Saturday, December 06 2025 | 01:20:17 AM
Breaking News

பசுமைப் புரட்சியின் தந்தையான எம்எஸ் சுவாமிநாதன் நூற்றாண்டு விழா

Connect us on:

இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையும், பாரத ரத்னா விருது பெற்றவருமான மறைந்த பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் 100-வது பிறந்த தின விழா ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கிவைக்கவுள்ள இந்த நிகழ்ச்சி குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நாளை (31 ஜூலை 2025) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஆண்டு முழுவதும் பசுமைப்புரட்சி – உயிரி அடிப்படையில் மகிழ்ச்சிக்கான பாதை என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த விழாவை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம், இந்திய வேளாண் நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வேளாண் அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

அறிவியலாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் பெண்கள் மற்றும் விவசாயிகள், இளைஞர்கள் சமூக அமைப்புகளின் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கும் இந்த சிறப்பு விழாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நீடித்த விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக பேராசிரியர் எம் எஸ் சுவாமிநாதனின் அளப்பறிய பங்களிப்புக் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எதிர்காலத்தில் பருவநிலை மாற்றங்களை தாங்கி வளரக்கூடிய வகையில் நெகிழ்வுதன்மையுடன் கூடிய வேளாண் நடைமுறைகள் பல்லுயிர் பெருக்கம் பாலினங்கள் ஊட்டச்சத்து, சுகாதாரம், அறிவியல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இளையோரின் பங்களிப்பு குறித்த அமர்வுகளும் இடம் பெறும்.

எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வேளாண் வளர்ச்சிக்கு அவரது தந்தையின் அளப்பறிய பங்களிப்பு குறித்து உரையாற்றுகிறார். இதனையடுத்து இயற்கை விவசாயம் குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். இதில் நடைபெறும் மாநாட்டு கருப்பொருடன் கூடிய பிரத்யேக நிகழ்ச்சியில் பேச்சாளர்கள் மற்றும் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன.

இதில் கலந்துகொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

About Matribhumi Samachar

Check Also

பொது கொள்முதல் குறித்து ஐடிஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் அமர்வு – அரசு மின் சந்தை தளம் சார்பில் நடத்தப்பட்டது

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மின் சந்தை தளம், பாதுகாப்புத் துறை கணக்கு சேவைகள் பிரிவு பயிற்சி …