மலிவு விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) 28.10.2024 தேதியிட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளான டிராஸ்டுஜுமாப், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் (Trastuzumab, Osimertinib மற்றும் Durvalumab) ஆகியவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகளைக் குறைக்குமாறு சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்த மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 23.07.2024 தேதியிட்ட அறிவிக்கை 30/2024-ஐ வெளியிட்டது. அதில் இந்த மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை 08.10.2024 தேதியிட்ட 05/2024 அறிவிக்கை எண் 05/2024- ஐ வெளியிட்டு, அதில் இந்த மூன்று மருந்துகளுக்கான சரக்கு- சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை 10.10.2024 முதல் 12% முதல் 5% ஆகக் குறைத்துள்ளது.
அதன்படி, சந்தையில் இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) குறைக்கப்பட வேண்டும். குறைக்கப்பட்ட வரிகள், தீர்வைகள் ஆகியவற்றின் நன்மைகள் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும் என இந்த மருந்துகளின் உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தபப்ட்டுள்ளது.
Home / Choose Language / Tamil / மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைகிறது
மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை குறைகிறது
Follow us on:Tags anticancer drugs falling maximum retail price
मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here
Check Also
வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது
மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …