शुक्रवार, जनवरी 10 2025 | 07:19:43 PM
Breaking News
Home / अन्य समाचार / கூட்டுறவுத் துறையின் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்தின் வாயிலாக உணவுப் பாதுகாப்பு

கூட்டுறவுத் துறையின் பரவலாக்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டத்தின் வாயிலாக உணவுப் பாதுகாப்பு

Follow us on:

கூட்டுறவுத் துறையின், உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தின் முன்னோடித் திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், அசாம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களில் உள்ள 11 தொடக்க வேளாண் கடன் சங்கங்களில் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகம், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மற்றும் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS) ஆகியவற்றின் ஆதரவுடன் (PACS) பிஏசிஎஸ் அளவில் கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

இதன் படி தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் சிலமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் 1,000 மெட்ரிக் டன் சேமிப்பு திறனுடைய கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் (எம்ஐடிஎச்) கீழ் கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவதற்காக குளிர்பதன சேமிப்பு அலகுகள், சிப்பம் கட்டும் வீடுகள், குளிர்பதன வாகனங்கள் உள்ளிட்ட குளிர்பதன சங்கிலி உள்கட்டமைப்பை பிஏசிஎஸ் உருவாக்கலாம்.

இந்த முன்னோடித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 21.11.2024 நிலவரப்படி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கூடுதல் தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …