Sunday, December 07 2025 | 06:49:06 AM
Breaking News

ஏழு நட்சத்திர, ஐந்து நட்சத்திர மதிப்பீடு பெற்ற சுரங்கங்களுக்கான பாராட்டு விழா நாளை நடைபெறுகிறது

Connect us on:

சுரங்க அமைச்சகத்தின் துணை அலுவலகமான இந்திய சுரங்கப் பணியகம், 2023-24-ம் ஆண்டிற்கான நாடு தழுவிய 7 நட்சத்திர, 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற சுரங்கங்களின் செயல்திறனை அங்கீகரிக்கும் ஒரு பிரமாண்டமான நிகழ்வை நடத்துகிறது. நாளை (07.07.2025 – திங்கள்கிழமை) ஜெய்ப்பூரில் நடைபெற உள்ள இந்த விழாவில், இத்துறை பிரமுகர்களும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்வார்கள்.

மத்திய நிலக்கரி, சுரங்க அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா, மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை இணையமைச்சர் திரு. சதீஷ் சந்திர துபே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். சுரங்க அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சஞ்சய் லோஹியாவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்.

2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு, சுரங்கங்களை இயக்குபவர்களிடையே நேர்மறையான சூழலையும் ஆரோக்கியமான போட்டித்தன்மை வாய்ந்த சூழலையும் வளர்க்கிறது. இது சுரங்க சமூகத்தினரிடையே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமும், தேசிய அளவிலான செயல்திறனுக்கான அங்கீகாரமும் சுரங்கத் தொழில் துறையினர் தங்கள் செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உந்துதலாக அமையும். இது சுரங்கத் தொழிலுக்கும் உள்ளூர் சமூகங்களுக்கும் உறுதியான நன்மைகளைத் தருகிறது. இந்தத் திட்டம், நிலையான வளர்ச்சிக் கட்டமைப்பிற்குள் நாடு தழுவிய சுரங்க நடவடிக்கைகளை மதிப்பிடுகிறது. இது முதன்மையாக தற்போதைய, எதிர்கால சந்ததியினரின் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் நலன்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிகழ்வின் போது, ​​2023-24-ம் ஆண்டிற்கான 7 நட்சத்திர மதிப்பீடு பெற்ற மூன்று சுரங்கங்களும் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற 95 சுரங்கங்களும் கௌரவிக்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும்.

About Matribhumi Samachar

Check Also

ரத்தான விமானங்களின் கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற ஏற்பாடு – இண்டிகோ நிறுவன நெருக்கடியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை

விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் …