Tuesday, January 06 2026 | 07:07:40 AM
Breaking News

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Connect us on:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நாட்டு மக்கள் அனைவருக்கும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தன்னம்பிக்கை, ஒருங்கிணைந்த உறுதிப்பாடு மற்றும் நாட்டின் பெருமையை நினைவில் கொள்ளும் வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலக அளவில் பல்வேறு துறைகளில் முன்னணி நாடாகவும், பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் தெளிவான தொலைநோக்குப் பார்வையை எடுத்துரைக்கும் வகையில் கடந்த ஆண்டு அமைந்தது என்று கூறியுள்ளார்.

ஆபரேஷன் நடவடிக்கை நாட்டு மக்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதியான நடவடிக்கைகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளதென்றும், இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு வலுவான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா உறுதியாக எதிர்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இலக்குகளை எட்டும் வகையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.  வந்தேமாதரம் என்ற தேசிய பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவது உட்பட பல்வேறு செயல்பாடுகளில்  இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2026-ம் ஆண்டில் இந்தியாவில் இளைஞர்கள் நாட்டைப் பாதுகாப்பதற்கான 5 முக்கிய உறுதிமொழிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று திரு சி பி அவர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :

https://matribhumisamachar.com/2025/12/10/86283/

आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:

https://www.amazon.in/dp/B0FTMKHGV6

यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक

About Matribhumi Samachar

Check Also

தேசிய வீரச் சிறார் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமரின் தேசிய வீரச் சிறார் விருதுகளை புதுதில்லியில் இன்று (26.12.2025) வழங்கினார். சமூக சேவை, …