இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார்.
இருதரப்பு உறவுகளில் வளர்ந்து வரும் வேகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியா-இங்கிலாந்து விரிவான உத்திசார் ஒத்துழைப்பு ஆழமடைவதில் அவர் திருப்தி தெரிவித்தார். தொழில்நுட்ப பாதுகாப்பு முன்முயற்சியின் கீழ் தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர் வரவேற்றார். நம்பகமான, பாதுகாப்பான கண்டுபிடிப்பு சூழல் அமைப்புகளை வடிவமைப்பதற்கான அதன் திறனைப் பிரதமர் குறிப்பிட்டுக் காட்டினார்.
வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், தூய்மையான எரிசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் இங்கிலாந்தின் வலுவான ஆர்வத்தை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் திரு டேவிட் லாமி வெளிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் புதிய பொருளாதார வாய்ப்புகளை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் கடுமையாகக் கண்டித்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான சர்வதேச நடவடிக்கையின் அவசியத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மருக்கு பிரதமர் தமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, பரஸ்பர வசதிக்கேற்ப விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்தார்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

