मंगलवार, दिसंबर 24 2024 | 10:30:07 PM
Breaking News
Home / अन्य समाचार (page 10)

अन्य समाचार

55ನೇ ಐ ಎಫ್ ಎಫ್ ಐ ಅದ್ದೂರಿ ಸಮಾರೋಪ ಸಮಾರಂಭದೊಂದಿಗೆ ಮುಕ್ತಾಯಗೊಂಡಿತು

ಪ್ರತಿಯೊಂದು ಒಳ್ಳೆಯದಕ್ಕೂ ಅಂತ್ಯವಿದೆ, ಈ ತತ್ವದ ಪ್ರಕಾರ,  2024ರ ಭಾರತೀಯ ಅಂತಾರಾಷ್ಟ್ರೀಯ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು (IFFI) ನವೆಂಬರ್ 28, 2024 ರಂದು ಗೋವಾದ ಡಾ. ಶ್ಯಾಮ ಪ್ರಸಾದ್ ಮುಖರ್ಜಿ ಒಳಾಂಗಣ ಸ್ಟೇಡಿಯಂನಲ್ಲಿ ಅಧಿಕೃತವಾಗಿ ಸಮಾರೋಪಗೊಂಡಿತು. ಚಲನಚಿತ್ರ ಮಾಧ್ಯಮದ ಮಹತ್ವವನ್ನು ಮತ್ತು ಕಥನ ಕಲೆಯನ್ನು ಉತ್ತೇಜಿಸುವಲ್ಲಿ ಈ ಚಲನಚಿತ್ರೋತ್ಸವವು ಮಹತ್ವದ ಪಾತ್ರ ವಹಿಸಿದೆ. ಭವಿಷ್ಯದ ಚಲನಚಿತ್ರ ನಿರ್ಮಾಪಕರಿಗೆ ಹೊಸ ಹಾದಿಗಳನ್ನು ತೆರೆದಿಡುವಲ್ಲಿಯೂ ಈ ಉತ್ಸವವು ಯಶಸ್ವಿಯಾಗಿದೆ. ಐ ಎಫ್ ಎಫ್ ಐ 2024ರಲ್ಲಿ …

Read More »

கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் தொடர்பான முன் நிகழ்வுகள் – ஆந்திராவில் 5 இடங்களில் நாளை நடைபெறுகிறது

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா 2024 தொடர்பான முன் நிகழ்வுகளை, மத்திய சுற்றுலா அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், ஜவுளி அமைச்சகம் ஆகியவை ஆந்திரப் பிரதேச அரசுடன் இணைந்து, 2024 டிசம்பர் 01 அன்று நடத்தவுள்ளன. கலாச்சார ரீதியாக வளமான இந்த இசை நிகழ்ச்சிகள் ஆந்திரா முழுவதும் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்படும். இது இசை, பாரம்பரியம், பக்தியை ஒன்றிணைத்து பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும். கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம், தெலுங்கு கலாச்சாரத்தின் வளமான  மரபுகளைக் கொண்டாடுகிறது. இது புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருட்கள், கைத்தறி தயாரிப்புகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், இளைய தலைமுறையினருக்கு இந்த புகழ்பெற்ற பாரம்பரியங்களைக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்போது அதன் இரண்டாவது பதிப்பில், இந்த ஆண்டின் கிருஷ்ணவேணி சங்கீத நீரரஜனம் மைசூரு சங்கீத சுகந்தாவின் வெற்றியைத் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்திய இசையின் ஆழமான பாரம்பரியத்தை எதிரொலிக்கும் சில சிறந்த பாரம்பரிய இசைக்கலைஞர்களின் கலைத்திறனைக் காண இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை இது வழங்கும். ஒவ்வொரு கச்சேரியும் தனித்துவமான கலாச்சார அடையாளத்தைக் கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் முக்கிய கோயில்கள், பாரம்பரிய தளங்களின் ஆன்மீக சூழலில் பார்வையாளர்களை இது கவரும். முன்நிகழ்வுகளின் அட்டவணை ஸ்ரீகாகுளம்: இடம்: ஸ்ரீ சூரியநாராயண சுவாமி வாரி தேவஸ்தானம், அரசவல்லி, ஸ்ரீகாகுளம் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: மண்டா சுதா ராணி ராஜமகேந்திரவ் (ராஜமுந்திரி): இடம்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னம் கலா கேந்திரம், சேஷய்யா மேட்டா, ராஜமகேந்திரவ் நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: துளசி விஸ்வநாத் மங்களகிரி: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மெயின் ஆர்.டி, மங்களகிரி, குண்டூர் (மாவட்டம்), ஆந்திரா. நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை தீம்: நரசிம்ம சுவாமி பற்றிய கிருதிகள் கலைஞர்கள்: எம்.நாராயணசர்மா, எம்.யமுனா ராமன் அஹோபிலம்: இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், அஹோபிலம் – 518545, நந்தியால் (மாவட்டம்) நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: தீபிகா வரதராஜன் திருப்பதி: இடம்: ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம், மகளிர் பல்கலைக்கழகம், திருப்பதி நேரம்: மாலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை கலைஞர்: பாலகிருஷ்ண பிரசாத் காரு கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் விழா பற்றி: பாரம்பரியத்தையைத் அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களையும் ஊக்குவிக்க குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதை நோக்கிய முயற்சியாக, கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனத்தின் இசை விழாவானது, பாரம்பரிய இசையின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடுவதையும், ஹரிகதை, நாமசங்கீர்த்தனா ஆகிய மரபுகளில் கவனம் செலுத்த உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிருஷ்ணவேணி சங்கீத நீரஜனம் 2024 இசை விழா என்பது 2024 டிசம்பர் 6 முதல் 8 வரை மூன்று நாள் நிகழ்வாகும். இந்த 3 நாள் நிகழ்வு விஜயவாடாவில் நடைபெறவுள்ளது. இது கர்நாடக இசைக்கு ஆந்திராவின் பங்களிப்பையும் மாநிலத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் கொண்டாடுகிறது. திருவிழாவின் இந்த இரண்டாவது பதிப்பு இப்பகுதியின் பாரம்பரிய கலைகள், கைவினைப்பொருட்கள், ஜவுளிகளை மேலும் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இது ஆந்திராவை ஒரு முக்கிய கலாச்சார இடமாக நிலை நிறுத்துகிறது.

Read More »

குவஹாத்தி இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் அறிவியல் தகவல்தொடர்பு உத்திகள் குறித்து விவாதிக்க இரண்டு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன

குவஹாத்தி நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் (IISF 2024-ஐஎஸ்எஸ்எஃப்) மொத்தம் 25 நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அவற்றின் மூலம் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரிடமும் அறிவியல், தொழில்நுட்பத்தைப் பற்றி கொண்டு சேர்க்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவை இரண்டும் இல்லாமல் இந்த விழா மக்களை சென்றடைய முடியாது.  மீடியா கான்க்ளேவ் எனப்படும் ஊடக அரங்கம்,  விக்யானிகா ஆகியவை அந்த இரண்டு நிகழ்வுகள் ஆகும். இது இந்திய தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலான சிஎஸ்ஐஆர்-ன் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் தொடர்பு, கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தால் (NIScPR) ஏற்பாடு செய்துள்ளன. அறிவியல், தொழில்நுட்ப ஊடக மாநாடு 2024, விக்யானிகா ஆகியவை ஐஎஸ்எஸ்எஃப் 2024-ன் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். இது இந்தியாவில் அறிவியல் தகவல் தொடர்பு, கல்வியறிவின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 டிசம்பர் 1-2, ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஊடக மாநாடு, அறிவியல் தொடர்பாளர்களுக்கான சிந்தனையைத் தூண்டும் தளமாக இருக்கும்.  இதில் குழு விவாதங்கள் இடம்பெறும்.  இந்த நிகழ்வு 6 அமர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அறிவியல் தகவல்தொடர்பில் கவனம் செலுத்தும்  மற்றொரு முக்கிய நிகழ்வான விக்யானிகா (Vigyanika) 2024 டிசம்பர் 1-2 தேதிகளில் நடைபெறுகிறது. ஊடக மாநாடு பல்வேறு ஊடக வடிவங்களைப் பற்றி விவாதிக்கும் அதே வேளையில், விக்யானிகா, பத்திரிகைகள்  போன்ற  தளங்கள் மூலம் அறிவியல் பரவலில் கவனம் செலுத்தும்.

Read More »

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் என்று குவஹாத்தியில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் -2024) 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பாதை அறிவியல் முன்னேற்றத்துடனும் கண்டுபிடிப்புகளுக்கான அதன் உறுதிப்பாட்டுடனும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் பங்களிக்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுத்த ஆறு முக்கிய முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், விண்வெளி புத்தொழில்களுக்கான ரூ. 1,000 கோடி துணிகர நிதி, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த வானிலை இயக்கம் தொடங்குதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயோ-இ 3 முன்முயற்சி, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி இதழ்களின் உலகளாவிய அணுகலை வழங்க “ஒரு நாடு, ஒரு சந்தா” கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான ய அடல் கண்டுபிடிப்பு இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகத் தலைமை இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். அறிவியல் – தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பல்வேறு வகையான செயல்பாடுகளை வழங்குகிறது. சந்திரன் அருங்காட்சியக கண்காட்சி, 3டி லேசர் கண்காட்சி, மறுகற்பனை பாரத கண்காட்சி, இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். பாதுகாப்பு கண்காட்சி, வடகிழக்கின் அறிவியல் வளங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்வு ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.  அறிவியல்- தொழில்நுட்பத்தில், இளம் உள்ளங்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு ஊக்க சக்தியாக செயல்படுகிறது. நித்தி ஆயோக்கின் டாக்டர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே.சூட், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி, உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

Read More »

தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டம்

சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையம் (NCGG) தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகளுக்கான பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான முதலாவது திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் முதலாவது திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 2024 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்ற இரண்டு வார கால நிகழ்ச்சி முசோரி மற்றும் புது தில்லியில் நடைபெற்றது. இலங்கை, ஓமான், தான்சானியா, கென்யா, சீஷெல்ஸ், மலேசியா, கம்போடியா, மாலத்தீவு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த 30 மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களுக்கிடையே கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும், சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும்,  புதுமையான அணுகுமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு-ஆளுமை, நிலையான வளர்ச்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களில் இந்த திட்டம் கவனம் செலுத்தியது, இது நிர்வாக நடைமுறைகளில்  சிறந்து விளங்குவதற்கான சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின்   உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பேசிய, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய மையத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டே, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, மின்னணு நிர்வாக நடைமுறைகளில் முன்னோடியாகத் திகழும் இந்தியாவின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையிலான முன்னேற்றத்திற்கு வழிவகுத்த “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார். கழிவு மேலாண்மை போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் டாக்டர் பாக்டே வலியுறுத்தினார், இந்த அம்சங்களில் பயனுள்ள வழிமுறைகள் நீண்டகால அடிப்படையிலான நேர்மறையான சூழல் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அந்தந்த நாடுகளைச் சார்ந்த விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன. அதில் தங்கள் நாடுகளில் உள்ள நிர்வாக கட்டமைப்புகள் மற்றும் மேம்பாட்டு உத்திகளை காட்சிப்படுத்தினர்.

Read More »

சிறந்த நிர்வாகத்திற்கான 25 – வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள்

தலைசிறந்த நிர்வாக நடைமுறைகள் குறித்து அறிந்துகொள்வதற்கும், அதனைப் பின்பற்றுவதற்கும் உதவிடும் வகையில் சிறந்த நிர்வாகத்திற்கான 25 – வது தேசிய இணையவழிக் கருத்தரங்குகள் – 25- 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 – ம் தேதி அன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அதிகாரிகளுடன் மெய்நிகர் மாநாடுகள் / இணையவழிக் கருத்தரங்குகளை நடத்துமாறு மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறைக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக பிரதமரின் விருதுகளைப் பெற்றவர்கள் இதில் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமரின் அறிவுறுத்தல்களையடுத்து, பொது நிர்வாகத்தில் சிறப்பாக செயல்பட்டதற்க்காக பிரதமரின் விருதுகளைப்                 பெற்றவர்கள் அளிக்கும் பரிந்துரைகளைப் பரப்புவதையும், பின்பற்றுவதையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை [DARPG] 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை, சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்குகளை மாதந்தோறும் நடத்தி வருகிறத. ஒவ்வொரு இணையவழிக் கருத்தரங்கிலும் சம்பந்தப்பட்டத் துறைகள், மாநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில நிர்வாகப் பயிற்சி மையங்கள் மற்றும் மத்திய பயிற்சி மையங்களிலிருந்து  சுமார் 1000 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்த இணையவழிக் கருத்தரங்குகள் நிறுவனமயமாக்கல் / நிலைத்தன்மையின் தற்போதைய நிலையை முன்னிறுத்துவதுடன், அதன் பிரதிபலிப்பு / விரிவாக்கத்தின் நிலை குறித்த நுண்ணறிவுகளையும் வழங்குகின்றன. 25வது இணையவழிக் கருத்தரங்குகள் 2024 ம் ஆண்டு நவம்பர் மாதம் 29 – ம் தேதி அன்று நடைபெற்றது, இதில் “India@100 – நிர்வாக சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் சர்வதேச செலாவணி நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் உரை நிகழ்த்தினார். இந்த இணையவழிக் கருத்தரங்கிற்கு சிறந்த நிர்வாகத்திற்கான தேசிய இணையவழிக் கருத்தரங்கு அமைப்பின் தலைமை இயக்குநர் திரு சுரேந்திரகுமார் பாக்டே மற்றும் DARPG கூடுதல் செயலாளர் திரு புனீத் யாதவ் ஆகியோர் கூட்டாகத் தலைமை தாங்கினர். மேலும் இந்த கருத்தரங்கில் துறையின் இணைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் 824 இடங்களில் நடைபெற்ற இந்த இணையவழிக் கருத்தரங்கில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் நிர்வாக சீர்திருத்தத் துறைகளின் மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள், மத்திய, மாநில நிர்வாக பயிற்சி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More »

மத்திய அறங்காவலர் வாரியத்தின் (CBT), 236 – வது கூட்டம் மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது

மத்திய அறங்காவலர் வாரியத்தின் 236-வது கூட்டத்திற்கு மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சரும், மத்திய அறங்காவலர் வாரியத்தின், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் துணைத் தலைவருமான செல்வி ஷோபா கரண்ட்லஜே, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளரும், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் மத்திய தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான திருமதி சுமிதா தவ்ரா, மத்திய வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆணையர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மத்திய அறங்காவலர் வாரியத்தின் கடைசி கூட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது. தானியங்கி முறையில் உரிமைத் தொகை மீதான கோரிக்கைகளுக்கு சேமநல நிதியில் சேமிக்கப்பட்டுள்ள தொகைகளை வழங்கும் வசதியைப் பெறுவதற்கான உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து  1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இது வீட்டுவசதி, திருமணம், கல்வி போன்ற செலவுகளுக்கான முன்பணத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.15 கோடி ரூபாய் அளவிலான உரிமை கோரல் மனுக்களுக்கு தானியங்கி முறையில் தீர்வு செய்யப்பட்டுள்ளன. 2024 – ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உரிமை கோரல் மனுக்களின் நிராகரிப்பு விகிதம் 14% ஆக குறைந்துள்ளதற்கு வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2023-24 – ம் நிதியாண்டில், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு 1.82 லட்சம் கோடி ரூபாய்க்கான  4.45 கோடி உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. நடப்பு நிதியாண்டில், 1.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் 3.83 கோடி ரூபாய்க்கான உரிமை கோரல் விண்ணப்பங்களுக்கு ஏற்கனவே தீர்வு காணப்பட்டுள்ளன. CITES 2.01 திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் [EPFO] வன்பொருள் மற்றும் மென்பொருள் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2.01 புதிய இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது இழப்பீட்டுச் செயல்முறையை எளிதாக்கும். புதிய மென்பொருள் தொகுப்பு பொதுவான கணக்கு எண் (யுஏஎன்) அடிப்படையிலான கணக்கியலை சாத்தியமாக்கும், இதன் விளைவாக ஒரு உறுப்பினர், ஒரு கணக்கு முறை உருவாகும், இதன் மூலம் இழப்பீடு தீர்ப்பதில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறையும். சீர்திருத்தம் குறித்த ஆலோசனைகளுக்குப் பின்னர் மத்திய அறங்காவலர் வாரியத்தின் கூட்டத்தில் பல முன்னோடி முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் வாரியம் எடுத்த முக்கிய முடிவுகள் வருமாறு: உறுப்பினர்களின் நலனுக்கான முடிவுகள்: •          தொழிலாளர் சேமநல நிதிச் சட்டம் 1952 – ன் பிரிவு 60 (2) (பி) – ன் குறிப்பிடத்தக்க திருத்தத்திற்கு மத்திய அறங்காவலர் வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போதுள்ள விதிகளின்படி, மாதத்தின் 24- ம் தேதி வரை தீர்க்கப்பட்ட உரிமைகோரலுக்கு, முந்தைய மாத இறுதி வரை மட்டுமே வட்டி செலுத்தப்படும். இனி செட்டில்மென்ட் தேதி வரை உறுப்பினருக்கு வட்டி வழங்கப்படும். இதன் மூலம் உறுப்பினர்களுக்கு நிதிப் பயன் கிடைப்பதுடன், குறைகளும் குறையும். தற்போது வரை, உறுப்பினர்களுக்கு வட்டி இழப்பைத் தவிர்ப்பதற்காக மாதந்தோறும் 25 ஆம் தேதி முதல் இறுதி வரை வட்டி தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை. இந்த முடிவுக்குப் பிறகு, இந்த கோரிக்கைகள் முழு மாதத்திற்கும் செயலாக்கப்படும், இது நிலுவையில் உள்ள உரிமை கோரல் விண்ணப்பங்கள் எண்ணிக்கை குறைக்கப்படும். சரியான நேரத்தில் தீர்வு, வளங்களின் சிறந்த பயன்பாடு ஆகியவற்றிற்கு இது வழிவகுக்கும். திறமையான, வெளிப்படையான மற்றும் உறுப்பினரை மையமாகக் கொண்ட சேவை வழங்கலுக்கான தொழிலாளர் சேமநல நிதி  அமைப்பின் [EPFO] உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.

Read More »

உலக எய்ட்ஸ் தினம் 2024

​1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினம், ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பெருந்தொற்றுக்கு எதிரான ஒற்றுமையை நிரூபிப்பதற்கும் மக்களை ஒன்றிணைப்பதற்கான உலகளாவிய தளமாக செயல்படுகிறது. தற்போதைய சவால்களை முன்னிலைப்படுத்தும் அதே வேளையில், தடுப்பு, சிகிச்சை மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிக்க அரசுகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களுக்கு இது ஒரு வாய்ப்பாகும். மிக முக்கியமான சர்வதேச சுகாதார அனுசரிப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள், விழிப்புணர்வை பரப்புவது மட்டுமல்லாமல், எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களை நினைவுகூர்கிறது மற்றும் சுகாதார சேவைகளுக்கான விரிவாக்கப்பட்ட அணுகல் போன்ற மைல்கற்களைக் கொண்டாடுகிறது. ஹெச்.ஐ.வி ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக இருப்பதைப் பற்றிய புரிதலை வளர்ப்பதன் மூலம், உலக எய்ட்ஸ் தினம், அந்நோயை எதிர்த்துப் போராடுவதற்கும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமையை அடைவதற்கும் இடையிலான ஒருங்கிணைந்த தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2024 கருப்பொருள்: “உரிமையின் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!”  2024 க்கான கருப்பொருள், “உரிமைப் பாதையில் செல்லுங்கள்: என் உடல்நலம், என் உரிமை!” என்பதாகும். பாதிக்கப்படக்கூடிய மக்கள் அத்தியாவசிய ஹெச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெறுவதைத் தடுக்கும் முறையான சமத்துவமின்மைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஒவ்வொருவரும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஆரோக்கியத்திற்கான தங்கள் உரிமையைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வதில் மனித உரிமைகளின் பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. இந்த உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையில் கவனம் செலுத்துவதன் மூலம், 2024 பிரச்சாரம், உள்ளடக்கத்தை வளர்ப்பதற்கும், களங்கத்தைக் குறைப்பதற்கும், பொது சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸை ஒழிப்பதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கும் முயல்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸின் தற்போதைய நிலை​ ஹெச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டுத் திட்டம் வெளியிட்ட உலகளாவிய எய்ட்ஸ் புதுப்பிப்பு 2023 இன் படி, ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை எதிர்த்துப் போராடுவதில் உலகளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளன, அங்கு ஒரு வலுவான சட்ட கட்டமைப்பு மற்றும் அதிகரித்த நிதி முதலீடுகள்,  எய்ட்ஸ் ஒரு பொது சுகாதார அச்சுறுத்தலாக இருப்பதை 2030 க்குள் முடிவுக்கு கொண்டு வரும் இலக்கை நோக்கிய முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளன. குறிப்பாக, பாதிக்கப்படக்கூடிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களை வலுப்படுத்தியதற்காக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இந்தியாவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஹெச்.ஐ.வியுடன் வாழ்ந்து வருவதை இந்தியா ஹெச்.ஐ.வி மதிப்பீடுகள் 2023 அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இருந்தபோதிலும், நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது, வயது வந்தோருக்கான ஹெச்.ஐ.வி பாதிப்பு 0.2% ஆகவும், வருடாந்திர புதிய ஹெச்.ஐ.வி நோய்த்தொற்றுகள் 66,400 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2010 முதல் 44% குறைவு. உலகளாவிய குறைப்பு விகிதத்தை விட இந்தியா 39% சிறப்பாக செயல்பட்டுள்ளது, இது நீடித்த தலையீடுகளின் வெற்றியை நிரூபிக்கிறது. ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு இந்தியாவின் பதில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போர் 1985-ஆம் ஆண்டில் பல்வேறு மக்கள்தொகை குழுக்கள் மற்றும் புவியியல் இடங்களில் தொற்றைக் கண்டறியும் பணி செரோ-கண்காணிப்புடன் தொடங்கியது. ஆரம்ப கட்டம் (1985-1991) ஹெச்.ஐ.வி நோயாளிகளை அடையாளம் காணுதல், ரத்தமாற்றங்களுக்கு முன் ரத்த பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இலக்கு விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. 1992-ஆம் ஆண்டில் தேசிய எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பு வேகம் பெற்றது. இது நாட்டில் ஹெச்.ஐ.வி / எய்ட்ஸைக் கையாள்வதற்கான முறையான மற்றும் விரிவான அணுகுமுறையின் தொடக்கத்தைக் குறித்தது. முடிவு உலக எய்ட்ஸ் தினம் 2024 ஹெச்.ஐ.வி / எய்ட்ஸை அகற்ற இன்னும் செய்ய வேண்டிய பணிகளை நினைவூட்டுகிறது. தடுப்பு, சிகிச்சை மற்றும் கவனிப்பு ஆகியவற்றில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும், முறையான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சமூக களங்கம் போன்ற சவால்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். 2030-க்குள் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டுவரும் இலக்கை நோக்கி உலகம் நெருங்கி வரும் நிலையில், இந்தியாவின் முயற்சிகள் கூட்டு நடவடிக்கை, புதுமையான உத்திகள் மற்றும் சுகாதார சமத்துவத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

Read More »

உலக எய்ட்ஸ் தினம் -இந்தூரில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா தலைமை வகிக்கிறார்

உலக எய்ட்ஸ் தினம் 2024-ஐ முன்னிட்டு, 2024 டிசம்பர் 01 அன்று மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா, மத்தியப் பிரதேச மாநிலம் இந்நூலில் நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 1 அன்று உலக எய்ட்ஸ் தினம்  அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு வகையில் ஹெச்ஐவி, எய்ட்ஸுக்கு எதிரான இந்தியாவின் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் மீதான ஐநா திட்டத்தின் கருப்பொருளான ‘உரிமைகளை எடுத்துக்கொள்’ என்ற கருப்பொருளுடன் இந்த உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹெச்ஐவி / எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றுவது, அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகள்,  விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது. மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) 1992-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1-ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினத்தை கடைபிடித்து வருகிறது. சமூகம், இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை ஒன்றிணைத்து நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.  2030-ம் ஆண்டுக்குள் ஹெச்ஐவி / எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவரும் உலகளாவிய இலக்கை நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read More »

பீகார் மாநிலம் மதுபானியில், மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி

பீகார் மதுபானியில், அம்மாநிலத் துணை முதலமைச்சர் திரு. சாம்ராட் சவுத்ரி முன்னிலையில், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) ஸ்ரீ ராம்பிரீத் மண்டல்; திரு சஞ்சய் குமார் ஜா; டாக்டர் அசோக் குமார் யாதவ்; மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) திரு வினோத் நாராயண் ஜா; ஸ்ரீ சுதான்ஷு சேகர்; மற்றும் ஸ்ரீ கன்ஷ்யாம் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிதிச் சேவைகள் துறை (DFS) செயலாளர் திரு. எம். நாகராஜு,  நபார்டு வங்கித் தலைவர் திரு கே வி ஷைஜி; சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் திரு எம்.வி.ராவ்,; இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் திரு மனோஜ் மிட்டல்; நிதிச் சேவைகள் துறைத் தலைவர் கூடுதல் செயலாளர் திரு எம்.பி.டாங்கிராலா மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் மாவட்ட மேலாண்மை இயக்குநர் திரு சுரிந்தர் ராணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுபானி நகருக்கு வருகை தந்ததற்காக மத்திய நிதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த திரு சாம்ராட் சௌத்ரி, குறிப்பாக அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கான மத்திய நிதியமைச்சரின் மேற்பார்வையில் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடனுதவி குறித்த விழிப்புணர்வு திட்டத்தில், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சில மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் (ஏபி பிஎம்-ஜேஏஒய்) அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. பல்வேறு வங்கிகள் மூலம் 50,294 பயனாளிகளுக்கு 1,121 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டது. பல்வேறு ஊரக சாலை திட்டங்களுக்கு நபார்டு மற்றும் சிட்பி வாயிலாக முறையே 155.84 கோடி ரூபாய் மற்றும் 75.52 லட்சம் ரூபாய் அளவிற்கு அனுமதி அளிக்கப்பட்டன. பின்னர், வங்கிகள் மற்றும் நபார்டு வங்கியால் கடனுதவி அளிக்கப்பட்ட தொழில்முனைவோரின் பல்வேறு உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட சுமார் 25 அரங்குகளை திருமதி சீதாராமன் பார்வையிட்டார். மைதிலி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் தலா ஐந்து அரசியல் சாசன பிரதிகளை மத்திய நிதியமைச்சர் வழங்கினார். பள்ளிகளில், குறிப்பாக மகளிர் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகள், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கியுள்ளன. ஆம்புலன்ஸை வாகனத்தையும் மத்திய நிதியமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Read More »