Wednesday, April 22 2026 | 10:33:10 AM
Breaking News

செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் துறை நடவடிக்கை

Connect us on:

அஞ்சல் துறையில் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்பத்தை இணைக்கவும், சேவைகள் வழங்கப்படுவதை விரிவுபடுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

வேகமான பார்சல் விநியோகங்களுக்கு 233 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தினசரி கையாளப்படும் பார்சல்களில்  30 சதவீதம் வரை விநியோகிக்கின்றன.

பார்சல்களைப பாதுகாப்பாகக் கையாளுவதற்கு வசதியாக 190 பார்சல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  பார்சல்களை பேக்கேஜிங் செய்வதற்கு 1408  மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

ஏடிஎம்கள், இணைய வங்கி, மொபைல் வங்கி மற்றும் சுமூகமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்காக அனைத்து தபால் நிலையங்களும் மின்னணு கேஓய்சி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் ஒரு மைய வங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

அஞ்சல் நிலைய பாஸ்போர்ட் மையங்கள், நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை வழங்குகின்றன.

தொலைதூரப் பகுதிகளில் கூட பதிவு மற்றும் புதுப்பித்தல் சேவைகளை ஆதார் மையங்கள் வழங்குகின்றன.

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம்  உள்பட அரசு மானியத் திட்டங்களுக்கான சரிபார்ப்பு செயல்பாட்டில் அஞ்சலகங்கள் உதவுகின்றன.

கங்கா தீர்த்தம் மற்றும் கோயில் பிரசாத விநியோகத்தில் அஞ்சலகங்கள் ஈடுபட்டுள்ளன.

தகவல் தொடர்பியல் இணையமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திர சேகர் இன்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்று அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

About Matribhumi Samachar

Check Also

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: வன்முறையற்ற வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, …