Wednesday, December 31 2025 | 11:31:32 AM
Breaking News

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

Connect us on:

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம், 1987 – ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த அளவிற்கு சணல் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. 2024-25 – ம் ஆண்டு உணவுதானிய பருவத்திற்கு 100%  உணவு தானியங்களுக்கு சணல் பொருட்கள் மூலம் சிப்பம் கட்டவும், சணல் பைகளில் 20% சர்க்கரையை சிப்பமாக கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம் 1987 – ன் கீழ் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு, சோதனை, பறிமுதல் போன்ற பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஜூன் 16, 2015 அன்று, சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் (சிப்பம் கட்டுவதற்கான பொருட்களில் கட்டாய பயன்பாடு) சட்டம், 1987 – ன் பிரிவு 6, 7 மற்றும் 8 – ன் கீழ் தரவுகள் மற்றும் மாதிரிகளை பெரும் அதிகாரங்கள், நிறுவனங்களின் வளாகங்களை நேரிடையாக ஆய்வு செய்யும் அதிகாரங்கள், தேடுதல் மற்றும் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் போன்ற அதிகாரங்களை மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு வழங்க ஏதுவாக மத்திய அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது.

மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பபித்ரா  மார்கெரிட்டா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :

https://matribhumisamachar.com/2025/12/10/86283/

आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:

https://www.amazon.in/dp/B0FTMKHGV6

यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक

About Matribhumi Samachar

Check Also

ஹிமாச்சலப் பிரதேசத்தின் பட்டி நகரில் நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டை ட்ராய் மேற்கொண்டது

ஹிமாச்சல பிரதேசத்தின் பட்டி நகரில் 2025 நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நெட்வொர்க் தரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை  இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை …