அல்ஜீரியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் பிரதிநிதியும், மக்கள் தேசிய இராணுவத் தலைமைத் தளபதியுமான ஜெனரல் சைத் சானெக்ரிஹா 2025 பிப்ரவரி 06 முதல் 12 வரை இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். பெங்களூரில் நடைபெறும் ஏரோ இந்தியா 2025-ன் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்குடன் அவர் உரையாடவுள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு தொடர்பான நெகிழ்திறன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்ற தலைப்பில் நடைபெறும் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டிலும் அவர் கலந்துகொள்கிறார். இது உத்திசார்ந்த கூட்டாண்மைகளை நோக்கிய உரையாடலை எளிதாக்கும். ஏரோ இந்தியா நிகழ்வின் போது முக்கிய சந்திப்புகளிலும் அவர் பங்கேற்கிறார்.
புது தில்லியில், தேசியப் போர் நினைவுச்சின்னத்தில் ஜெனரல் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளார். மேலும் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படவுள்ளது. அவர் இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், பாதுகாப்புச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் ஆகியோரைச் சந்தித்து பேசவுள்ளார்.
Matribhumi Samachar Tamil

