Thursday, January 29 2026 | 07:02:59 AM
Breaking News

Matribhumi Samachar

உண்டு உறைவிடக் கல்வித் திட்டம்

குறிப்பிட்ட பகுதிகளில் மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான உண்டு உறைவிடக் கல்வித் திட்டம் இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படுகிறது: முதலாவது ஆண்டு தோறும் 3,000 திறன் வாய்ந்த  ஷெட்யூல்டு பழங்குடியின வகுப்பைச்“ சேர்ந்த மாணவர்கள் மத்திய இடைநிலை  கல்வி வாரியம் அல்லது மாநில கல்வி வாரியங்களால் இணைக்கப்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தேர்வு முகமை  நடத்தும் நுழைவுத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12-ம் …

Read More »

நாடாளுமன்ற கேள்வி: மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரதமரின் மூத்த குடிமக்கள் ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒருங்கிணைந்த மூத்த குடிமக்கள் திட்டமானது  முதியோர் இல்லங்கள், தொடர் பராமரிப்பு இல்லங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் அரசு சாரா / தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மானிய உதவி வழங்குகிறது.  ஏழ்மை நிலையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உறைவிடம், ஊட்டச்சத்து, மருத்துவ சேவை மற்றும் பொழுதுபோக்கு …

Read More »

249 மாவட்டங்கள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியாளர் இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன

சாக்கடை சுத்தம் செய்யும்போது ஏற்படும் இறப்புகளுக்கான இழப்பீடு அதிகரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதிமன்றம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கு அறிவுறுத்துகிறது. (முந்தைய நிர்ணயிக்கப்பட்ட தொகை, அதாவது ரூ.10 லட்சம்) 1993-ம் ஆண்டு முதல் இது பொருந்தும். அந்தத் தொகைக்கு தற்போதைய தொகை ரூ.30 லட்சமாகும். இது சம்பந்தப்பட்ட முகமையால் செலுத்தப்பட வேண்டிய தொகையாக இருக்கும். அதாவது, ஒன்றியம், யூனியன் பிரதேசம் அல்லது மாநிலம் இத்தொகையை செலுத்த வேண்டும்.அதாவது, சாக்கடை உயிரிழப்புகளுக்கு இப்போது ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இறந்தவரைச் சார்ந்து வாழந்தவருக்கு அத்தகைய …

Read More »

அசாம் இயக்கத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு “ஸ்வாஹித் தினத்தன்று மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அஞ்சலி

வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கத்தின் போது உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ஸ்வாகித் தினத்தில் அஞ்சலி செலுத்தினார். புதுதில்லியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு ராமேஸ்வர் தெலி, திரு பிரதான் பருவா ஆகியோர் கலந்து கொண்டனர். தியாகிகளின் உயரிய தியாகங்களை கௌரவிக்கும் வகையிலும் அசாம் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் …

Read More »

வளர்ச்சியைடந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கான முயற்சிகள்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான  தொலைநோக்குப் பார்வையை அடைய கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை  அமைச்சகம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி புதிய மெகா துறைமுகங்களை நிறுவுதல் மற்றும் பெரிய கப்பல்களைக் கையாளும் வகையில் ஆழமான துறைமுகங்களை உருவாக்குதல், துறைமுகங்களின்  செயல்திறனை மேம்படுத்துவதற்காக நவீனமயமாக்கல்  நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்குதல், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்திற்கான …

Read More »

முக்கிய துறைமுகங்களில் கார்பன் உமிழ்வு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பை அதிகரித்தல், துறைமுக உபகரணங்களின் மின்மயமாக்கல், மாற்று எரிபொருள் அடிப்படையிலான துறைமுக கப்பல்கள், மின்சார வாகன மின்னேற்றி நிலையங்களை நிறுவுதல், திரவ இயற்கை எரிவாயு, போன்ற பல்வேறு பசுமை முயற்சிகள் மூலம் நீடித்த வளர்ச்சி மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான கட்டமைப்பை பெரிய துறைமுகங்களுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் ஹரித் சாகர் என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வழிகாட்டு …

Read More »

சாகர்மாலா திட்டங்கள்

நாட்டில் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமாக சாகர்மாலா அமைந்துள்ளது. இத்திட்டம் துறைமுக உள்கட்டமைப்பு, கடலோரக் கப்பல் நிறுத்தம், சாலை, ரயில் போக்குவரத்து, மீன்பிடி துறைமுகங்கள், திறன் மேம்பாடு, கடலோர சமூக மேம்பாடு, சர்வதேச தரத்திலான கப்பல் முனையம், ரோ-பாக்ஸ் படகு சேவைகள் போன்ற தனித்துவமான, புதுமையான திட்டங்களுக்கு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு நிதி …

Read More »

இந்தியாவின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கிற்கு உத்வேகம் அளிப்பவைகளாக புத்தொழில் நிறுவனங்கள், புதுமை கண்டுபிடிப்புகள் திகழ்கின்றன: டாக்டர் ஜிதேந்திர சிங்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் மற்றும் பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொது மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “அமேசான் 2024” உச்சி மாநாட்டில் பேசுகையில், 2047-ம் ஆண்டில் வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதை நோக்கிய நாட்டின் பயணத்தின் மைல்கற்களாக புதுமை, தொழில்முனைவோர் மற்றும் பொது-தனியார் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் …

Read More »

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான தேசிய மொபைல் கண்காணிப்பு மென்பொருள்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் கூடுதல் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து பணிகளிலும் (தனிப்பட்ட பயனாளிகள் பணிகள் தவிர) இத்திட்டத்தின தொழிலாளர்களின் வருகைப்பதிவை உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் தேசிய மொபைல் கண்காணிப்பு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பயனாளிகள் தங்களது குறைகளை அதற்கான  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வகையும் செய்யப்பட்டுள்ளது. இவை …

Read More »

பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ் கிராமங்கள் இணைப்பு

வறுமை நிலையை  குறைப்பதற்கான உத்திசார் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு, பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தை 2000   டிசம்பர் 25 அன்று மத்திய நிதியுதவியுடன் கூடிய திட்டமாக அறிவித்தது. இத்திட்டம் மக்கள் தொகை அடிப்படையில் (சமவெளிப் பகுதிகளில் 500+ மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 250+) சாலை வசதிகள் இல்லாத கிராமப்புறங்களுக்கு அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ற வகையில் சாலைகளை அமைப்பதன் மூலம் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்துக்கான  இணைப்பை வழங்க வகை செய்கிறது. இமய மலையை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சில சிறப்பு பகுதிகள்) கிராமப்புற மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், 2001-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 100 நபர்கள் அல்லது அதற்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 50,000 கி.மீ நீளத்திலான கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் இலக்குடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் கடந்த  2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து நிதி ஆயோக், இந்திய மேலாண்மைக் கழகம், அகமதாபாத், உலக வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை நடத்திய பல்வேறு மதிப்பீட்டு ஆய்வுகள், கல்வி, சுகாதார வசதிகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Read More »