சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்களுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதன் பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கண்காட்சியை 2025 ஜனவரி 22 அன்று நடத்தியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத் தொழில்நுட்பங்கள் குறித்து கல்லூரி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், அதன் தயாரிப்புகள் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும், இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்தின் முன்கள தாக்குதல் வாகனமான அர்ஜூன் பீரங்கி உள்ளிட்ட போர் வாகனங்களின் பயன்பாடுகள் குறித்த செயல் விளக்கமும் கல்லூரி மாணவர்களுக்கு செய்துகாட்டப்பட்டது. 16 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 920 மாணவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
भारत : 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि) व/या भारत : 1857 से 1957 (इतिहास पर एक दृष्टि) पुस्तक अपने घर/कार्यालय पर मंगाने के लिए आप निम्न लिंक पर क्लिक कर सकते हैं
ऑडियो बुक : भारत 1885 से 1950 (इतिहास पर एक दृष्टि)
Matribhumi Samachar Tamil

