விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி 04, 2026) பெங்களூருவில் தொடங்கியது. விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், இலகுரக போர் விமானமான தேஜஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக ஏடிஏ-வைப் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுத் துறை செயலாளரும், …
Read More »செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடர்பான ராஜஸ்தான் அளவிலான மண்டல மாநாடு ஜனவரி 6-ம் தேதி நடைபெறுகிறது – மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்கிறார்
இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராஜஸ்தான் மண்டல மாநாடு 2026 ஜனவரி 6 அன்று ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு மூலம் பொருளாதார வளர்ச்சி, புதுமை, உள்ளடக்கிய வளர்ச்சி போன்றவை குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாட்டில் மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் அரசின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப …
Read More »தெலங்கானாவில் தனியார் நிறுவனத்தின் நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை திறந்து வைக்கிறார்
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நாளை (ஜனவரி 5, 2026) நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு பண்ணையை திறந்து வைக்கிறார் . ஸ்மார்ட் கிரீன் அக்வாகல்ச்சர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் முதல் வணிக அளவிலான வெப்பமண்டல மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பு அடிப்படையிலான ரெயின்போ டிரவுட் மீன்வளர்ப்பு பண்ணை மற்றும் …
Read More »செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாக மட்டுமின்றி மாற்றங்களுக்கான வாய்ப்பாகவும் உள்ளது: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உலக அளவில் பொருளாதார சமூக மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (10.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையம் மற்றும் ஒடிசா மாநிலம் ராய்ரங்க்பூரில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலம் அவர் தொடங்கி வைத்தார். மேலும், தேசிய அளவிலான திறன் மேம்பாட்டு போட்டியையும் அவர் இன்று …
Read More »ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தன்னம்பிக்கை, ஒருங்கிணைந்த உறுதிப்பாடு மற்றும் நாட்டின் பெருமையை நினைவில் கொள்ளும் வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகவும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் தெளிவான தொலைநோக்குப் …
Read More »பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
“ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள்” என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார். இந்தக் கண்காட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மீட்டுக் கொண்டுவரப்பட்ட பிப்ரவா நினைவுச்சின்னங்களை, புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் …
Read More »நாடு தழுவிய வாய்ஸ் ஓவர் வைஃபை சேவை: அனைத்து வட்டங்களிலும் பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ளது
இந்தப் புத்தாண்டில், இந்தியாவின் முதன்மையான அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், நாடு தழுவிய அளவில் வைஃபை அழைப்பு எனப்படும் வாய்ஸ் ஓவர் வைஃபை சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த மேம்பட்ட சேவை இப்போது நாட்டின் ஒவ்வொரு தொலைத்தொடர்பு வட்டத்திலும் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும், இது சவாலான சூழல்களிலும் தடையற்ற, உயர்தர இணைப்பை உறுதி செய்யம். வைஃபை நெட்வொர்க் மூலம் குரல் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பவும் பெறவும் இது உதவுகிறது. வீடுகள், அலுவலகங்கள், அடித்தளங்கள், தொலைதூர பகுதிகள் …
Read More »பெருநிறுவன விவாகரங்கள் அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த மதிப்பீடுகள்
நாட்டில் உள்ள பெருநிறுவனங்களின் செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஆண்டில் பல்வேறு முக்கிய முன்முயற்சிகளை மேற்கொண்டது. 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை அத்துறைக்கான மத்திய அமைச்சகம் மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக சிறு நிறுவனங்களில் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்திற்கான உச்சவரம்பு மற்றும் விற்பனை உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிதாக வர்த்தகம் புரிவதை ஊக்குவிக்கும் வகையில், கொள்கைகள், ஒழுங்குமுறை நெறிமுறைகள், தொழில்நுட்பம் …
Read More »ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின் தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது
2026-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வின், (தாள் -5) தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத் தேர்வு ஜனவரி 19-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2026 ஜனவரி 15 – ம் தேதி (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள மாநகராட்சி பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பட்டயக் கணக்காளர் இடைநிலைத் தேர்வு, குரூப் II, தாள் – 5, தணிக்கை மற்றும் நெறிமுறைகள் பாடத்திற்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. மேற்கண்ட பாடத்திற்கான தேர்வு, 2026 ஜனவரி 19 – ம் தேதி (திங்கட்கிழமை) அன்று …
Read More »ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது
ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. தில்லியில் உள்ள ட்ராய் பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நகர்ப்புற பகுதிகள், நிறுவனங்கள் அமைந்துள்ள முக்கிய பகுதிகள், பொதுப் போக்குவரத்து பகுதிகள் மற்றும் அதிவிரைவு முனையங்கள் போன்றவற்றில் நிகழ்நேர மொபைல் நெட்வொர்க் செயல்பாடுகள் குறித்து இந்த ஆய்வு நடைபெற்றது. 2025 நவம்பர் 11 முதல் 13 வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், …
Read More »
Matribhumi Samachar Tamil