உலக பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள பட்டியலை அதிகரிப்பது என்பது தொடர் செயல்முறையாகும். உலக பாரம்பரிய பட்டியலில் இந்தியா 43 கலைச்சின்னங்களைக் (35 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு) கொண்டுள்ளது. யுனெஸ்கோவின் செயல்பாட்டு வழிகாட்டுதல் நடைமுறைகள் 2023-ன் படி, ஆண்டு தோறும் உலகப் பாரம்பரிய பட்டியலில் சேர்க்க கலாச்சார, இயற்கை அல்லது இரண்டும் கலந்த சொத்துக்கள் மட்டுமே முன்மொழியப்படலாம். 2024-25-ம் ஆண்டிற்கான கல்வெட்டு செயல்முறைக்காக ‘இந்தியாவின் மராத்தா ராணுவ நிலப்பரப்பு’ சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.