मंगलवार, नवंबर 19 2024 | 10:55:42 AM
Breaking News
Home / Choose Language / Tamil / லாவோசில் நடைபெறும் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

லாவோசில் நடைபெறும் 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

Follow us on:

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் 2024 நவம்பர் 20 முதல் 22 வரை லாவோசில் உள்ள வியன்டியான் நகருக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். அப்போது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த மன்றத்தில் அவர் உரையாற்றுவார்.

இந்த 11-வது கூட்டத்திற்கிடையே, அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், லாவோஸ், மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களுடன்  திரு ராஜ்நாத் சிங், இருதரப்பு பேச்சுகள் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சந்திப்புகள் நடத்தப்படுகின்றன.

ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் என்பது ஆசியானில் மிக உயர்ந்த பாதுகாப்பு ஆலோசனை மற்றும் கூட்டுறவு அமைப்பாகும். ஆசியான் உறுப்பு நாடுகள் (புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்) மற்றும் உரையாடலில் ஈடுபடும் 8 நாடுகள் (இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து) ஆகியவை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.

1992-ம் ஆண்டு ஆசியான் அமைப்பின் உரையாடலில் ஈடுபடும் நாடாக இந்தியா இணைந்தது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய விற்பனையாளர்கள், சேவை வழங்குநர்களின் பதிவு மற்றும் நேரடி பங்கேற்பை அரசு இ-சந்தை மேற்கொள்கிறது

புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டப வளாகத்தில் 2024,  நவம்பர் 14 தொடங்கி  27 வரை நடைபெற்று வரும் 43-வது …