Thursday, January 01 2026 | 10:25:03 PM
Breaking News

இந்தியா-ரஷ்யா இடையேயான வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாட்டு வேளாண் அமைச்சர்கள் சந்திப்பு

Connect us on:

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், கிருஷி பவனில் ரஷ்ய கூட்டமைப்பின் வேளாண் அமைச்சர் திருமதி ஒக்ஸானா லூட்டுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டார். அங்கு இரு தரப்பினரும் தற்போதைய ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்ததுடன்,  எதிர்கால ஒத்துழைப்பு வழிவகைகள் குறித்து ஆலோசித்தனர்.

இந்தியா-ரஷ்யா உறவுகள் நம்பிக்கை, நட்பு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை அமைச்சர்கள் குறிப்பிட்டனர். தற்போது சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் வளர்ந்து வரும் இருதரப்பு விவசாய வர்த்தகத்தை திரு சௌஹான் விளக்கினார். மேலும் சமநிலையான வர்த்தகத்திற்கான அவசியத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் இந்திய உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் விதைகளின் ஏற்றுமதி தொடர்பான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்ததற்காக ரஷ்யாவிற்கு நன்றி தெரிவித்தார்.

விவசாயப் பொருட்களில் வர்த்தகத்தை அதிகரிக்க, உணவு தானியங்கள் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.

சந்திப்பின் போது, வேளாண் ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஐசிஏஆர் மற்றும் ரஷ்யாவின் விலங்கு சுகாதாரத்திற்கான கூட்டாட்சி மையம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது.

அடுத்த ஆண்டு இந்தியா நடத்தும் பிரிக்ஸ் வேளாண்  அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க ரஷ்ய தரப்புக்கு  திரு சௌஹான் அழைப்பு விடுத்தார்.

About Matribhumi Samachar

Check Also

கிம்பர்லி செயல்முறையின் மதிப்புமிக்க தலைமைப் பொறுப்பை 2026 ஜனவரி 1 முதல் இந்தியா ஏற்கிறது

கிம்பர்லி செயல்முறை அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், அதன் தலைமைப் பதவிக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிம்பர்லி செயல்முறையின் தலைவராக …