விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும், அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகளைச் சமாளிப்பதற்குமான ஒரு நடவடிக்கையாக, இந்திய ரிசர்வ் வங்கி, பிணையில்லாத விவசாயக் கடன்களுக்கான உச்சவரம்பை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. கடன் வாங்குபவருக்கு தற்போதுள்ள ரூ 1.60 லட்சம் கடன் வரம்பு ரூ 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு பணவீக்கத்தின் தாக்கம் மற்றும் விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது.. இது விவசாயிகளுக்கு மேம்பட்ட நிதி அணுகலை வழங்குவதை நோக்கமாகக் …
Read More »ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மரியாதை
புகழ்பெற்ற ராஜ் கபூரின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் ஒரு தொலைநோக்கு சிந்தனை கொண்ட திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று அவரைப் பிரதமர் பாராட்டியுள்ளார். ராஜ் கபூர் வெறும் திரைப்படத் தயாரிப்பாளர் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்ற கலாச்சாரத் தூதராகத் திகழ்ந்தார் என்று குறிப்பிட்டுள் திரு நரேந்திர மோடி, அடுத்து வரும் …
Read More »இன்றைய நிறுவன சவால்கள் பெரும்பாலும் அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடு இன்மையால் உருவாகின்றன- குடியரசு துணைத்தலைவர்
“இன்றைய நிறுவன சவால்கள் உள்ளிருந்து மற்றும் வெளியே இருந்து அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல் மற்றும் உண்மையான வெளிப்பாடுகள் குறைந்ததால் உருவாகின்றன. வெளிப்பாடு மற்றும் அர்த்தமுள்ள உரையாடல் இரண்டும் ஜனநாயகத்தின் விலைமதிப்பற்ற நகைகள். வெளிப்பாடு மற்றும் தொடர்பு ஒருவருக்கொருவரை இணைக்கின்றன. நல்லிணக்கமே வெற்றிக்கு முக்கியமாகும்”, என்று குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். எந்தவொரு ஜனநாயகத்திலும் முக்கிய மதிப்புகளின் முக்கியத்துவத்தை விளக்கிய திரு தன்கர், “ஜனநாயகம் அமைப்புகளில் மட்டுமல்ல, அடிப்படை …
Read More »பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் – குடியரசுத்துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
பயிர்க் கழிவுகளை எரிக்கும் பிரச்சினைக்கு முறையான தீர்வு காண வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய எரிசக்தி சேமிப்பு தின விழா 2024-ல் பேசிய திரு ஜக்தீப் தன்கர், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் அபாயகரமான சுற்றுச்சூழல் சூழ்நிலைகளால் தேசிய தலைநகரமான தில்லி ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுகிறது என்றார். நாம் புதுமை அணுகுமுறையில் இறங்க வேண்டும் …
Read More »இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்திற்கு எதிரான உத்தரவை சிசிஐ நிறுத்தி வைத்துள்ளது
இந்திய டேபிள் டென்னிஸ் சங்கம், மகாராஷ்டிரா மாநில டேபிள் டென்னிஸ் சங்கம், குஜராத் மாநில டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான உத்தரவை நிறுத்தி வைக்கும் ஆணையை இந்திய போட்டி ஆணையம் சிசிஐ 12.12.2024 அன்று பிறப்பித்துள்ளது. கிடைக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில், இந்தியாவில் டேபிள் டென்னிஸ் லீக் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கும், டேபிள் டென்னிஸ் போட்டிகளுக்கு சேவைகளை வழங்குவதற்கும் தொடர்புடைய சந்தைகளில் இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு, அதன் துணை அமைப்புகள் மேலாதிக்க நிலையை கொண்டுள்ளன என்று ஆணையம் தீர்மானித்தது. விசாரணையின் …
Read More »மொபைல் வேனிட்டி எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வட்டம் 10.12.2024 முதல் 19.12.2024 வரை வேனிட்டி மொபைல் எண்களை மின்-ஏலம் மூலம் விற்பனை செய்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்களாக ஃபேன்சி எண்களைப் பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலத்திற்கு. ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி 19.12.2024 ஆகும். மொபைல் எண் என்பது ஒருவரது எளிதான அடையாளம், இதன் மூலம் நாம் மற்றவர்களையும், மற்றவர்கள் நம்மையும் தொடர்பு கொள்ளலாம். ஒரு தொழிலதிபருக்கு மொபைல் எண் என்பது அவரது வாடிக்கையாளர்களுக்கு எளிதில் நினைவில் கொள்ளக்கூடிய ஃபேன்ஸி எண்ணாக இருக்க வேண்டும். சில …
Read More »புதுவைப் பல்கலைக் கழகத்தில் இந்தி அல்லாத மொழி பேசும் இந்தி எழுத்தாளர்களுக்கான முகாம் நடைபெற்றது
இந்தி அல்லாத மொழி பேசும் இந்தி புதிய எழுத்தாளர்களை இலக்கியத்தின் பல்வேறு வகைகளில் படைப்பாற்றல் பெற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன், புதுவைப் பல்கலைக்கழகத்தின் ‘இந்தித் துறை மற்றும் மத்திய இந்தி இயக்குநரகம் (கல்வி அமைச்சகம், புது தில்லி), இணைந்து கூட்டு முயற்சியில் “இந்தி பேசும் புதிய எழுத்தாளர்கள் முகாமுக்கு” ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் துவக்க விழா புதுவைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் தரணிக்கரசு தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமினை புதுவை …
Read More »தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை சட்டவிரோதமாக இணைய அடிமைகளாக கம்போடியா நாட்டுக்கு அனுப்ப முயன்ற முகவரின் முயற்சி முறியடிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கம்போடியா நாட்டுக்கு இணைய அடிமைகளாக அனுப்ப முயன்ற சட்டவிரோத முகவரின் முயற்சியை சென்னையில் உள்ள குடியேற்ற பாதுகாவலர், தமிழ்நாடு காவல்துறை சிபிசிஐடி ஆகியோர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக முறியடிக்கப்பட்டது. சட்டவிரோத முகவரும் திருச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர். கம்போடியாவில் நல்ல ஊதியத்துடன் வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து இளைஞர்களை நம்ப வைத்து பெரும் தொகையை அவர்களிடமிருந்து பெற்றுக் …
Read More »பசுமை எஃகு உற்பத்தி
கரியமில் வாயு நீக்கம் குறித்து வளர்ந்த பொருளாதார நாடுகள் எஃகு இறக்குமதிக்கு கார்பன் வரி விதிப்பது உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளின் சவால்களை அடுத்து மத்திய அரசு அது சார்ந்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. எஃகு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கரியமில வாயு உமிழ்வை எட்டும் நோக்கில், நாட்டில் பசுமை எஃகு உற்பத்தியை ஊக்குவிக்கும் செயல்திட்டத்தை மத்திய அரசு …
Read More »எஃகு உற்பத்தியில் கார்பன் நீக்கம்
எஃகு உற்பத்தியில் கரியமில வாயு பயன்பாட்டைக் குறைத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான பன்முகத் தன்மை கொண்ட அணுகுமுறையுடன் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி எஃகு அமைச்சகத்தால் ஏற்படுத்தகப்பட்ட 14 பணிக்குழுக்களின் பரிந்துரைகளுக்கு ஏற்ப “இந்தியாவில் பசுமை எஃகு உற்பத்திக்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. எஃகு உற்பத்தியில் கரியமில வாயு நீக்கத்திற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் …
Read More »