गुरुवार, नवंबर 14 2024 | 11:08:20 PM
Breaking News
Home / Choose Language / Tamil / சுரங்க அமைச்சகம் சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த பயிலரங்கை நடத்தியது

சுரங்க அமைச்சகம் சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த பயிலரங்கை நடத்தியது

Follow us on:

சுரங்க அமைச்சகம், சர்வதேச எரிசக்தி முகமையுடன் இணைந்து முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த பயிலரங்கை இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் சுரங்க அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ் கலந்து கொண்டார். சுரங்க அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, சர்வதேச எரிசக்தி முகமை, சிந்தனையாளர்கள், தொழில்துறை சங்கங்கள், மறுசுழற்சி தொழில்துறை நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

இப்பயிலரங்கில் பேசிய அமைச்சகத்தின் செயலாளர் திரு வி.எல்.காந்த ராவ், நாட்டின் எரிசக்தி மாற்றத்திற்கு முக்கியமான கனிம மறுசுழற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தூய்மையான எரிசக்தியில் திட்டமிட்ட வாய்ப்புகளை உருவாக்குதல், வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் விநியோகச் சங்கிலி பாதுகாப்பை வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். முக்கியமான கனிமங்கள் மீதான இந்தியாவின் கவனம் அதன் எரிசக்தி லட்சியங்கள், தொழில்துறை தேவைகள் மற்றும் பருவநிலை இலக்குகளுடன் ஒத்துப்போகிறது என்று அவர் கூறினார். முக்கியமான கனிமங்களின் மறுசுழற்சி இந்த தாதுக்களின் உள்நாட்டில் கிடைக்கும் அளவை அதிகரிக்கும் என்றும் இறக்குமதியை நாடு சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பயிலரங்கின் போது, உலகளாவிய வளர்ந்து வரும் மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், முக்கியமான கனிமங்கள் மறுசுழற்சி வணிக மாதிரிகள் மற்றும் மறுசுழற்சி தொழிலை ஆதரிப்பதற்கான கொள்கை சீரமைப்பின் தேவை ஆகியவற்றின் முக்கிய பகுதிகள் குறித்த குழு விவாத அமர்வுகள் தொழில்துறை, ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிபுணர்களால் நடத்தப்பட்டன. முக்கியமான கனிம மறுசுழற்சி குறித்த வரவிருக்கும் அறிக்கை குறித்து சர்வதேச எரிசக்தி முகமையின் எரிசக்தி கனிம பகுப்பாய்வுத் தலைவர் திரு டே-யூன் கிம் ஒரு விளக்கக் காட்சியையும் வழங்கினார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

நான்காவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சியான ‘சீ விஜில்-24’ ஐ இந்திய கடற்படை நடத்தவுள்ளது

இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான ‘சீ விஜில்-24,  என்ற கடல் கண்காணிப்பு-24 பயிற்சியை  ‘நவம்பர் 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உள்ளது. 06 அமைச்சகங்கள், …