கடந்த மூன்று நிதியாண்டுகளில், அதாவது 2020-21 முதல் 2022-23-ம் ஆண்டு வரை முன்னேற விரும்பும் மாவட்டங்களில் பெருநிறுவனங்கள் சமூக பொறுப்பு நிதி செலவினம் அதிகரித்துள்ளதாக பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2020-21-ம் நிதியாண்டில் ரூ.651.43 கோடியும், 2021-22 -ம் நிதியாண்டில் ரூ.1046.43 கோடியும், 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1402.89 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சருமான திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா இதனைத் தெரிவித்தார்.
Read More »நிலக்கரி சுரங்கங்களைச் சுற்றி பசுமை சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள்
நிலக்கரி சுரங்கங்கள், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்க, நிலக்கரித்துறை நிறுவனங்களான கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்), என்எல்சி இந்தியா லிமிடெட் (என்எல்சிஐஎல்), சிங்கரேணி நிலக்கரி கம்பெனி லிமிடெட் (எஸ்சிசிஎல்) ஆகியவை பாரம்பரிய நடைமுறைகளுடன் புதுமையான தொழில்நுட்பங்களையும் பின்பற்றுகின்றன. மூன்று அடுக்கு தோட்டம், விதைப் பந்து தோட்டம், மியாவாக்கி முறை, உயர் தொழில்நுட்ப நடவு முறைகள், மூங்கில் தோட்டம், சொட்டு நீர் பாசனத்தைப் பயன்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும். …
Read More »மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார்
மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் இன்று பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர், வேளாண் தொடர்பான பல்வேறு அமைப்புகள், விவசாய உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்டோர் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை எடுத்துரைத்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு. சிவ்ராஜ் சிங் சவுகான், அனைத்து பரிந்துரைகளையும் தாங்கள் உரிய மதிப்பாய்வு செய்து நிதியமைச்சருக்கு தெரிவிப்பதாக கூறினார். மேலும், வேளாண் துறை தொடர்பான அனைவருடனும் தொடர்ந்து பேச்சு நடத்தவுள்ளதாக திரு சவுகான் கூறினார். வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகமும் உள்நாட்டில் ஒரு ஆய்வை …
Read More »வெற்றி தினத்தை முன்னிட்டு துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து
விஜய் திவஸ் என்றழைக்கப்படும் வெற்றி தினத்தை முன்னிட்டு, துணிச்சல்மிக்க வீரர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது: “வெற்றி தினமான இன்று, 1971-ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்களித்த துணிச்சலான வீரர்களின் தைரியம், தியாகங்களை நாம் போற்றுவோம். அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத உறுதி ஆகியவை நமது தேசத்தைப் பாதுகாத்து, நமக்குப் …
Read More »புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: “புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் ஜாகிர் ஹூசேன் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஒரு உண்மையான மேதையாக அவர் நினைவுகூரப்படுவார். அவர் தபேலா இசையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று தமது இணையற்ற இசையால் மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்தார். இதன் மூலம், அவர் இந்திய பாரம்பரிய …
Read More »ராஜஸ்தானில் டிசம்பர் 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 17 அன்று ராஜஸ்தானில் பயணம் மேற்கொள்கிறார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘ஓர் ஆண்டு- சிறந்த வளர்ச்சி’ என்ற ராஜஸ்தான் மாநில அரசின் ஓர் ஆண்டை நிறைவு செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் குடிநீர் துறை தொடர்பான ரூ.46,300 கோடி மதிப்பிலான 24 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கிறார். 7 மத்திய அரசு திட்டங்கள், 2 மாநில அரசு திட்டங்கள் உட்பட ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 9 திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர், 9 மத்திய அரசு திட்டங்கள் …
Read More »இந்தியா – இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு
1. பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர். 2. ஆழமான வேரூன்றிய கலாச்சார, நாகரிக உறவுகள், புவியியல் ரீதியான அருகாமை, மக்களுக்கு இடையிலான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா-இலங்கை இடையேயான இருதரப்பு உறவுகள் அமைந்துள்ளன என்பதை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். 3. 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் போதும் அதன் பின்னரும் இலங்கை மக்களுக்கு இந்தியா வழங்கிய …
Read More »இலங்கை அதிபர் உடனிருந்த கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் வெளியிட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்
மேதகு அதிபர் அனுர குமார திசநாயக அவர்களே, இரு நாடுகளின் பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வாழ்த்துகள்! இந்தியாவிற்கு வருகை தந்துள்ள அதிபர் திசநாயகவை நான் அன்புடன் வரவேற்கிறேன். அதிபராக உங்களின் முதலாவது வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் திசநாயகவின் வருகை எங்கள் உறவுகளில் புதிய உத்வேகத்தையும் சக்தியையும் ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கூட்டாண்மைக்கான எதிர்கால தொலைநோக்கை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். எங்கள் பொருளாதார கூட்டணியில் முதலீடு சார்ந்த …
Read More »“இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால மகத்துவமிக்க பயணம்” என்ற விவாதத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஆற்றிய தொடக்க உரை
மாண்புமிகு உறுப்பினர்களே, 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாளன்று நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75-வது ஆண்டு நிறைவையொட்டி, இரண்டு நாள் கொண்டாட்டத்தை நாம் இன்று தொடங்குகிறோம். இது கொண்டாட்டத்திற்கான அழைப்பு மட்டுமல்ல, நமது பயணத்தை ஆழமாக பிரதிபலிப்பதும், நமது முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிக்கக் கூடியதுமாகும். இந்த அரசியலமைப்பு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த அவையில் நடைபெறும் நமது விவாதங்கள், இந்த நிகழ்வின் தீவிரத்தை பிரதிபலிக்கட்டும். 1.4 பில்லியன் மக்களுக்கு சேவை …
Read More »ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு, குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
ஆர்மீனிய நாடாளுமன்றத் தலைவர் திரு ஆலன் சிமோனியன் தலைமையிலான ஆர்மீனிய நாடாளுமன்ற தூதுக்குழு இன்று (டிசம்பர் 16, 2024) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தது. குழுவினரை வரவேற்ற குடியரசுத் தலைவர், இந்தியா – ஆர்மீனியா இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார தொடர்புகளையும் தற்கால உறவுகளையும் நினைவு கூர்ந்தார். உலகளாவிய அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் ஆர்மீனியா …
Read More »