Wednesday, January 14 2026 | 03:17:28 AM
Breaking News

ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களுக்கு பிரதமர் நாளை(ஜனவரி 28) பயணம் மேற்கொள்கிறார்

Connect us on:

பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (ஜனவரி 28) ஒடிசா, உத்தராகண்ட் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், புவனேஸ்வரில் உள்ள ஜனதா மைதானத்தில் செழிப்பான ஒடிசா – ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் மாநாடு 2025-ஐ அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, உத்தராகண்ட் மாநிலம் டேராடூனுக்குச் செல்லும் அவர், மாலை 6 மணியளவில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கிறார்.

ஒடிசா அரசால் நடத்தப்படும் இந்த முதன்மையான உலகளாவிய முதலீட்டு உச்சி மாநாடு, கிழக்குப் பிராந்தியத்தின் நங்கூரமாகவும், இந்தியாவின் முன்னணி முதலீட்டு இலக்கு மற்றும் தொழில்துறை மையமாகவும் மாநிலத்தை திகழச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

துடிப்பான தொழில்துறை சூழல் அமைப்பை உருவாக்குவதில் மாநிலத்தின் சாதனைகளை எடுத்துரைக்கும் ஒடிசாவில் உற்பத்தி செய்வோம் கண்காட்சியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு ஜனவரி 28, 29 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒடிசா ஒரு விருப்பமான முதலீட்டு இடமாக திகழக்கூடிய வாய்ப்புகளை ஒன்றிணைத்து விவாதிக்க இது ஒரு தளமாகச் செயல்படும். இந்த மாநாட்டில் உலகில் உள்ள முதலீட்டாளர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு, தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் தலைவர்களின் வட்டமேசை விவாதங்கள், துறைசார் அமர்வுகள், வர்த்தக நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டங்கள் மற்றும் கொள்கை விவாதங்கள் நடைபெறும்.

  உத்தராகண்ட்

டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14 வரை உத்தராகண்ட் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் உள்ள 11 நகரங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். உத்தராகண்ட் மாநிலத்தின் வெள்ளி விழா தருணத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது சிறப்பானதாகும்

36 மாநிலங்களும் ஒரு யூனியன் பிரதேசமும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றன. 17 நாட்கள் 35 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். இவற்றில், 33 விளையாட்டுகளுக்கும், இரண்டு கண்காட்சி விளையாட்டுகளுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். யோகா, மல்லர்கம்பம் ஆகியவை முதல் முறையாக தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், பங்கேற்கின்றனர்.

நீடித்த தன்மையை மையமாகக் கொண்டு, இந்த ஆண்டு தேசிய விளையாட்டுகளுக்கான கருப்பொருள் “பசுமை விளையாட்டுகள்” ஆகும். விளையாட்டு வீரர்கள் மற்றும் விருந்தினர்களால் 10,000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படும் இடத்திற்கு அருகில் விளையாட்டு வனம் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு பூங்கா உருவாக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கான பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் மக்கும் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும்.

About Matribhumi Samachar

Check Also

ஏரோநாட்டிக்கல் மேம்பாட்டு முகமையின் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு பெங்களூரில் தொடங்கியது

விமானப்படை மேம்பாட்டு முகமையான ஏடிஏ (ADA) ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் தேசிய கருத்தரங்கான ‘ஏரோநாட்டிக்ஸ் 2047’, இன்று (ஜனவரி …