2025 ஜனவரி 26 அன்று குடியரசு தின அணிவகுப்பில் முதல் முறையாக மூன்று அரசுப் பள்ளி அணிகள் பங்கேற்க உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பூமில் உள்ள பிஎம் ஸ்ரீ கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா படாம்டாவைச் சேர்ந்த குழு, குடியரசுத் தலைவர் மேடைக்கு எதிரே உள்ள ரோஸ்ட்ரமில் நிகழ்ச்சியை நடத்தும் பெருமையைப் பெறும். சீனியர் செக் ஸ்கூல் வெஸ்ட் பாயிண்ட், காங்டாக், சிக்கிம் மற்றும் பிஎம் ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா எண். 2 பெலகாவி கன்டோன்மென்ட், கர்நாடகா, விஜய் சௌக்கில் தங்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பிக்கும். இந்த பள்ளி இசைக்குழுக்கள் 2025 ஜனவரி 24-25 தேதிகளில் புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் நடைபெறும் தேசிய பள்ளி இசைக்குழு போட்டி 6.0 இன் கிராண்ட் பைனலில் போட்டியிடும் 16 அணிகளில் அடங்கும். இது பிஎம் ஶ்ரீ பள்ளிகளின் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்குவதற்கும், அவர்களை நன்கு வளர்ந்த ஆளுமைகளாக வளர்ப்பதற்கும் ஒரு படியாகும். மத்திய நிதியுதவி திட்டத்தின் – சமக்ரா ஷிக்ஷா – புதுமை கூறுகளின் கீழ், மாநில அளவில் இசைக்குழு போட்டியை ஏற்பாடு செய்வதற்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020 என்பது 21 ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையாகும், மேலும் கல்வித் துறையில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், இத்திட்டம் தேசபக்தி மற்றும் தேசப்பெருமை உணர்வை ஊட்டுவது மட்டுமின்றி மாணவர்களின் இசைத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்களிடையே ஒழுக்கத்தையும் வளர்க்கும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களிடையே தேசபக்தி மற்றும் ஒற்றுமையின் உணர்வை புத்துயிர் பெறச் செய்வதையும், முழுமையான கல்வியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Read More »வீர கதை 4.0 சூப்பர் -100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சரும் கல்வி அமைச்சரும் பாராட்டினர்
புதுதில்லியில் 2025, ஜனவரி 25 அன்று நடைபெற்ற வீர கதை 4.0 சூப்பர்-100 வெற்றியாளர்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானும் ஆகியோர் பாராட்டினர். வெற்றியாளர்களான 100 பேரில் 66 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள். பாராட்டு விழாவில், வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 2025, ஜனவரி 26 அன்று கடமைப் பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் …
Read More »தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், பழங்குடியின விருந்தினர்கள் மற்றும் அலங்கார ஊர்திக் கலைஞர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (ஜனவரி 24, 2025) லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்லத்தில் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது, பிரதமரை நேரில் சந்தித்ததில் பல பங்கேற்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “இது இந்திய ஜனநாயகத்தின் வலிமையை நிரூபிக்கிறது” என்று பிரதமர் அதற்கு பதிலளித்தார். …
Read More »அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்
இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்த ஒரு சமூக ஊடகப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது; “அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது. நாம் நமது …
Read More »இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
மாண்புமிகு அதிபர் மற்றும் எனது சகோதரரான பிரபோவோ சுபியாண்டோ, இரு நாடுகளின் பிரதிநிதிகள், ஊடக நண்பர்களே, வணக்கம்! இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன். நண்பர்களே, 2018-ம் ஆண்டு …
Read More »முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / உடன்படிக்கைகள்: 1. இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 2. இந்திய கடலோர காவல்படை மற்றும் இந்தோனேசியாவின் பகம்லா இடையே கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (புதுப்பித்தல்) 3. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து ஆணையம் …
Read More »15வது தேசிய வாக்காளர் தின கொண்டாட்டங்களில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்
இன்று (ஜனவரி 25, 2025) புது தில்லியில் நடைபெற்ற 15-வது தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக செயல்பட்ட மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். “இந்திய வாக்குகள் 2024: ஜனநாயகத்தின் சகாப்தம்’’ புத்தகத்தின் முதல் பிரதியையும் தலைமைத் தேர்தல் ஆணையர் …
Read More »2025-குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரை
எனதருமை குடிமக்களே, வணக்கம்! வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களிடையே உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசு தின விழாவையொட்டி உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26 அன்று, நமது அடிப்படை ஆவணமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டு விவாதங்களுக்குப் பின், 1949 நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. அந்த நாள், …
Read More »குடியரசுத்தலைவருடன் இந்தோனேசிய அதிபர் சந்திப்பு
குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜனவரி 25, 2025 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு விருந்தளித்தார். இந்தியாவிற்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட அதிபர் திரு சுபியான்டோவை வரவேற்ற குடியரசுத்தலைவர், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நாகரீக உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றார். பன்மைத்துவம், உள்ளடக்கிய தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மதிப்புகள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை …
Read More »“புதிய பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” – இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்றது
இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், சென்னையில் இன்று (24.01.2025) “புதிதாக பிஐஎஸ் உரிமம் பெற்றவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியை” நடத்தியது. பிஐஎஸ் தென்மண்டல துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் மீனாட்சி கணேசன், உரிமைதாரர்களிடம் இந்த நிகழ்ச்சி குறித்தும் தரத்தைப் பேணுவது குறித்தும் விளக்கினார். இந்த நிகழ்ச்சியில், பிஐஎஸ் பற்றிய சுருக்கமான வழிகாட்டுதல் அமர்வும் அதைத் தொடர்ந்து அறிமுக தொகுப்பு (Welcome Kit) வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்தத் தொகுப்பில் உரிமைதாரர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. உரிமம் பெற்றவர்கள் மற்ற புதிய உரிமம் பெற்றவர்களுடனும், பிஐஎஸ் அதிகாரிகளுடனும் தகவல் பரிமாற்ற வாய்ப்பையும் …
Read More »
Matribhumi Samachar Tamil