மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் நலத்துறையின்கீழ் செயல்படும் மை பாரத் அமைப்பு அறிவுப்பகிர்தல், திறன் கட்டமைப்பு, இளைஞர் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயலாற்றுவதற்காக அல்ட்டிமேட் லீடர்ஷிப் பவுண்டேஷன் பள்ளியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாடு முழுவதும் 18-29 வயதுப் பிரிவினரில் ஒரு லட்சம் இளம் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையை செயலாக்க உதவும் வகையில் இந்தக் கூட்டாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
Read More »இல்லந்தோறும் மூவண்ணக்கொடி: புதுவைப் பல்கலைக்கழகத்தில் தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி
சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மக்களிடையே தேசபக்தி உணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு முன்னெடுத்துள்ள இல்லந்தோறும் மூவண்ணக்கொடி இயக்கத்தின் ஒரு பகுதியாக, புதுவைப் பல்கலைக்கழகம் 2025 ஆகஸ்ட் 13 அன்று தேசப் பெருமிதத்துடன் மனிதச் சங்கிலி நிகழ்வை நடத்தியது. மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கையில் தேசியக் கொடி ஏந்தி, ஒற்றுமை, நேர்மை மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வலிமையை குறிக்கும் …
Read More »தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு புதுவைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது
புதுவைப் பல்கலைக்கழக மாணவர்கள் நலன் அலுவலகம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவை இணைந்து, “வளர்ச்சியடைந்த பாரத இளைஞர்கள் இணைப்பு” மற்றும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம் 2.0-இன் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு முதலாவது மரக்கன்றை நட்டுத் தொடங்கிவைத்தார். மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி போன்ற …
Read More »ஐடிஐ-களின் தரநிலையை உயர்த்துவதற்கான தேசிய திட்டம் குறித்த பயிலரங்கு ஒடிசாவில் நடைபெற்றது
தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐகளை) தரம் உயர்த்துதல் மற்றும் நவீனப்படுத்துதலை தேசிய அளவில் ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் ஒடிசா அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித்துறை ஒத்துழைப்புடன் நேற்று புவனேஸ்வரில் ஐடிஐ தரநில உயர்த்தலுக்கான தேசியத்திட்டம் குறித்த ஆலோசனைப் பயிலரங்கை நடத்தியது. இந்தப் பயிலரங்கில் ஐடிஐ தரநிலை உயர்த்தலுக்கான தேசியத்திட்டத்தின் தொலைநோக்குப் பார்வை, கட்டமைப்பு, செயல்படுத்தலுக்கான சட்டகவரைவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தொழிற்சாலை, …
Read More »யானைகள் பாதுகாப்பிற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது – மத்திய இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங்
உலக யானைகள் தினம் 2025 கொண்டாட்டங்களை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் யானைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு, தொலை உணர்வு மற்றும் புவிசார் வரைபடம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பாரம்பரிய …
Read More »உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
சுகாதாரம் என்பது ஒரு மாநிலத் திட்டமாகும். இருப்பினும், தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இந்த திட்டம், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேவை மற்றும் முன்மொழிவின்படி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கான …
Read More »அவசர உலகில் அதிகரிக்கும் உடல் பருமனை நிர்வகிக்க அரசு நடவடிக்கை
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 24% பெண்களும் 23% ஆண்களும் அதிக எடை கொண்டவர்களாக அல்லது பருமனாக உள்ளனர். ஆரோக்கியமற்ற உணவு முறைகள், அமர்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உடல் பருமன் அதிகரித்து வருவதற்கு முக்கிய பங்களிப்பாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது, போதுமான உடல் செயல்பாடு இல்லாதது மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இந்த வளர்ந்து வரும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களை …
Read More »உள்ளூர் உற்பத்திக்கு குரல் கொடுக்கும் இயக்கத்தின் வாயிலாக கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவி
ஜவுளி அமைச்சகம், அதன் சமூக ஊடகக் கையாளுதல்கள் மூலம் மற்றும் ஹரியானாவின் ஹிசார் உட்பட நாடு முழுவதும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம், கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. சமூக ஊடக பிரச்சாரங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற திட்டங்கள் மூலம் பொதுமக்களின் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது மற்றும் இந்த துறைகளின் பெருமையை எடுத்துரைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 27 கண்காட்சிகள் மற்றும் ஒரு …
Read More »மகளிர் சுய உதவிக் குழு
தீனதயாள் அந்த்யோதயா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (DAY–NRLM) கீழ், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக, அரசு பல அடுக்கு கண்காணிப்பு மற்றும் மறுஆய்வு பொறிமுறையை நிறுவியுள்ளது. குறிப்பாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs) சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு கூறுகளை செயல்படுத்துவதில் பின்வரும் நடவடிக்கைகள் மூலம் இவை உறுதி செய்யப்படுகின்றன: *மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கங்கள் (SRLMs) உடனான வழக்கமான மதிப்பாய்வுகள் …
Read More »தேர்தல் நடைமுறைகளை சீரமைத்தல்: பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 334 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையம்
நாட்டில் உள்ள தேசிய/மாநில அரசியல் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 195-ன் பிரிவு 29ஏ-வின் விதிகளின் கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன தற்போது, 6 தேசியக் கட்சிகள், 67 மாநிலக் கட்சிகள், 2854 பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் …
Read More »
Matribhumi Samachar Tamil