Friday, December 05 2025 | 04:04:33 PM
Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

Connect us on:

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய விருது 2025-ஐ குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (2025, டிசம்பர் 03) புதுதில்லியில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மாற்றுத்திறனாளிகள் சமமான தகுதியுடையவர்கள் என்று கூறினார்.

சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களுடைய சமமான பங்களிப்பை உறுதி செய்வதை தொண்டு சார்ந்த அம்சமாக இன்றி, சம்பந்தப்பட்டவர்களின் கடமை என்று குறிப்பிட்டார். மாற்றுத்திறனாளிகளின் சமமான பங்கேற்புடன் மட்டுமே ஒரு சமூகம் உண்மையாக வளர்ச்சியடைந்ததாகக் கருத முடியும் என்று அவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் அடிப்படையிலான, கண்ணியத்தை மையமாகக் கொண்ட சூழலை ஏற்றுக்கொள்வது குறித்து குடியரசுத்தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளை இணைப்பது நமது நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று அவர் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய கண்ணியம் அளிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதாக குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார்.

‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :

https://matribhumisamachar.com/2025/12/10/86283/

आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:

https://www.amazon.in/dp/B0FTMKHGV6

यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक

About Matribhumi Samachar

Check Also

சர்வதேச சிறுத்தைகள் தினத்தையொட்டி வனவிலங்கு ஆர்வலர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

சர்வதேச சிறுத்தைகள் தினமான இன்று (04.12.2025), சிறுத்தைகளைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வனவிலங்குப் பாதுகாவலர்களுக்கும் பிரதமர் …