Thursday, June 25 2026 | 04:47:17 PM
Breaking News

Matribhumi Samachar

பிரதமர் திரு நரேந்திர மோடி கிராமப்புற பாரதப் பெருவிழா 2025- ஐ தொடங்கி வைத்தார்

புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கிராமப்புற பாரத மஹோத்சவ் 2025 என்னும் பெருவிழாவைத் தொடங்கி வைத்தார். வளர்ச்சியடைந்த பாரதம் 2047- க்கு ஒரு நெகிழ்திறன் கொண்ட கிராமப்புற இந்தியாவை உருவாக்குவது இந்தப் பெருவிழாவின்  கருப்பொருளாகும். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற பாரதப்  பெருவிழா என்ற பிரம்மாண்டமான அமைப்பு, இந்தியாவின் வளர்ச்சிப் …

Read More »

தில்லியில் நாளை ரூ. 12,200 கோடிக்கு அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான  அடிக்கல்லை  நாட்டுகிறார் பிரதமர் 12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் …

Read More »

சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான நடவடிக்கையாக புதுவை பல்கலைக்கழகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு

புதுவை பல்கலைக்கழகம் அதன் வெள்ளி விழா வளாகத்தில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. 104 மரங்களை வேரோடு சாய்த்த ஃபெங்கல் சூறாவளி காரணமாக இழந்த பசுமையை மீட்டெடுப்பதும், வளாகத்தில் பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துவதும் இந்த முயற்சியின் நோக்கமாகும். இதன் ஒரு பகுதியாக 1,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியை, தலைமை விருந்தினரான புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் மற்றும் புதுவை பல்கலைக்கழகத்தின் முதன்மை …

Read More »

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) 67-வது நிறுவன தினத்தை போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கொண்டாடுகிறது

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் 67-வது  நிறுவன தினத்தை போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(சி.வி.ஆர்.டி.இ )   இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி) ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கொண்டாடப்பட்டது. டிஆர்டிஓ ஆர் & டி செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத், புது தில்லியில் உள்ள எஸ் கோத்தாரி அரங்கத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் …

Read More »

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கல்வி நிறுவனத்திற்கு (NIEPMD) வருகை

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சென்னையில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனத்தை இன்று பார்வையிட்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தின் போது, என்.ஐ.இ.பி.எம்.டி.க்கு வழங்கப்பட்ட தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுமத்தின் (என்ஏஏசி) சான்றிதழை வெளியிட்டார். இது ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள் கொண்ட நபர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைக் குறிக்கிறது. ஆட்டிசம் மேலாண்மை குறித்த இ- புத்தகத்தையும் வெளியிட்டார். டாக்டர் வீரேந்திர குமார் என்.ஐ.இ.பி.எம்.டி வளாகத்தில் தேசிய திறந்தநிலை பள்ளியின் (என்.ஐ.ஓ.எஸ்) மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு கல்வியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்ப தரமான கல்வி, திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை  பெறுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி பெற்று பதக்கங்களை வென்ற பல்வேறு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்களின்  விடாமுயற்சியைப் பாராட்டிய அவர், திறமையை வளர்த்து கொள்வதிலும், விளையாட்டில் உள்ளடக்கிய தன்மையை ஊக்குவிப்பதிலும் நிறுவனத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது, என்ஏஏசி சான்றிதழ், பயிற்சி, ஆராய்ச்சி, மறுவாழ்வு சேவைகளில் உயர் தரத்தை பராமரிப்பதற்கான என்.ஐ.இ.பி.எம்.டி.-ன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்று அமைச்சர் கூறினார். என்.ஐ.ஓ.எஸ் மையத்தை தொடங்குவதன் மூலம்,  கல்வி கற்பதில் உள்ள இடைவெளியை குறைப்பதிலும், வாழ்நாள் முழுவதும் கற்றலை ஊக்குவிப்பதிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். உள்ளடக்கிய, நெகிழ்வு தன்மையுடன் கூடிய கற்றல் முறைகளை வழங்குவதன் மூலம், ஒரு சமமான, உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் அரசின் பார்வையுடன் ஒத்துப்போகிறது. பல்வேறு குறைபாடுகள் கொண்ட திறமையான நபர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.ஐ.இ.பி.எம்.டி மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டினார்.

Read More »

‘ஃபரல் சகி’ முன்முயற்சியின் மூலம் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்க மீரா பயந்தர் மாநகராட்சியுடன் மகளிர் தொழில்முனைவோர் தளம் கூட்டு சேர்ந்துள்ளது

மகாராஷ்டிராவின் மீரா பயந்தர் நகரில் உள்ள பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஃபரல் சகி’ என்ற முதன்மை முயற்சியை மீரா பயந்தர் மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. பாரம்பரிய சிற்றுண்டி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அவர்களின் முயற்சிகளை நிலையானதாகவும் திறம்படவும் அளவிட உதவும் விரிவான பயிற்சியையும், ஆதரவையும் இந்த திட்டம் வழங்கும். பாரம்பரிய பண்டிகைக்கால தின்பண்டங்களின் (‘ஃபரல்’) உற்பத்தி மற்றும் விற்பனையில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வேலை …

Read More »

மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார்

மேற்கு வங்க மாநிலம் நாடியாவின் ஃபுலியாவில் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் 04.01.2025 அன்று திறந்து வைக்கிறார். கைத்தறியின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்கவும், கைத்தறித் தொழிலுக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப மனிதவளத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மத்திய அரசு “இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம்” என்ற பெயரில் 06 தொழில்நுட்ப நிறுவனங்களை கைத்தறி தொழில் அதிகம் உள்ள சேலம், வாரணாசி, …

Read More »

மருத்துவ ஜவுளி தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், மருத்துவ ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO) வெளியிட்டுள்ளது. மருத்துவ ஜவுளி (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2024-ன் கீழ் வரும் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்வதற்காக அதற்கான சோதனை நெறிமுறைகள், முத்திரையிடல் தேவைகள் உள்ளிட்ட கடுமையான தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான சவால்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அமைச்சகம்  இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. …

Read More »

புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை 2025 ஜனவரி 4 அன்று நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது

1985 ஜனவரி 4 அன்று நிறுவப்பட்ட அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறை தனது 40-வது நிறுவன தினத்தை 2025 ஜனவரி 4  அன்று புதுதில்லி ஜன்பத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கொண்டாட உள்ளது. மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குவார். …

Read More »

தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் விரைவில் நீண்ட தூர ரயில் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும்

இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக உள்ளது. குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அமர்ந்து செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வேகமான, பாதுகாப்பான, உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வெற்றிகரமாக வழங்கியதையடுத்து, நீண்ட தூர ரயில்களுக்கும் இதை இந்திய ரயில்வே நனவாக்க உள்ளது. தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ …

Read More »