‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோயிலிருந்து விடுவிக்க தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டியின் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் இன்று ‘காசநோய் இல்லாத பாரதம் ‘ மற்றும் ‘ போதையில்லா பாரதம்’ பிரச்சாரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான நட்பு கிரிக்கெட் போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய திரு பிர்லா, காசநோய் மற்றும் போதைப் பழக்கத்திற்கு எதிரான நமது போராட்டத்தின் வெற்றிக்கு வெகுஜன விழிப்புணர்வு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவை முக்கியமானவை என்று கூறினார். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதலை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளும் காசநோய் இல்லாதவையாக மாற போட்டியிடும் ‘ஆரோக்கியமான போட்டி’ என்ற உணர்வைத் தூண்டினார். உலக சுகாதார அமைப்பு 2030 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க உலகளாவிய இலக்கை நிர்ணயித்துள்ளது, ஆனால் பிரதமர் மோடியின் கீழ், இந்தியா 2025 க்குள் காசநோயை ஒழிக்க அதிக லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்த இலக்கை அடைவதற்கு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் திரு பிர்லா கூறினார். 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியா காசநோய் இல்லாத நாடாக மாறுவதை உறுதி செய்ய உறுதியுடன் பணியாற்றுமாறு அவர்களை திரு ஓம் பிர்லா வலியுறுத்தினார். 20 ஓவர் நட்பு கிரிக்கெட் போட்டி முன்னாள் மத்திய அமைச்சரும் இமாச்சலப் பிரதேசத்தின் ஹமீர்பூரைச் சேர்ந்த எம்.பி.யுமான திரு அனுராக் சிங் தாக்கூரின் முயற்சியால் இந்தியாவை காசநோய் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மக்களவை சபாநாயகர் லெவன் அணிக்கு திரு அனுராக் சிங் தாக்கூர் தலைமை தாங்கினார், மாநிலங்களவை தலைவர் லெவன் அணிக்கு திரு கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார். மக்களவை தலைவர் லெவன் அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 111 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த அனுராக் சிங் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Read More »தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் ஆர்என்ஐஎல் நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது
விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கற்றல், மேம்பாட்டு மையத்தின் டாக்டர் தென்னெட்டி விஸ்வநாதம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆர்ஐஎன்எல் நிறுவன இயக்குநரும் (திட்டங்கள்), கூடுதல் பொறுப்பு இயக்குநருமான (செயல்பாடுகள்) ஸ்ரீ ஏ.கே.பாக்சி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை திரு ஏ.கே.பாக்சி, ஆர்ஐஎன்எல் ஊழியர்களும் குடும்பத்தினரும் அன்றாட வாழ்க்கையில் ஆற்றல் சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று …
Read More »நாட்டு நலப்பணித் திட்டத்தின் 80வது சுற்றுக்கான அகில
மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் , 2024 டிசம்பர் 10 & 11 தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் அதன் சமூக-பொருளாதார கணக்கெடுப்பின் என்எஸ்எஸ் 80-வது சுற்றுக்கான அகில இந்திய பயிற்சியாளர்களின் பயிலரங்கை ஏற்பாடு செய்தது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை இயக்குநர் திரு கல் சிங் 10 டிசம்பர் 2024 அன்று பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். அவர் …
Read More »விண்வெளி, கடல் மற்றும் இமயமலை வளங்கள், இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும் – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார். பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவின் விண்வெளி, கடல், …
Read More »எரிசக்தி சேமிப்பு தொடர்பான தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டி கௌரவித்தார்
தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2024-ஐ முன்னிட்டு, புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியதுடன் எரிசக்தி சேமிப்புச் செயல்திறனுக்கான சிறந்த பங்களிப்பைக் கொண்டாடியது. விழாவின் போது, எரிசக்தி சேமிப்பு 2024 குறித்த தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் கௌரவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளங்களை உகந்த …
Read More »தில்லியில் குளிர்கால மாதங்களில் காற்றின் தர சூழ்நிலைக்கான நடவடிக்கை
தில்லி-என்.சி.ஆரில் குளிர்கால மாதங்களில் பொதுவாக பாதகமான காற்றின் தர சூழ்நிலையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், என்.சி.ஆர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் காற்றின் தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்) முழு என்.சி.ஆருக்கும் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை திருத்தியுள்ளது. GRAP என்பது தில்லியில் சராசரி தர அளவை அடிப்படையாகக் கொண்ட அவசரகால நடவடிக்கை பொறிமுறையாகும், இது தில்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க பல பங்குதாரர்கள், செயல்படுத்தும் முகவர் …
Read More »கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி டிசம்பர் 15 முதல் 18 வரை நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தோனேசியா செல்கிறார். இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் அவரது இந்தப் பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும். இந்தப் பயணத்தின் போது, இந்தோனேசிய பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்ஜாஃப்ரி ஸ்ஜாம்சோதீன் (ஓய்வு), இந்தோனேசிய ஆயுதப்படைத் தளபதி ஜெனரல் அகஸ் சுபியான்டோ, இந்தோனேசிய கடற்படைத் தளபதி அட்மிரல் முகமது அலி உள்ளிட்ட உயர்மட்ட …
Read More »விமானப்படை அகாடமியில் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு
ஒருங்கிணைந்த பட்டமளிப்பு அணிவகுப்பு 14 டிசம்பர் 2024 அன்று ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை அகாடமியில் நடைபெற்றது. விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி.சிங், அணிவகுப்பின் ஆய்வு அதிகாரியாக (ஆர்ஓ) இருந்தார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களுக்கு , அவர் பட்டங்களை வழங்கினார். 178 ஆண்கள் மற்றும் 26 பெண்கள் உட்பட மொத்தம் 204 வீரர்கள் இன்று பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில், இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒன்பது அதிகாரிகள், …
Read More »தேசிய நுகர்வோர் தினத்தன்று முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்க உள்ளன
அஜியோ, ஜியோ மார்ட், நெட்மெட், பிக்பாஸ்கெட், டாடா க்ளிக், டாடா ஒனர எம்ஜி, ஸொமேட்டா, ஓலா (Ajio, JioMart, Netmed, BigBasket, Tata Cliq, Tata 1mg, Zomato) Ola போன்ற முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் 2024 டிசம்பர் 24 அன்று கொண்டாடப்படவுள்ள தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொள்கின்றன. பாதுகாப்பு உறுதிமொழி என்பது பாதுகாப்பற்ற, போலியான, இணக்கமற்ற தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கும், பாதுகாப்பிற்கு பொறுப்பான சட்டரீதியான …
Read More »இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிப் பணிகள் சேவை அமைப்பின் 50-வது நிறுவன தின கொண்டாட்டம்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் பங்கேற்பு
இந்திய அஞ்சல், தொலைத்தொடர்பு கணக்குகள் – நிதிச் சேவை அமைப்பு (IP&TAFS) தனது 50-வது நிறுவன தினத்தை புதுதில்லியில் இன்று (14.12.2024) கொண்டாடியது. குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தலைமை விருந்தினராக இதில் பங்கேற்றார். மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். குடிமைப் பணி அதிகாரிகள் தொழில்நுட்ப நுண்ணறிவு கொண்டவர்களாகவும், பாரம்பரிய நிர்வாக எல்லைகளைக் கடந்து மாற்றத்தை …
Read More »