இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கு இடையிலான இருதரப்பு கூட்டு இராணுவப் பயிற்சியான அக்னி வாரியர் (XAW-2024) – ன் 13-வது பதிப்பு, மஹாராஷ்ட்ரா மாநிலம் தேவ்லாலியில் உள்ள ஃபீல்ட் ஃபயரிங் ரேஞ்ச்ஸில் நடைபெற்ற 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி அன்று நிறைவடைந்தது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ம் தேதிமுதல் 30-ம் தேதி வரை நடைபெற்ற இந்த மூன்று நாள் பயிற்சியில், சிங்கப்பூர் பீரங்கிப் படையைச் சேர்ந்த 182 வீரர்கள், பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த 114 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவ வீரர்களும் பங்கேற்றனர். ஐ.நா. அவையின் சாசனத்தின் கீழ் உலகளவில் பல்வேறு நாடுகளிடையே கூட்டு இராணுவப் பயிற்சிகள் மற்றும் நடைமுறைகள் குறித்த பரஸ்பர புரிதலை அதிகரிப்பதே XAW-2024 – ன் நோக்கமாகும். இந்த பயிற்சியில் இரு நாட்டு இராணுவம், மற்றும் பீரங்கிப் படைகளின் கூட்டுத் திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் புதிய தலைமுறை உபகரணங்களின் பயன்பாடு ஆகியவை இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பீரங்கிப் படை தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் அடோஷ் குமார், பீரங்கிப் பயிற்சிப் பள்ளியின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.சர்னா, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தலைமை பீரங்கிப் படை அதிகாரி கர்னல் ஓங் சியோ பெர்ங் ஆகியோர் கலந்து கொண்டனர். உயர் தொழில்முறை சார்ந்த நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியதற்காக பயிற்சியில் பங்கேற்ற துருப்புக்களுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். .இவ்விரு படைகளின் விரிவான தயார்நிலை, ஒருங்கிணைப்பு, இருநாட்டு வீரர்களின் திறன்கள், நடைமுறைகள், இந்திய – சிங்கப்பூர் பீரங்கிப் படைப் பிரிரிவுகளுக்கு இடையிலான பொதுவான பரிணாம ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த பயிற்சியில் அடங்கும். சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்கள் பெற்ற வெற்றிகரமான பயிற்சியின் உச்சக்கட்டமாக இது அமைந்தது. இரு நாட்டு கூட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக இருதரப்பினரும் பயிற்சியின் போது முக்கிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியதுடன் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
Read More »இலையுதிர் காலம் 2024 – பயிற்சி முடித்த கடற்படை வீரர்களின் அணிவகுப்பு
எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தில் (ஐ.என்.ஏ) சனிக்கிழமை அன்று நடைபெற்ற பயிற்சி முடித்த கடற்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பில், இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தின் 107-வது தொகுப்பில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மொத்தம் 239 வீரர்கள், சிறப்புக் கொடியுடன் பட்டம் பெற்றது, தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களில் நான்கு நாடுகளைச் சேர்ந்த எட்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 29 பெண் வீரர்களும் அடங்குவர். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்த அணிவகுப்பை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத் தொடர்ந்து பயிற்சியின் பொது தங்களது திறமையை வெளிப்படுத்திய வீரர்களுக்கு அவர் பதக்கங்களை வழங்கினார். தலைமை விருந்தினருடன் கடற்படை நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் (NWWA) தலைவர் திருமதி சஷி திரிபாதியும் கலந்து கொண்டார். தெற்கு கடற்படை தலைமை கொடி அதிகாரி தலைமைத் தளபதி வி.ஏ.டி.எம் வி.ஸ்ரீனிவாஸ் பயிற்சிக்கான அதிகாரியாக பணியாற்றினார். இந்திய கடற்படை பயிற்சி நிறுவனத்தின் கமாண்டன்ட் சி.ஆர்.பிரவீன் நாயர் மற்றும் என்.டபிள்யூ.டபிள்யூ.ஏ எழிமலா தலைவர் திருமதி தீபா பட் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்பட்டன:- (a) இந்திய கடற்படை அகாடமி B.Tech பாடநெறிக்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் கப்பல் பணியாளர் ஆயுஷ் குமார் சிங்கிற்கு வழங்கப்பட்டது. (b) இதே பாடத்திட்டத்திற்கான CNS வெள்ளிப் பதக்கம் மற்றும் FOC-in-C தெற்கு வெண்கலப் பதக்கம் முறையே மிட்ஷிப்மேன் கரண் சிங் மற்றும் மிட்ஷிப்மேன் கார்த்திகே வி வெர்னேகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. (c) கடற்படை நோக்குநிலை பாடநெறிக்கான (நீட்டிக்கப்பட்ட) சிஎன்எஸ் தங்கப் பதக்கத்தை ஸ்ரீலண்ட் ரித்விக் மிஸ்ரா பெற்றார், அதே நேரத்தில் கேடட் ஸ்ராஜன் ஜெயின் மற்றும் எஸ்எல்டி போடேகர் எஸ் சுபாஷ் ஆகியோர் முறையே எஃப்ஓசி-இன்-சி சவுத் வெள்ளிப் பதக்கம் மற்றும் கமாண்டன்ட் ஐஎன்ஏ வெண்கலப் பதக்கம் பெற்றனர். (d) எஸ்.எல்.டி ஈஷா 39 என்.ஓ.சி படைப்பிரிவிற்கான சி.என்.எஸ் தங்கப் பதக்கத்தையும், கமாண்டன்ட் ஐ.என்.ஏ வெள்ளிப் பதக்கத்தையும், சிறந்த அனைத்து சுற்று பெண் வீரர்களுக்கான ஜமோரின் கோப்பையையும் முறையே எஸ்.எல்.டி மதி நேசிகா டி மற்றும் எஸ்.எல்.டி ஈஷா ஷா ஆகியோர் பெற்றனர். (e) கடலோர காவல்படை தலைமை இயக்குனர் சிறந்த உதவி கமாண்டன்ட் விருது உதவி கமாண்டன்ட் ஆகாஷ் திவாரிக்கு வழங்கப்பட்டது. வெற்றிகரமான பயிற்சியை முடித்த வீரர்கள் பளபளக்கும் சடங்கு வாள்கள் மற்றும் துப்பாக்கிகளுடன் கண்கவர் முறையில் அணிவகுத்துச் சென்றனர்,. உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகளில் ஒரு பாரம்பரியமான இந்த நெகிழ்ச்சியான பிரியாவிடை, இந்திய கடற்படை அகாடமியில் அவர்களது பயிற்சியின் இறுதிக் கட்டத்தை குறிப்பதாக உள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியில் பேசிய கடற்படைத் தளபதி இராணுவத் தலைவர்களின் உண்மையான வலிமை “ஒவ்வொரு செயல்பாடு மற்றும் பணியிலும் வெற்றியை அடைய தங்கள் அணிகளை ஊக்குவிக்கும் திறன், தீர்க்கமாக செயல்படுதல் மற்றும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க” அவர்களின் திறனில் உள்ளது என்று வலியுறுத்தினார்.
Read More »ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்காக கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
2024 – ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி அன்று கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் INS விக்ரமாதித்யா போர்க் கப்பலின் குறுகிய கால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் பணிகளுக்கான (SRDD) ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ரமாதித்யா 2013- ம் ஆண்டு நவம்பர் மாதம் 30 – ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ஒரு இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகும். மறுபொருத்தம் போன்ற பராமரிப்புப் பணிகள் முடிந்ததும், ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பல் மேம்படுத்தப்பட்ட போர் திறனுடன் இந்திய கடற்படையில் சேரும். கப்பல் பராமரிப்பு, பழுது பார்த்தல், மாற்றியமைத்தல் (MRO) போன்ற பணிகளை மேற்கொள்ளும் மையமாக செயல்படும் இந்த கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான இத்திட்டம் ஒரு முக்கியமான படியாகும். இந்தத் திட்டம் சுமார் 50 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பணிகளில் ஈடுபடுத்துவதுடன், 3500-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும். தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்தத் திட்டம் பெரும் உத்வேகத்தை அளிக்கும்.
Read More »6 நிறுவனங்களின் நிர்வாக தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்- இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் கையெழுத்திட்டது
மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA-ஐஐசிஏ), புதுதில்லியில் உள்ள தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (NFRA-என்எஃப்ஆர.ஏ) தலைமையகத்தில் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு என்எஃப்ஆர்ஏ தலைவரும், ஐஐசிஏ-வின் டி.ஜி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் அஜய் பூஷண் பாண்டே தலைமை வகித்தார் . கோர்ன் ஃபெர்ரி, ஏபிசி கன்சல்டன்ட்ஸ், ஈஎம்ஏ பார்ட்னர்ஸ் லிமிடெட், டிஹெச்ஆர் குளோபல், ஷெஃபீல்ட் ஹாவொர்த், வஹுரா ஆகிய ஆறு முன்னணி நிர்வாக தலைவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த ஒத்துழைப்பு இந்திய நிறுவனங்களில் இயக்குநர்கள் குழுவில் இயக்குநர்களுக்கான தேர்வையும் நியமன செயல்முறைகளையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது இந்திய நிறுவனங்களின் நிர்வாக வாரியங்களில் கார்ப்பரேட் நிர்வாகச் சிறப்பை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும். இது குறித்து டாக்டர் அஜய் பூஷண் பாண்டே கருத்து தெரிவிக்கையில், நிறுவனங்களுடனான இந்த ஒத்துழைப்பு, நவீன வாரிய செயல்முறைகளில் வளர்ந்து வரும் தேவைகளுடன் இணைந்து, திறமையான நிபுணர்களுக்கான தேவைகளை உறுதி செய்யும் என்றார். இந்த முன்முயற்சிகள், வாரியத் தலைமை, தேர்வு நடைமுறைகள், மதிப்பீட்டு நடைமுறைகள், இந்திய இயக்குநர் குழுவை உலகத் தரத்துடன் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் கார்ப்பரேட் ஆளுமையை மேம்படுத்துவதற்கான ஐஐசிஏ-வின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கிறது.
Read More »இளைஞர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்களாக உள்ளனர்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் தோய்முகில் உள்ள ரோனோ ஹில்ஸில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மக்களின் விருப்பங்களும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று கூறினார். விவாதம், உரையாடல், பேச்சு ஆலோசனைகளிலிருந்து விலகி, இடையூறை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் கடுமையாக விமர்சித்தார். நாட்டின் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை கண்காணித்து வருவதாகவும், ஜனநாயகத்தின் காவலர்களாக செயல்படுவதாகவும், திரு ஜக்தீப் தன்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். பாரபட்சம், ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவை இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் வரலாறு காணாத உயர்வை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், கடல், நிலம், வானம், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். இந்தியா ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உள்ளது என்றும், மூன்றாவது பெரிய நாடாக மாறுவதற்கான பாதையில் தற்போது உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.
Read More »केंद्रीय बंदर वाहतूक आणि जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल आणि इटलीचे उद्योगमंत्री अडोल्फो उर्सो यांची भेट, मजबूत सागरी सहकार्याची घेतली शपथ
केंद्रीय बंदरे, जहाजबांधणी आणि जलमार्ग मंत्री सर्बानंद सोनोवाल यांनी आज मुंबई येथे उभय देशांमधील सागरी सहकार्य अधिक दृढ करण्याच्या दृष्टिकोनातून इटली सरकारचे उद्योगमंत्री अडोल्फो उर्सो यांची भेट घेतली. मुंबई बंदरातील इंदिरा डॉक येथे इटालियन नेव्ही स्कूल शिप, AMERIGO VESPUCCI जहाजाच्या येथे ही बैठक पार पडली. त्यानंतर सोनोवाल आणि उर्सो यांनी …
Read More »NCGG ने पार केला यशाचा उल्लेखनीय टप्पा – अग्नेय आशिया व हिंद महासागर क्षेत्रातील सरकारी कर्मचाऱ्यांसाठी सार्वजनिक धोरण आणि प्रशासन याबाबतची पहिली क्षमता बांधणी कार्यशाळा संपन्न
राष्ट्रीय सुशासन केंद्राने (NCGG) आग्नेय आशिया व हिंद महासागर क्षेत्रातील सरकारी कर्मचाऱ्यांसाठी सार्वजनिक धोरण आणि प्रशासन याबाबतची क्षमता बांधणी कार्यशाळेचे नुकतेच यशस्वी आयोजन केले. 18 ते 29 नोव्हेंबर 2024 या दोन आठवड्यांच्या कालावधीत मसुरी आणि नवी दिल्लीत ही कार्यशाळा संपन्न झाली. श्रीलंका, ओमान, टांझानिया, केनिया, सेशेल्स, मलेशिया, कंबोडिया, मालदीव्ज व म्यानमार या देशांचे 30 वरीष्ठ अधिकारी यामध्ये सहभागी झाले होते. या कार्यशाळेत उपस्थित प्रतिनिधींना आपल्या कल्पनांची …
Read More »55 व्या आंतरराष्ट्रीय भारतीय चित्रपट महोत्सवाची शानदार सोहळ्याने सांगता
प्रत्येक चांगल्या गोष्टीलाही अखेर असतेच, याच तत्वाला अनुसरून यंदा गोव्यात झालेल्या आंतरराष्ट्रीय भारतीय चित्रपट महोत्सवाचा, गोव्यातील डॉ. श्यामाप्रसाद मुखर्जी इनडोअर स्टेडीयम मध्ये 28 नोव्हेंबर 2024 रोजी झालेल्या शानदार आणि रंगतदार सोहळ्याने समारोप झाला. पण अर्थातच या महोत्सवाने आणि त्यांच्या रंगतदार सांगता सोहळ्याने सिनेमाची जादू आणि कथात्मक मांडणीची अतिव ओढ साजरी करण्याच्या भावनेवर स्वतःची अमिट छापही सोडली …
Read More »भारतीय लष्कर आणि सिंगापूरचे सशस्त्र दल यांच्यामधील द्विपक्षीय संयुक्त लष्करी सराव उपक्रमा अंतर्गतच्या अग्नी वॉरियर – 2024 या संयुक्त सरावाची यशस्वी सांगता
भारतीय लष्कर आणि सिंगापूरचे सशस्त्र दल यांच्यामधील द्विपक्षीय संयुक्त लष्करी सराव उपक्रमा अंतर्गतच्या अग्नी वॉरियर (XAW – 2024) या तेराव्या पर्वातील सरावाचा आज दि. 30 नोव्हेंबर 2024 रोजी समारोप झाला. महाराष्ट्रात देवळाली इथल्या फील्ड फायरिंग रेंज इथे या सरावाचे आयोजन केले होते. 28 ते 30 नोव्हेंबर 2024 अशा तीन दिवसांच्या कालावधीत हा सराव फार पडला. या सरावात सहभागी झालेल्या सिंगापूरच्या सशस्त्र …
Read More »हिवाळी सत्र 2024 – दीक्षांत संचलन
भारतीय नौदल अकादमी (आयएनए), एझिमला इथे आज 30 नोव्हेंबर 2024 रोजी हिवाळी सत्राचे दिमाखदार दीक्षांत संचलन पार पडले. या संचलनात एकूण 239 प्रशिक्षणार्थी सहभागी झाले होते. आयएनए च्या 107 व्या तुकडीचे प्रशिक्षणार्थी, नौदल अभिमुखता अभ्यासक्रमाच्या (विस्तारित) 38 व 39 व्या तुकडीचे छात्र, 39 वा नौदल अभिमुखता अभ्यासक्रम (नियमित) आणि 40 व्या नौदल अभिमुखता अभ्यासक्रमाचे छात्र (तटरक्षक दल व परदेशी) यामध्ये सहभागी झाले होते. या सर्वांनी त्यांचे प्रशिक्षण …
Read More »