புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்: 1. இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தோனேசியாவின் பகம்லா இடையே கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (புதுப்பித்தல்) 3. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் …
Read More »தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் டிஜிட்டல் கண்காட்சி மகா கும்பமேளாவில் இன்று தொடங்கியது; முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்
பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் உள்ள கண்காட்சி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மக்களின் பங்கேற்புடன் கூடிய பொது நலன் சார்ந்த திட்டங்கள், கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தது. கண்காட்சியின் முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். திரிவேணி சங்கமம் செல்லும் வழியில் உள்ள கண்காட்சி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்காட்சி …
Read More »பிரதமர் ஜனவரி 15 அன்று மகாராஷ்டிராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 15 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3:30 மணியளவில், நவி மும்பையின் கார்கரில் இஸ்கான் கோயிலை அவர் திறந்து வைக்கிறார். பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை …
Read More »ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் ஜனவரி 8, 9 ஆகிய நாட்களில் பிரதமர் பயணம்
ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்க ளில் 2025 ஜனவரி 8, 9 ஆகிய இரண்டு நாட்கள் பிரதமர் திரு நரேந்திர மோடி பயணம் மேற்கொள்கிறார். நீடித்த வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், ஜனவரி 8-ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். ஜனவரி 9 அன்று காலை …
Read More »குடியரசுத் துணைத் தலைவர் ஜம்மு பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று ஒரு நாள் பயணமாக ஜம்மு (ஜம்மு & காஷ்மீர்) செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, மாத்ரிகா அரங்கத்தில் எஸ்.எம்.வி.டி.யு வளாகத்தில் நடைபெறும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் பங்கேற்கிறார். மாதா வைஷ்ணோ தேவி கோயில் மற்றும் பைரோன் பாபா மந்திர் ஆகியவற்றிற்கும் குடியரசுத் துணைத் தலைவர் …
Read More »குடியரசு துணைத்தலைவர் 2024 டிசம்பர் 25 & 26 தேதிகளில் மேடக், ஐதராபாத் பயணம்
குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024 டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் மேடக், ஐதராபாத் (தெலுங்கானா) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் தமது பயணத்தின்போது, தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம், துனிகியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் உச்சி மாநாட்டிற்கு தலைமை தாங்குவார்.
Read More »ஒப்பந்தங்களின் பட்டியல்: பிரதமரின் குவைத் பயணம் (டிசம்பர் 21-22, 2024)
வ.எண் புரிந்துணர்வு ஒப்பந்தம்/உடன்படிக்கை குறிக்கோள் 01 பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் குவைத் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை நிறுவனப்படுத்தும். பயிற்சி, பணியாளர்கள் மற்றும் நிபுணர்கள் பரிமாற்றம், கூட்டு பயிற்சிகள், பாதுகாப்பு தொழில்துறையில் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஒத்துழைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சங்களாகும். 02 இந்தியா மற்றும் குவைத் இடையே 2025-2029 ஆண்டுகளில் கலாச்சார பரிமாற்ற திட்டம் . கலை, இசை, நடனம், இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் கலாச்சார பரிமாற்றங்கள், கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பு, கலாச்சாரத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் விழாக்களை ஏற்பாடு செய்தல் ஆகியவற்றிற்கு கலாச்சார பரிமாற்ற திட்டம் வழிவகுக்கும். 03 விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பைச் செயல்படுத்துவதற்கான திட்டம் (2025-2028) இந்தியா மற்றும் குவைத் இடையேயான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், விளையாட்டுத் தலைவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது, விளையாட்டுத் துறையில் நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களில் பங்கேற்பது, விளையாட்டு மருத்துவம், விளையாட்டு மேலாண்மை, விளையாட்டு ஊடகம், விளையாட்டு அறிவியல் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்வது ஆகியவை இதில் அடங்கும். 04 சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் குவைத் உறுப்பினர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, கூட்டாக சூரிய சக்தியைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உறுப்பு நாடுகளுக்கு குறைந்த கார்பன் வளர்ச்சிப் பாதைகளை உருவாக்க உதவும் வகையில் சூரிய சக்தியின் பயன்பாட்டை அளவிடுவதற்கான முக்கிய பொதுவான சவால்களை இது நிவர்த்தி செய்கிறது.
Read More »குவைத் பயணத்திற்கு முன்னதாக பிரதமர் வெளியிட்ட அறிக்கை
“குவைத் அரசின் அமீர் திரு ஷேக் மெஷல் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பை ஏற்று நான் குவைத்துக்கு இரண்டு நாள் பயணத்தை இன்று தொடங்குகிறேன். பல தலைமுறைகளாக குவைத்துடனான வரலாற்று தொடர்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். நாம் வலுவான வர்த்தகம், எரிசக்தி ஒத்துழைப்பு நாடுகள் மட்டுமல்ல. மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்களையும் கொண்டிருக்கிறோம். குவைத் அமீர், பட்டத்து இளவரசர், குவைத் பிரதமர் ஆகியோரை சந்திக்க ஆவலுடன் உள்ளேன். நமது மக்கள், பிராந்தியம் ஆகியவற்றின் நலனுக்காக எதிர்கால ஒத்துழைப்புக்கான செயல்திட்டத்தை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதில் பெரும் பங்காற்றியுள்ள இந்திய வம்சாவளியினரை குவைத்தில் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். வளைகுடா பிராந்தியத்தின் முதன்மையான விளையாட்டு நிகழ்வான அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிற்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்த குவைத் தலைமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விளையாட்டுச் சிறப்பு, பிராந்திய ஒற்றுமை ஆகியவற்றுக்கான இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதை நான் எதிர்நோக்கி உள்ளேன். இந்தப் பயணம், இந்தியா – குவைத் மக்களுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.”
Read More »குடியரசுத் துணைத் தலைவர் சண்டிகர் பயணம்
குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், 2024-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி ஒருநாள் பயணமாக சண்டிகர் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், குடியரசுத் துணைத் தலைவருமான திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைக்கிறார்.
Read More »ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …
Read More »
Matribhumi Samachar Tamil