गुरुवार, दिसंबर 26 2024 | 08:53:20 AM
Breaking News
Home / अन्य समाचार / தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25-வது கூட்டத்தை டிராய் நடத்தியது

தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25-வது கூட்டத்தை டிராய் நடத்தியது

Follow us on:

தெற்காசிய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர்கள் கவுன்சிலின் (SATRC-25- எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டம் புது தில்லியில் 2024 நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்றது. தெற்காசியா முழுவதிலுமிருந்து கட்டுப்பாட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள், நிபுணர்கள் இதில் பங்கேற்றனர். ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) உடன் இணைந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) நடத்திய இந்த ஆண்டு கூட்டம், நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வதிலும், ஒழுங்குமுறை சவால்களை எதிர்கொள்வதிலும், உள்ளடக்கிய டிஜிட்டல் சூழல் அமைப்பை நோக்கிய பாதைகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியது.

இக்கூட்டத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா தொடங்கி வைத்தார்.
தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு பெம்மசானி சந்திர சேகர், ஆசிய பசிபிக் தொலைத்தொடர்பு சமூகத்தின் (APT) பொதுச் செயலாளர் திரு மசனோரி கோண்டோ இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் திரு அனில் குமார் லஹோட்டி எஸ்ஏடிஆர்சி-25 தலைவராக தேர்ந்தெடுக்ப்பட்டார்.

எஸ்ஏடிஆர்சி என்பது ஆசிய-பசிபிக் டெலிகம்யூனிட்டி (APT) இன் கீழ் ஒரு அமைப்பாகும். இது தெற்காசியாவின் தொலைத்தொடர்புத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பு நடைமுறைகளை ஊக்குவிக்கிறது. ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட உறுப்பு நாடுகள் இதில் உள்ளன.

இந்த கூட்டத்தில் நேரடியாகவும், காணொலி முறையிலும் பலர் கலந்து கொண்டனர். இதில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சுமார் 120 பேர் பங்கேற்றனர்.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், சேவைகள் தொடர்பான சவால்களை சமாளிப்பதில் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதற்கான வலுவான அழைப்புடன் கூட்டம் முடிவடைந்தது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …