Tuesday, December 09 2025 | 01:27:48 PM
Breaking News

Matribhumi Samachar

இந்திய மொழிகள் பிரிவை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்

இந்திய மொழிகள் பிரிவை (பாரதிய பாஷா அனுபாக்) மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சக செயலாளர், ஆட்சி மொழிப்பிரிவு செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்திய மொழிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆட்சி மொழித்துறை முழுமை அடைந்திருப்பதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். வெளிநாட்டு மொழிகளின் செல்வாக்கிலிருந்து நிர்வாகத்தை விடுவிக்கும் …

Read More »

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் தாயின் பெயரில் மரக்கன்று நடும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது

2025-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய  சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம், புதுதில்லியில்  சாகேத்தில் உள்ள மத்திய வக்ஃப் பவனில் ‘தாயின்பெயரில் ஒரு மரக்கன்று நடுதல்’ என்ற சிறப்பு இயக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. மத்திய சிறுபான்மை விவகாரங்கள்  அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சக செயலாளர் டாக்டர் சந்திர சேகர் …

Read More »

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டத்தின் கீழ் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியுள்ளது

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல்  திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி கடன் மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் இணையவழியாக நடைபெற்ற நிகழ்வில் வழங்கியது. ரூ.884 கோடி கடன் அனுமதிக்காக இந்த மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இந்த ஆணையத்தின் மத்திய அலுவலகத்தில் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் மானியத் தொகையை பயனாளிகளுக்கு விடுவித்தார். ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி …

Read More »

வியட்நாமின் தூதுக்குழு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகனுடன் சந்திப்பு – இருநாடுகளுக்கிடையே ஊடகம், பொழுதுபோக்கு துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகனை, வியட்நாம் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினரும்,  வியட்நாம் கம்யூனிஸ்ட்டின் தகவல், கல்வி, மக்கள் தொடர்புக்கான மத்திய ஆணையத்தின் தலைவருமான திரு நுயென் ட்ராங் நிகியா தலைமையிலான வியட்நாம் அரசின் உயர் அதிகாரிகள் குழு புதுதில்லியில் இன்று (05.06.2025) சந்தித்தது. இந்த சந்திப்பின் போது, ​​ஊடகம், பொழுதுபோக்கு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும் வியட்நாமும் ஒப்புக்கொண்டன. இந்த கூட்டத்தில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன், அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜுவும் கலந்து கொண்டனர். இந்தியாவும் வியட்நாமும் பாரம்பரியமாக நெருங்கிய இருதரப்பு உறவுகளை நீண்டகாலமாகப் பகிர்ந்து கொள்கின்றன. 2022-ம் ஆண்டில், இரு நாடுகளும் தூதரக உறவுகளை நிறுவிய 50-வது ஆண்டு …

Read More »

பத்மஸ்ரீ விருது பெற்ற திரு உமாசங்கர் பாண்டே பாதுகாப்புத் துறையின் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில் கலந்து கொண்டார்

பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான திரு உமாசங்கர் பாண்டே 2025 ஜூன் 05 அன்று புதுதில்லியில் உள்ள பாதுகாப்புத் துறையின் நிலச் சொத்து நிர்வாக தலைமை இயக்குநரக வளாகத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழா மரம் நடும் நிகழ்வுடன் தொடங்கியது. இதில் பாதுகாப்பு நிலச் சொத்து நிர்வாக அமைப்பில் பணியாற்றி வரும் அதிகாரிகள் அவர்களது குழந்தைகள் துறை சார்ந்த பிற பணியாளர்கள் உள்ளிட்ட …

Read More »

ஏழைகள் நலனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கருணையுள்ள அரசு: பிரதமர்

கடந்த 11 ஆண்டுக்கால ஆட்சியில் நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்துடன் ஏழைகள் நலனுக்கான  திட்டத்தை செயல்படுத்துவதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தெரிவித்துள்ளார். அதிகாரமளித்தல், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு  சீர்திருத்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதால் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு …

Read More »

தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார். ஆரவல்லி பசுமைச் சுவர் திட்டத்தின் கீழ் ஆரவல்லி மலைத்தொடரில் காடுகளை மறுசீரமைத்து வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடர் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, தில்லி ஆகிய பகுதிகளில் பரவியுள்ளதைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதிகள் பல சுற்றுச்சூழல் …

Read More »

பிரதமரின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் முதல்வர் செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

ஜம்மு & காஷ்மீரில் மேம்படுத்தப்பட்ட இணைப்புக்கான ₹46,000 கோடி மதிப்பிலான தொலைநோக்குப் பார்வை கொண்ட முக்கிய திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி கோடிட்டுக் காட்டியுள்ளார், இவை பிராந்திய இணைப்பில் ஒரு வரலாற்று மைல்கல்லாகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வருகைக்கு முன்னதாக, ஜம்மு & காஷ்மீரின் முதலமைச்சர், உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். செனாப் ரயில் பாலம், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் …

Read More »

உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் 2025 இல் உலகளாவிய பேரிடர் மீள்தன்மை மற்றும் பொது சுகாதாரத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது

உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு தளம் (GPDRR) 2025-ஐ முன்னிட்டு ஜெனீவாவில் இன்று நடைபெற்ற ஜி20 பேரிடர் அபாயக் குறைப்பு பணிக்குழு வட்டமேசை மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா பங்கேற்றார். கலந்துரையாடல்களின் போது, ​​வளர்ச்சித் தேவைகளுடன் பொருளாதாரத் திறனை மேம்படுத்துவதன் மூலம் உலகளாவிய பேரிடர் அபாயக் குறைப்பு முயற்சிகளை முன்னேற்றுவதில் ஜி20-இன் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார். சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சவால்களுக்கு எதிராக …

Read More »

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான அரசு முறை இத்தாலி பயணத்தை மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கியுள்ளார்

இத்தாலிக்கான அரசுமுறை பயணத்தை மத்திய தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கினார். 2025 ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் இத்தாலியில் பயணம் மேற்கொள்வார். இந்தியா-பிரான்ஸ் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிரான்சில் பயணம் மேற்கொண்டதை தொடர்ந்து அவர் தற்போது இத்தாலி சென்றுள்ளார். இந்தப் பயணம் முக்கியமான ஐரோப்பிய பங்குதாரர்களுடன் உத்திசார் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதிலும், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும் இத்தாலியுடன் …

Read More »