சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் சார்பில் 2025 டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் மண்டல சுற்றுச்சூழல் மாநாடு – 2025 நடைபெறவுள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி திரு பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் நீதிபதி திருமதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த இரண்டு நாள் மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி திரு எம்.எம். சுந்தரேஷ் தொடங்கி வைக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, மாநில சுற்றுச் சூழல் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த வழிகள் ஆகியவை தொடர்பாக சுற்றுச்சூழல் நிபுணர்கள், கல்வியாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் போன்றோர் இதில் விவாதங்களை மேற்கொள்வார்கள்.
மாநாட்டில் மூன்று தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெறும். முதல் அமர்வில், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி திரு ஏ. முகமது முஸ்தாக் தலைமையில் “சுற்றுச்சூழல் சட்ட அமலாக்கம் பல்லுயிர் பாதுகாப்பு, ஆகியவற்றில் ஒழுங்குமுறை அதிகாரிகளின் பங்கு” என்ற தலைப்பில் விவாதம் இடம்பெறும். இரண்டாவது அமர்வில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திரு டி. பரத சக்ரவர்த்தி தலைமையில் “திடக்கழிவுகள், உயிரி மருத்துவக் கழிவுகள் மேலாண்மை தொடர்பான கொள்கை கண்ணோட்டம்” என்ற தலைப்பில் விவாதம் நடைபெறும். மூன்றாவது அமர்வில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி திரு சூரஜ் கோவிந்தராஜ் தலைமையில் “கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதில் உள்ள சவால்கள்” என்ற தலைப்பில் விவாதம் இடம்பெறும்.
உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெறும் நிறைவு அமர்வோடு மாநாடு முடிவடையும். இந்த அமர்வில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சுப்ரியா சாஹு உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்புகளை வழங்கியவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப்படுவார்கள்.
‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :
https://matribhumisamachar.com/2025/12/10/86283/
आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:
https://www.amazon.in/dp/B0FTMKHGV6
यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक
Matribhumi Samachar Tamil

