங்கப்படுத்தப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது” என்று கூறினார். ராஜஸ்தானில் உள்ள கோட்டாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய …
Read More »குறுகிய, சுயநல இலக்கு வேண்டாம் – சமூகத்திற்காக, மனிதகுலத்திற்காக, தேசத்திற்காக இலக்கை நிர்ணயுங்கள் : குடியரசு துணைத்தலைவர்
குறுகிய சுயநல இலக்கை கைவிட்டு, சமூகத்திற்காக, மனிதகுலத்திற்காக, தேசத்திற்காக ஒரு இலக்கைக் நிர்ணயித்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் அறிவுறுத்தியுள்ளார். சமூகத்திற்காக உழைத்தவர்கள், சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள், சமூகத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை மட்டுமே, இன்றும் நாம் நினைவில் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியின் 156-வது நிறுவுனர் தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எப்போதும் தேசத்திற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தேசியவாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார். 5,000 ஆண்டுக்கால …
Read More »அவசரநிலை பிரகடனம் என்பது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல- குடியரசு துணைத்தலைவர்
50 ஆண்டுகளுக்கு முன் இந்த நாள் மிகவும் பழமையான, மிகப்பெரிய, துடிப்புமிக்க ஜனநாயகம் பிரச்சனைக்கு ஆட்பட்டது. அது ஜனநாயகத்தை அழிக்கும் பூகம்பத்திற்கு சற்றும் குறைவானதல்ல. அதுதான் அவசர நிலை பிரகடனம். அந்த இரவு இருளானது. அமைச்சரவை ஓரம் கட்டப்பட்டது. உயர்நீதி மன்றத்தின் எதிர்மறை உத்தரவை எதிர்கொண்ட அன்றைய பிரதமர் சொந்த ஆதாயத்திற்காக ஒட்டுமொத்த தேசத்தையும் புறக்கணித்தார். அரசியலமைப்பை நசுக்கிய குடியரசுத் தலைவர் அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து சுமார் …
Read More »‘ஒரே அரசியல் சாசனம், ஒரே அடையாளச் சின்னம், ஒரே தலைவர்’ — டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் அழைப்பை நினைவு கூர்தல்: அவரது தியாக தினத்தன்று குடியரசு துணைத் தலைவர் புகழாரம்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் இன்று டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினத்தையொட்டி “நினைவு தினம்) அவருக்கு மரியாதை செலுத்தினார், “நமது தேசத்தின் வரலாற்றில் இது ஒரு மகத்தான நாள். நமது மண்ணின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவரான, டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியின் தியாக தினம் இன்று. அவர் ஒரு முழக்கத்தை வழங்கினார். ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஒரே அரசியல் சாசனம், …
Read More »தேசியவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள், அரசியல் கட்சிகள் மற்றும் நலன்களுக்கு அப்பாற்பட்டவை – அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து குடியரசு துணைத்தலைவர்
“ஆயுஷ்மான் பாரத் என்பது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் போன்ற வடிவங்களில் நமக்கு அதிக மனித வளங்கள் தேவை என்பதைக் குறிக்கிறது. நமக்கு அதிக நோயறிதல் மையங்கள், மருந்துகளுக்கான விற்பனை நிலையங்கள், அதிக ஆராய்ச்சி தேவை. பொது மற்றும் தனியார் துறைகளில் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் உருவாக வேண்டும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். புதுச்சேரி ஜிப்மரில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடும் போது, ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “நாட்டின் ஆரோக்கியம், வளர்ச்சிக்கு …
Read More »குடியரசு துணைத் தலைவர் பிப்ரவரி 23 அன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார்
குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், பிப்ரவரி 23 அன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்ப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக. குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்கிறார். भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक …
Read More »கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதையாகும்: குடியரசுத் துணைத் தலைவர்
மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “தாம் ஒரு விவசாயியின் மகன் என்றும், விவசாயியின் மகன் எப்பொழுதும் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வான் என்றும் கூறினார். மேலும், “இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது, கிராமப்புற அமைப்பு நாட்டின் முதுகெலும்பாகச் …
Read More »
Matribhumi Samachar Tamil