குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய கலா மஹோத்சவ் 2025 விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் இரண்டாவது பதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளமான கலாச்சாரம், உணவு மரபுகள் மற்றும் கலை பாரம்பரியங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன.
நவம்பர் 22 ஆம் தேதி, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடியரசுத் தலைவர் பங்கேற்க உள்ளார்.
‘गांधी जी की राजनीतिक यात्रा के कुछ पन्ने’ पुस्तक के बारे में जानने के लिए लिंक पर क्लिक करें :
https://matribhumisamachar.com/2025/12/10/86283/
आप इस ई-बुक को पढ़ने के लिए निम्न लिंक पर भी क्लिक कर सकते हैं:
https://www.amazon.in/dp/B0FTMKHGV6
यह भी पढ़ें : 1857 का स्वातंत्र्य समर : कारण से परिणाम तक
Matribhumi Samachar Tamil

