பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …
Read More »ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் குடியரசுத் தலைவர் டிசம்பர் 17 முதல் 21 வரை பயணம் மேற்கொள்கிறார்
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2024 டிசம்பர் 17 முதல் 21 வரை ஆந்திரப்பிரதேசம், தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார் . இந்த பயணத்தின்போது, செகந்திராபாத்தில் உள்ள போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் தங்குகிறார். டிசம்பர் 17 அன்று ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார். டிசம்பர் 18 அன்று, செகந்திராபாத்தின் போலாரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார் . டிசம்பர் 20 அன்று, செகந்திராபாத்தில் உள்ள பாதுகாப்பு மேலாண்மை கல்லூரிக்கு குடியரசுத் தலைவரின் கொடிகளை குடியரசுத் தலைவர் வழங்குவார். அன்று மாலை குடியரசுத் தலைவர் நிலையத்தில் மாநிலத்தின் பிரமுகர்கள், முக்கிய நபர்கள், கல்வியாளர்கள் ஆகியோருக்கு வரவேற்பு …
Read More »நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் இந்திய பயணத்தின் வெற்றிகரமான முடிவு
2024 டிசம்பர் 11 முதல் 14 வரை நேபாள ராணுவத் தளபதி சுப்ரபால் ஜனசேவஸ்ரீ ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல் இந்தியாவுக்கு வருகை தந்தது, நேபாள ராணுவத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இரு தரப்பிலும் மூத்த தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான முக்கிய ஈடுபாடுகளைக் கண்ட இந்தப் பயணம், பாதுகாப்பு நலன்களின் பகுதிகளில் மேம்பட்ட இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தமது பயணத்தின் போது, ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், இந்திய ராணுவத்தின் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியுடன் தொடர்ச்சியான பயனுள்ள விவாதங்களில் ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரு நாட்டு ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, ஆழப்படுத்துவது குறித்து இந்த பேச்சுவார்த்தை கவனம் செலுத்தியது. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜீத் தோவல் உள்ளிட்ட பலருடன் அவர் பேச்சு நடத்தினார். ஜெனரல் அசோக் ராஜ் சிக்டலின் வருகை இந்திய மற்றும் நேபாள ராணுவங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேம்படுத்துவதில் ஒரு மகத்தான வெற்றியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலே கோடிட்டுக் காட்டப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள், இரு ராணுவங்களுக்கும் இடையே ஆழமான வேரூன்றிய பிணைப்பை வலுப்படுத்துவதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
Read More »கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி டிசம்பர் 15 முதல் 18 வரை நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவரது இந்தப் பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும். இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீன் (ஓய்வு), இந்தோனேசிய ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் அகஸ் சுபியான்டோ, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி உள்ளிட்ட உயர்மட்ட …
Read More »டிசம்பர் 13 அன்று பிரதமர் உத்தரப்பிரதேசம் பயணம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 13 அன்று உத்தரப்பிரதேசத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். பிரயாக்ராஜ் செல்லும் அவர், நண்பகல் 12.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு, நண்பகல் 12.40 மணியளவில், அங்குள்ள தல விருட்சத்தில் பிரதமர் பூஜை செய்கிறார். அதைத் தொடர்ந்து ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில், மகா கும்பமேளா நடைபெறும் இடத்தைப் பார்வையிடுகிறார். பிற்பகல் 2 மணியளவில், பிரயாக்ராஜில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ரூ.5500 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். பிரயாக்ராஜில் …
Read More »