सोमवार, दिसंबर 23 2024 | 04:59:19 AM
Breaking News
Home / Matribhumi Samachar (page 107)

புதுவை பல்கலைக்கழகத்தில் பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு MSME மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறை, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருமானம் ஈட்டுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தொடர்பாக சிறு தொழில் முனைவோர்களிடையே பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்து ICSSR உடன், தேசிய அளவிலான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கின் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல துணை பொது மேலாளர் திரு. வெங்கடாசுப்பிரமணியன் எம், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீமதி எஸ். அன்புமலர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் புதுச்சேரி, முதன்மை மாவட்ட மேலாளர் திரு. ஏ. சதீஷ்குமார், இந்தியன் வங்கி புதுச்சேரி முதன்மை மேலாளர் திரு. பெரியதம்பி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீமதி ஜோசபின் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துப் பேசியனர். தொடக்க உரையின் போது, பேராசிரியர் க. தரணிக்கரசு, பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற தொழில் முனைவோர் ஊக்கத்திற்கான திட்டங்களை மற்றும் நிதியுதவி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசி, சிறு தொழில் முனைவோர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்தினார். வங்கிகளின் வல்லுநர்கள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் அதன் புதுவை பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை பற்றி விளக்கினர். சொற்பொழிவின் போது, புதுவை மண்டலத்தில் 70%கும் மேலாக இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர் என கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு புதிய வணிகத் திட்டங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள வணிகங்களுக்கு மறுநிதி வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் இலவச கடன் வசதி வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு ICSSR ஆராய்ச்சி திட்டமாக, புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் பி.ஜி. அருளின் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள், பயனாளிகள் மற்றும் மாணவர்களிடம் சமர்ப்பித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குழு விவாதம் நடைபெற்றது, இதில் நிகழ்நேர பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். MSME கள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) தாக்கம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு பல்வேறு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சர்வதேச வணிகவியல் துறையின் ஆராய்ச்சி அறிஞரான திரு. பி. சந்தோஷ் நன்றி உரை வழங்கினார்.

Read More »

பழங்குடி சமூகத்தை மேம்படுத்துதல்: சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான முன்முயற்சிகள்

இந்தியாவில்10.42 மில்லியன்  பழங்குடியின மக்கள் 705-க்கும் அதிகமான தனித்துவமான குழுக்களாக  உள்ளனர். (மொத்த மக்கள் தொகையில் 8.6%). இவர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பழங்குடி மக்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.  பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் மதிக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகும். சுரண்டும் பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்புக்கு எதிராக பிர்சா முண்டா துணிச்சலுடன் போராடினார். சுதந்திர இயக்கத்தை வழிநடத்தினார்.  இந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளில், பிரதமர் ஒரு சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் முத்திரையை வெளியிடுகிறார். அதே நேரத்தில் பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூ .6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் பழங்குடியினர் துணைத் திட்டம் (டிஎஸ்பி) என்று அழைக்கப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (டிஏபிஎஸ்டி) கீழ், 42 அமைச்சகங்கள் / துறைகள் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்க உறுதிபூண்டுள்ளன. பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், பிரதான சமூகத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில்ரூ. 79,156 கோடிக்கும் அதிகமான செலவினத்துடன் தொடங்கிவைத்த லட்சியத் திட்டம் சுமார் 63,843 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிரப்பி வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023, நவம்பர் 15 அன்று, ஜார்க்கண்டின் குந்தியில் தொடங்கிய பிஎம்-ஜன்மான் திட்டம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வாழ்விடங்களில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்மயமாக்கல், நிலையான வாழ்வாதாரங்கள் போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2018-19-ல் தொடங்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டம், பழங்குடி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, கலாச்சார மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் 40 பள்ளிகளைத் திறந்து வைத்தார். ரூ .2,800 கோடிக்கும் அதிக  முதலீட்டில்  25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை 728 அவசரகால  மருத்துவ முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும்  “பழங்குடியினரின்  உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ” முன்முயற்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறு வன தயாரிப்புகள்  மற்றும் அவ்வாறு அல்லாதவை உள்ளிட்ட இயற்கை வளங்களை பழங்குடி சமூகங்கள் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதில் இது கவனம் செலுத்துகிறது. 2014, அக்டோபர் 28  அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் வனபந்து நலத் திட்டம்,  இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு  முயற்சியாகும். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், ஒற்றுமையை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த முயற்சிகள் பழங்குடி கலாச்சாரங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்தியாவின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைக்கின்றன. இந்த முன்முயற்சிகள் மூலம், பழங்குடி சமூகங்கள் மேம்பட்டது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். பழங்குடியின குழுக்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி, வளர்ச்சி உணர்வுடன் ஒன்றிணைந்து முன்னேறுவதை உறுதி செய்யும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இது இணைந்து செல்வதாக உள்ளது.

Read More »

200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனையை கௌரவிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பத்தை மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்

ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் திரு சுதர்சன் பட்நாயக்கின் கலைப்படைப்புகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சர் திரு  பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார். “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 200 ஜிகாவாட் மைல்கல்லை தாண்டிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையிலான மணற்சிற்பம்! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir ” என்று மத்திய அமைச்சர் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பஞ்சாமிர்த’ இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா அக்டோபரில் 200 ஜிகாவாட் மைல்கல்லை எட்டியது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுவாக்கில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்குடன் ஒத்துப்போகிறது.

Read More »

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி புதுதில்லியில் அவரது பிரமாண்டமான உருவச்சிலையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா திறந்து வைத்தார்

பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி தில்லியில் உள்ள பான்சேரா பூங்காவில் அவரது பிரமாண்டமான உருவச்சிலையை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு மனோகர் லால், தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா, மத்திய இணையமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, 2021 ஆம் ஆண்டில், பிரதமர் திரு  நரேந்திர மோடி,  பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் (நவம்பர் 15) பழங்குடியினர் கவுரவ தினமாகக்  கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இந்த நாளில்தான் ஜார்க்கண்டின் ஒரு சிறிய கிராமத்தில் பகவான் பிர்சா முண்டா பிறந்தார் என்று அவர் கூறினார். பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த ஆண்டை நினைவுகூரும் வகையில், வரும் ஆண்டு, 2025 நவம்பர் 15 வரை, பழங்குடியினர் கவுரவ ஆண்டாகக்  கொண்டாடப்படும் என்று திரு ஷா கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு, சராய் காலே கான் சதுக்கத்தின்  பெயரை ‘பகவான் பிர்சா முண்டா சதுக்கம்’ என்று மாற்ற மோடி அரசு முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார். பகவான் பிர்சா முண்டா  பழங்குடி கலாச்சாரத்தின் பெருமைகளை மீட்டெடுப்பவராக மாறியது மட்டுமல்லாமல், தனது 25 ஆண்டு கால  வாழ்க்கையிலேயே ஒருவர் எவ்வாறு வாழ்க்கையை வழிநடத்த வேண்டும் என்றும் நமது வாழ்க்கையின் இலக்கு  என்னவாக இருக்க வேண்டும் என்றும் தனது செயல்களின் மூலம் நாட்டில் பலருக்கும் விளக்கினார் என்று அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். பகவான் பிர்சா முண்டா நிச்சயமாக சுதந்திரப் போராட்டத்தின் மகத்தான நாயகர்களில் ஒருவர் என்று அவர் கூறினார். 1875 ஆம் ஆண்டு பிறந்த பகவான் பிர்சா முண்டா, தனது இடைநிலைக் கல்வியின் போது மிக இளம் வயதிலேயே மதமாற்றத்திற்கு எதிராக குரல் எழுப்பினார். முழு இந்தியாவும் உலகின் மூன்றில் இரண்டு பகுதியும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டபோது, பிர்சா முண்டா மத மாற்றத்திற்கு எதிராக உறுதியாக நிற்கும் தைரியத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இந்த உறுதியும் துணிச்சலும் அவரை இந்த நாட்டின் தலைவராக மாற்றியது என்று திரு ஷா கூறினார். ராஞ்சி சிறையில் இருந்து இங்கிலாந்து ராணி வரை, தேசிய நாயகர் பிர்சா முண்டா  நாட்டு மக்களின் குரலாக மாறியிருக்கிறார் என்றும் அவர் கூறினார். நீர், காடு, நிலம் ஆகியவை பழங்குடியினரின் சுற்றுச்சூழல் அமைப்பு, வாழ்வாதாரம் மற்றும் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த கூறுகள் தாம் என்றும், அவை அனைத்தும் பழங்குடியினருக்குத்தான்  என்பதை பகவான் பிர்சா முண்டா புதுப்பித்தார் என்று திரு அமித் ஷா கூறினார். பிர்சா முண்டா பழங்குடியின சமுதாயத்தில் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு மது அருந்துதல், நிலப்பிரபுக்களின் சுரண்டல் முறை மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை அவர் எதிர்த்தார். இந்த நாட்டின் பழங்குடி சமூகத்தின் சமூக சீர்திருத்தங்கள், சுதந்திரப் போராட்டம் மற்றும் மதமாற்ற எதிர்ப்பு இயக்கத்திற்காக ஒட்டுமொத்த நாடும் பகவான் பிர்சா முண்டாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று திரு ஷா கூறினார். “தர்தி அபா” (பூமியின் தந்தை) என்றும் அழைக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் பார்க்க முடியும் என்று உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறினார். முதல் பகுதி பழங்குடி கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான அவரது அர்ப்பணிப்பு, இரண்டாவது பகுதி தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் அதன் பாதுகாப்பிற்காக மிக உயர்ந்த தியாகம் செய்வதற்கான அவரது ஆர்வம். தனது 25வது வயதில்  பகவான் பிர்ஸா முண்டா பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சித் தீயை மூட்டினார் என்றும், தேசத்தின் கவனத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதின் கவனத்தையும் பழங்குடி மக்களின் நிலை குறித்து ஈர்த்தார் என்றும், தனது செயல்கள் மூலம் ஒரு சரித்திரத்தை எழுதியிருக்கிறார் என்றும், 150 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்று நாடு அவருக்குத் தலைவணங்குகிறது என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினர் உற்சாகமாக பங்கேற்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த மாவீரர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு மறக்கப்பட்டனர் என்று அமைச்சர் கூறினார். 2015 ஆம் ஆண்டில், பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டில் 200 கோடி ரூபாய் செலவில் 20 பழங்குடியின மாவீரர்களின் அருங்காட்சியகங்களை உருவாக்க முடிவு செய்தார் என்றும், இதன் மூலம் இந்த மாவீரர்களின் வாழ்க்கையை குழந்தைகள் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். இதுவரை மூன்று அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். ராஞ்சியில் பகவான் பிர்சா முண்டா அருங்காட்சியகம், ஜபல்பூரில் சங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா அருங்காட்சியகம், சிந்த்வாராவில் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மீதமுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் 2026-ம் ஆண்டிற்குள் தயாராகிவிடும். பழங்குடியினரின் பெருமைக்காக பிரதமர் திரு நரேந்திர மோடியின் அரசு ஏராளமான பணிகளை செய்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் முதல் முறையாக மோடி அரசு பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குடியரசுத் தலைவராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது. திருமதி திரௌபதி முர்மு ஒரு ஏழை பழங்குடி குடும்பத்தின் மகள் என்றும், இன்று அவர் நாட்டின் முதல் குடிமகள்  என்ற அந்தஸ்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். பழங்குடியினர் பகுதிகளில் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் குழந்தைகளை தவறாக வழிநடத்தும் நக்சலிசத்தை கடந்த 10 ஆண்டுகளில் திரு நரேந்திர மோடியின் அரசு ஏறத்தாழ ஒழித்துவிட்டது என்று திரு ஷா கூறினார். பழங்குடியினரின் வளர்ச்சிக்காக எதிர்க்கட்சிகளின் அரசாங்கத்திடம் ரூ .28,000 கோடி மட்டுமே பட்ஜெட் உள்ளது என்றும், மோடி அரசு 2024-25 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ரூ .1,33,000 கோடியை ஒதுக்கியுள்ளது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா  கூறினார்.  மாவட்ட கனிம அறக்கட்டளை திட்டத்தின் கீழ், பழங்குடியினர் பகுதிகளுக்கு  ரூ.97 ஆயிரம் கோடிவழங்கப்பட்டுள்ளது,  708 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Read More »

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை சார்பில் ஆட்சிமொழி விருதுகள் வழங்கப்பட்டன. ‘சுரபி’ இதழின் இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டது

‘இந்தி இருவார விழா’வின் போது நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவதற்காக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் 2024, நவம்பர் 13 அன்று ஆட்சிமொழி விருது வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்டுரை மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் ஊக்குவித்தார். ‘இந்தி இருவார விழா’ வையொட்டிய அகில இந்திய கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சிக்குத் துறையின்  செயலாளர் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் இணைச் செயலாளர், இயக்குநர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். துணை அலுவலகங்களும் காணொலிக் காட்சி  மூலம் இணைக்கப்பட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்டன. இத்துறையின் ஆட்சி மொழி இதழான ‘சுரபி’யின் இரண்டாவது பதிப்பையும் இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் வெளியிட்டார். இணை அமைச்சர் தனது உரையில், அலுவல் மொழியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு, அது தொடர்பான பல சுவாரசியமான உண்மைகளையும் சுட்டிக்காட்டினார். பிராந்திய மொழிகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். நமது பேச்சு வழக்கு, உடை மற்றும் உணவுப் பழக்கங்களை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது, ஏனெனில் இவையே நமது உண்மையான அடையாளம் என்று திரு பாகேல் கூறினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் / ஊழியர்கள் தங்கள் அன்றாட பணிகளில் அலுவல் மொழியை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Read More »

மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலி பணியிடங்களை மத்திய நுகர்வோர் நலத் துறை ஆய்வு செய்தது

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய நுகர்வோர் நலத் துறை நடத்தியது. துறையின்  செயலாளர் திருமதி நிதி காரே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள  துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோர் பிரச்சனைகள் / வழக்குகள் உடனடியாகவும், திறமையாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவது அவசியம் என்று திருமதி நிதி காரே  கூறினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நுகர்வோரின் குறைகள் விரைவாகவும் திறம்படவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பின்பற்றி இந்த நடவடிக்கைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சேவையின் தரத்தை நிலைநிறுத்துவதற்கும் நுகர்வோர் ஆணையங்களின் திறமையான செயல்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள காலி பணியிட தரவுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்ய இந்த கூட்டம் உதவியது. 2024, அக்டோபர்  நிலவரப்படி, மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் குறிப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில ஆணையங்களில் 18 தலைவர் பணியிடங்களும், 56 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதேபோல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆணையங்களில் 162 தலைவர் பணியிடங்களும், 427 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அனைவரின் சிறந்த முயற்சிகளையும் மீறி, நுகர்வோர் ஆணையங்களில் காலிப்பணியிடங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது கவனித்தில் கொள்ளப்பட்டது. நுகர்வோர் ஆணையங்களில் அதிகரித்து வரும் இந்த காலிப்பணியிடங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய செயலாளர், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் விரைந்து செயல்பட்டு இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் செயல்படுத்தும் விதிகளையும், நிலவும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, 2019 சட்டத்தின் பிரிவு 32-ன் விதிகள் மீது அவர் பங்கைற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த சந்திப்பின் விளைவாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இந்த விஷயத்தில் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், நுகர்வோர் நீதியை பாதிக்கும் வழக்குகளின் பின்னடைவைக் குறைப்பதற்கும் காலியிடங்களை நிரப்புவது அவசியம் என்று ஒருமித்த கருத்து இருந்தது. நுகர்வோர் ஆணையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப திறமையான, குறிக்கோள் மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதில் அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. நாடு முழுவதும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நுகர்வோர் தீர்வு செயல் முறையை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Read More »

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியுடன் சந்திப்பு

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த சந்திப்பு  முக்கியமான பொதுத்தளமாக அமைந்தது. இந்த சந்திப்பின் போது, டாக்டர் சதுர்வேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நீண்டகால மற்றும் பன்முக கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். விவசாயத்தில் இந்தியாவின் தற்போதைய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய அவர், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். பயிர் பன்முகப்படுத்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைதல் மற்றும் இந்தியாவின் வேளாண் உத்தியின் முக்கிய கூறுகளாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான முயற்சிகளை டாக்டர் சதுர்வேதி எடுத்துரைத்தார். இந்தத் துறையை நவீனமயமாக்குவதில் துல்லிய வேளாண்மை, டிஜிட்டல் வேளாண் இயக்கம் மற்றும் சிறிய பண்ணைகளின் இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, விவசாயத்தில் புதுமை மற்றும் மாற்றத்தை ஊக்குவிப்பதில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்கை அவர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவின் முன்னுரிமைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் திரு கிரீன் எடுத்துரைத்தார். வேளாண் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு கிரீன் வலியுறுத்தினார். வேளாண் தொழில்நுட்பம், தோட்டக்கலை, டிஜிட்டல் வேளாண்மை மற்றும் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐ.சி.ஏ.ஆர் பிரதிநிதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்று,  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

Read More »

பகவான் பிர்சா முண்டாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

பழங்குடியினர் கவுரவ தினத்தில் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜகதீப் தன்கர்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். “பழங்குடியின அடையாளம், கலாச்சாரத்தின் பெருமை மற்றும் உல்குலனின் சிற்பியான தர்த்திஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நான் எனது தாழ்மையான அஞ்சலியை செலுத்துகிறேன். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் இன்று தொடங்குகிறது. இந்தப் பழங்குடியினர் கவுரவ தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் பிர்சா முண்டா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக, சமூகத்திற்காக, கலாச்சாரத்திற்காக அர்ப்பணித்த மாவீரர். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கும். #BirsaMunda150.” என்று மக்களவைத் தலைவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2021 முதல், நவம்பர் 15 ஆம் தேதி பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் பழங்குடியினர் கவுரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமூகங்கள் பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் மூலம் முக்கிய பங்கு வகித்தன. பழங்குடி சமூகங்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த நாள் கௌரவிக்கிறது. நாடு தழுவிய நிகழ்வுகள், ஒற்றுமை, பெருமை மற்றும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து ஊக்குவிக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உல்குலானை (புரட்சியை) வழிநடத்திய பகவான் பிர்சா முண்டா எதிர்ப்பின் அடையாளமாக மாறினார். பகவான் முண்டாவின் தலைமை ஒரு தேசிய விழிப்புணர்வை ஊக்குவித்தது. மேலும் அவரது மரபு பழங்குடி சமூகங்களால் ஆழமாக மதிக்கப்படுகிறது. பிரமுகர்களை வரவேற்று, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின நாட்டுப்புறக் கலைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

Read More »

பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பழங்குடியினர் கௌரவ தினத்தை முன்னிட்டு பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் ஜமுயில் இன்று ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற பழங்குடியினர் தின நிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோரைப் பிரதமர் வரவேற்றார். இந்தியா முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில்  இணைந்த எண்ணற்ற பழங்குடியின சகோதர சகோதரிகளையும் பிரதமர் வரவேற்றார். கார்த்திகை பூர்னிமா, தேவ் தீபாவளி, ஸ்ரீ குருநானக் தேவ் அவர்களின்  550-வது பிறந்த நாள் ஆகியவை அனுசரிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அதற்காக இந்திய குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாள்  பழங்குடியினர் கௌரவ தினமாகக் கொண்டாடப்படும் நாள் என்பதால்  குடிமக்களுக்கு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் கூறினார். இந்தியக் குடிமக்கள், குறிப்பாக பழங்குடியின சகோதர சகோதரிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். இன்றைய பழங்குடியினர் கௌரவ தினத்திற்கு  முன்னோட்டமாக கடந்த 3 நாட்களில் தூய்மை இயக்கம் ஜமுயில் நடைபெற்றது என்று பிரதமர் குறிப்பிட்டார். தூய்மை இயக்கத்திற்காக, ஜமுய் நிர்வாகம், குடிமக்கள், குறிப்பாக பெண்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். கடந்த ஆண்டு பழங்குடியினர் கௌரவ தினத்தன்று, பிர்சா முண்டாவின் பிறந்த கிராமமான உலிஹாட்டுவில் தாம் இருந்ததை நினைவுகூர்ந்த திரு மோடி, இந்த ஆண்டு தியாகி தில்கா மஞ்சியின் துணிச்சலைக் கண்ட இடத்தில் தாம் இருந்ததாகக் குறிப்பிட்டார். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று தொடங்குவதால் இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பானது என்றார். வரும் ஆண்டிலும் கொண்டாட்டங்கள் தொடரும் என்று அவர் மேலும் கூறினார். பீகார் மாநிலம் ஜமுயில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மெய்நிகர் முறையில் பங்கேற்ற பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். பிர்சா முண்டாவின் வழித்தோன்றலும், சித்து கன்ஹுவின் வழித்தோன்றலுமான திரு மண்டல் முர்முவை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக திரு மோடி தெரிவித்தார். ரூ.6,640 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்கமும் அடிக்கல் நாட்டும் பணிகளும் இன்று நடைபெற்றதாக பிரதமர் குறிப்பிட்டார். பழங்குடியினருக்கு உறுதியான வீடுகள், பழங்குடி குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்காக பள்ளிகள் மற்றும் விடுதிகள், பழங்குடி பெண்களுக்கான சுகாதார வசதிகள், பழங்குடி பகுதிகளை இணைக்கும் சாலை திட்டங்கள், பழங்குடி கலாச்சாரத்தை பாதுகாக்க பழங்குடி அருங்காட்சியகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றிற்கு சுமார் 1.5 லட்சம் ஒப்புதல் கடிதங்கள் இந்தத் திட்டங்களில் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பழங்குடியின மக்களுக்காக 11,000 வீடுகள் புதுமனைப் புகுவிழாவுக்காக  கட்டப்பட்டிருப்பதாக திரு மோடி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் அனைத்து பழங்குடியினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பழங்குடியினர் கௌரவ  தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ ஆண்டு தொடங்குவது பற்றி குறிப்பிட்ட திரு மோடி, இந்தக் கொண்டாட்டங்கள் ஒரு பெரிய வரலாற்று அநீதியை சரிசெய்யும் நேர்மையான முயற்சியைக் குறிக்கிறது என்றார். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் பழங்குடியினருக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். பழங்குடியின சமூகத்தின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர், பழங்குடி சமூகம்தான் இளவரசர் ராமரை பகவான் ராமராக மாற்றியது என்றும், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க பல நூற்றாண்டுகளாக போராடி வழிநடத்தியது என்றும் கூறினார். எவ்வாறாயினும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தசாப்தங்களில் சுயநல அரசியலால் தூண்டப்பட்ட பழங்குடி சமூகத்தின் இத்தகைய முக்கியமான பங்களிப்புகளை அழிக்க முயற்சிகள் நடந்தன என்று அவர்  கூறினார். உல்குலன் இயக்கம், கோல் கிளர்ச்சி, சந்தால் கிளர்ச்சி, பில் இயக்கம் போன்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக பழங்குடியினரின் பல்வேறு பங்களிப்புகளை பட்டியலிட்ட திரு மோடி, பழங்குடியினரின் பங்களிப்பு மகத்தானது என்றார். அல்லூரி சீதாராம ராஜு, தில்கா மஞ்சி, சித்து கன்ஹு, புது பகத், தெலாங் காரியா, கோவிந்த குரு, தெலுங்கானாவின் ராம்ஜி கோண்ட், மத்தியப் பிரதேசத்தின் பாதல் போய், ராஜா சங்கர் ஷா, குவர் ரகுநாத் ஷா, தந்தியா பில், ஜாத்ரா பகத், லட்சுமண் நாயக், மிசோரமின் ரோபுய்லியானி, ராஜ் மோகினி தேவி, ராணி கைடின்லியு, கலிபாய், கோண்டுவானாவின்  ராணி துர்காவதி தேவி மற்றும் பலர்… இவர்களைப்  போன்ற இந்தியா முழுவதிலுமிருந்த  பல்வேறு பழங்குடித் தலைவர்களை ஒருபோதும் மறக்க முடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷார் ஆயிரக்கணக்கான பழங்குடியினரை கொன்று குவித்த மன்கர் படுகொலையை மறக்க முடியாது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். கலாச்சாரத் துறையாக இருந்தாலும், சமூக நீதித் துறையாக இருந்தாலும் தமது அரசின் மனநிலை வேறுபட்டது என்று கூறிய திரு மோடி, திருமதி திரௌபதி முர்முவை இந்தியக் குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுத்தது தங்களது அதிர்ஷ்டம் என்றார். அவர் இந்தியாவின் முதல் ஆதிவாசி குடியரசுத் தலைவர் என்றும், பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து பணிகளுக்கான பெருமையும் குடியரசுத்தலைவரையே சாரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பாதிக்கக்கூடிய பழங்குடியின குழுக்களுக்கு  அதிகாரம் அளிப்பதற்காக ரூ 24,000 கோடி பிரதமர் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு மோடி, இந்த திட்டத்தின் கீழ், நாட்டின் மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் குடியிருப்புகளின் மேம்பாடு உறுதி செய்யப்படுகிறது என்றார். இந்தத் திட்டம் இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளதாகவும், இதன் கீழ் ஆயிரக்கணக்கில் உறுதியான வீடுகள் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல வீடுகளில் வீடுதோறும் குடிநீர் திட்டத்தின் கீழ் குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியின குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுவதாகவும்  குடிநீர் இணைப்பை உறுதி செய்வதற்காக சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர்களைத் தாம் வணங்குவதாகக்  குறிப்பிட்ட திரு மோடி, முந்தைய அரசுகளின் அணுகுமுறை காரணமாக பழங்குடியின சமூகங்கள் பல தசாப்தங்களாக அடிப்படை உள்கட்டமைப்பு இல்லாமல் இருந்தது என்றார். நாட்டில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பல பத்து மாவட்டங்கள் வளர்ச்சியின் வேகத்தில் பின்தங்கியுள்ளன என்று அவர் கூறினார். தங்களது அரசு சிந்தனை முறையை மாற்றி, அவற்றை ‘முன்னேற விரும்பும் மாவட்டங்கள்’ என்று அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு  திறமையான அதிகாரிகளை நியமித்துள்ளது என்று திரு மோடி கூறினார். இன்று இதுபோன்ற முன்னேற விரும்பும் மாவட்டங்கள் பல வளர்ந்த மாவட்டங்களைக் காட்டிலும் பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் சிறப்பாக செயல்பட்டிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பலன்கள் பழங்குடியினருக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் கூறினார். பழங்குடியினர் நலனுக்கு எப்போதும் எங்கள் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்று பிரதமர் கூறினார். அடல் அவர்களின் அரசுதான் பழங்குடியினர் நலனுக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கியது என்றும் அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.25,000 கோடியிலிருந்து ரூ.1.25 லட்சம் கோடியாக 5 மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதை திரு மோடி குறிப்பிட்டார். 60,000-க்கும் அதிகமான பழங்குடியின கிராமங்கள் பயனடையும் வகையில் சிறப்புத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது என்று திரு மோடி கூறினார். பழங்குடியின கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது ஆகியவற்றை  நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தில் ரூ.80,000 கோடி முதலீடு செய்யப்படுவதாக அவர் மேலும் கூறினார். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தங்கும் விடுதிகளை உருவாக்க பயிற்சி மற்றும் ஆதரவுடன் பழங்குடியினர் சந்தைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். இது சுற்றுலாவை வலுப்படுத்துவதோடு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை சாத்தியமாக்கும். இது பழங்குடியினர் இடம்பெயர்வதை தடுக்கும் என்றும் அவர் கூறினார். பழங்குடியின பாரம்பரியத்தை பாதுகாக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை சுட்டிக்காட்டிய திரு மோடி, பல பழங்குடியின கலைஞர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டதாக கூறினார்.                                                                                  …

Read More »

भारतीय ग्रीडद्वारे नेपाळमधून बांगलादेशापर्यंत वीज पाठवणाऱ्या पहिल्या त्रिपक्षीय विद्युत व्यवहाराचे उद्घाटन

केंद्रीय ऊर्जा, गृहनिर्माण आणि नागरी व्यवहार मंत्री मनोहर लाल यांनी, बांग्लादेशचे ऊर्जा आणि खनिज संसाधन मंत्रालयाचे सल्लागार मोहम्मद फौजुल कबीर खान तसेच नेपाळचे उर्जा, जलसंपदा आणि सिंचन मंत्री दीपक खडका यांच्यासमवेत, नेपाळ सरकारच्या ऊर्जा, जलसंपदा आणि सिंचन मंत्रालयाने दूरदृश्य प्रणाली मार्फत आयोजित केलेल्या कार्यक्रमाद्वारे नेपाळमधून बांगलादेशापर्यंत जाणाऱ्या वीज प्रवाह उपक्रमांचे  संयुक्तरीत्या उद्घाटन केले. हा ऐतिहासिक …

Read More »