மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024-25 நிதியாண்டில் 6.8% ஆக இருந்த மொத்த பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் ஒதுக்கீட்டின் பங்கு 2025-26 நிதியாண்டில் 8.86% ஆக அதிகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டுக்கான பாலின பட்ஜெட் அறிக்கையில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ 4.49 லட்சம் கோடி ஒதுக்கீடு …
Read More »பிஎஸ்என்எல்-லின் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகள், பிரயாக்ராஜில் மஹாகும்பமேளாவில் பக்தர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நிவாரணம் வழங்குகின்றன
தற்சார்பு இந்தியா முன்முயற்சியின் கீழ், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நம்பகமான இணைப்பை உறுதி செய்வதற்காக, 2025 மகாகும்பமேளாவில் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிஎஸ்என்எல் மேளா பகுதியில் பிரத்யேக வாடிக்கையாளர் சேவை மையத்தை அமைத்துள்ளது, அங்கு பக்தர்கள் தடையில்லா தகவல் தொடர்பு சேவைகளைப் பெறுகின்றனர். கும்பமேளாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு அந்தந்த வட்டங்களில் இருந்து இலவச சிம் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாத்ரீகர் யாரேனும் தங்கள் சிம் கார்டை தொலைத்துவிட்டால். மேளா பகுதியிலேயே நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் இருந்தும் சிம் கார்டுகளை வழங்க பிஎஸ்என்எல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம், யாத்ரீகர்கள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் எளிதாக தொடர்பில் இருக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, பல்வேறு மாநிலங்களில் இருந்து சிம்கார்டுகள் வழங்கப்படுவதால், பக்தர்கள் மட்டுமின்றி, அங்கு நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரும் பயனடைகின்றனர். மகர சங்கராந்தி மற்றும் மௌனி அமாவாசை அன்று அமிர்த நீராடல்களின் போது, தகவல் தொடர்பு சேவைகளின் தரம் அப்படியே இருந்தது என்றும், அதிக கூட்டம் இருந்தபோதிலும், நெட்வொர்க் எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், பிரயாக்ராஜ் வணிகப் பகுதிக்கான பிஎஸ்என்எல்- இன் முதன்மை பொது மேலாளர் திரு பி.கே.சிங் குறிப்பிட்டார்.
Read More »மத்திய பட்ஜெட் 2025-26: முக்கிய அம்சங்கள்
பகுதி ஏ மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் மதிப்பீடுகள் 2025-26 மொத்த வருவாய் கடன்களைத் தவிர மற்றும் மொத்த செலவினங்களின் மதிப்பீடுகள் முறையே 34.96 லட்சம் கோடி & 50.65 லட்சம் கோடி ரூபாயாகும். நிகர வரிவருவாய் மதிப்பீடு 28.37 லட்சம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை மதிப்பீடு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதம் …
Read More »2025-26 மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கருத்துக்கள்
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் என்பதைக் குறிப்பிட்டுள்ள திரு மோடி, இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கிறது என்றும், ஒவ்வொரு குடிமகனின் கனவுகளையும் நிறைவேற்றுகிறது என்றும் கூறினார். இளைஞர்களுக்கு பல துறைகளில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன என்றும், சாதாரண குடிமக்கள் …
Read More »சட்டமுறை எடையளவு (பொட்டலப் பொருட்கள்) விதிகள், 2011-ன் கீழ் முத்திரை சீட்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை அமல்படுத்துவதற்கான காலக்கெடு அறிவிப்பு
சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் முத்திரை சீட்டுகளுக்கான திருத்தங்களை அமல்படுத்துவது குறித்த காலக்கெடுவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி கீழ் வணிக முத்திரை விதிகள் தொடர்பான திருத்தங்களை அது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்கள் அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திருத்தங்கள் முறையே ஜனவரி மற்றும் ஜூலை முதல் தேதிகளில் அமலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதுடன் உற்பத்தி தொடர்பான தரவுகளை வழங்குவதற்கும் கொள்முதல் குறித்த …
Read More »எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் எத்தனால் கொள்முதல் செய்வதற்கான வழிமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் –எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான எத்தனால் விலையில் திருத்தம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், மத்திய அரசின் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தின் கீழ், எத்தனால் விநியோக ஆண்டு 2024-25-க்காக 2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்கான எத்தனால் கொள்முதல் விலையை மாற்றியமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 2024-25 எத்தனால் விநியோக ஆண்டிற்கான (2024 நவம்பர் 1 முதல் 2025 அக்டோபர் 31 வரை) அதிக அடர்த்தி கொண்ட சர்க்கரைப்பாகு கழிவிலிருந்து பெறப்பட்ட எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்திற்கான எத்தனால் நிர்வாக விலை லிட்டருக்கு ரூ.56.58 லிருந்து …
Read More »மதுரையில் வருமான வரி செலுத்துவோருக்கான மையம்
மதுரையில் வருமான வரி செலுத்துவோர் மையம் நிறுவப்படுவதை அறிவிப்பதில் வருமான வரித்துறை மகிழ்ச்சியடைகிறது. இது 2025 ஜனவரி 29 முதல் 31 வரை செயல்படும். இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள வரி செலுத்துவோருக்கு விலைமதிப்பற்ற நுண்ணறிவுகள், வளங்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான துறையின் செயல்பாட்டில் ஒரு பகுதியாகும். வரி செலுத்துனர் மையத்தின் அம்சங்கள் வரி செலுத்துவோர் மையத்தில் இடம்பெறும் அரங்குகள் வரி செலுத்துவோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது: வரி தொடர்பான அத்தியாவசியத் தகவல்களின் ஆதாரமாக இவை செயல்படும். வரி செலுத்துவோர் தங்கள் வரி பொறுப்புகளை திறம்பட வழிநடத்த துல்லியமான மற்றும் …
Read More »ஜம்மு-காஷ்மீரில் புத்தொழில் சூழல் அமைப்பை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை மற்றும் ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தப் பிராந்தியத்தில் புத்தொழில்களுக்கான ஒத்துழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஜம்மு காஷ்மீர் கனெக்ட்” என்ற சிறப்பு புத்தொழில் மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. சந்தை இணைப்புகள், நிதி நெட்வொர்க்குகள் மற்றும் சர்வதேச விரிவாக்க …
Read More »ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சென்னையில் “ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறை பாதுகாப்பு” குறித்த 4-வது பயிற்சி திட்டத்தை நடத்துகிறது
மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா 2047 செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருட்கள் துறையால் “ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலை பாதுகாப்பு” என்ற தலைப்பில் 4-வது பயிற்சி திட்டம் 2025 ஜனவரி 23-24 தேதிகளில் சென்னையில் பெட்ரோ கெமிக்கல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐபிடி) நடத்தப்பட்டது. இது மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (சிப்பெட்) மையமாகும். இது ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் பெரும் விபத்து ஏற்படக்கூடிய …
Read More »மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் கைத்தறி மாநாட்டை 28.01.2025 அன்று தொடங்கி வைக்கிறார்
“கைத்தறி மாநாடு -மந்தன்” என்பது கைத்தறி துறையின் பல்வேறு பங்குதாரர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்வாகும். கைத்தறி நெசவாளர்கள்/உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், வாங்குபவர்கள், வடிவமைப்பாளர்கள், கல்வியாளர்கள், தொடக்க நிறுவனர்கள், கைத்தறி தொழில்முனைவோர், கைத்தறி கூட்டுறவு நிறுவனங்கள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள், பிரதமரின் பண்ணாயிலிருந்து வெளிநாடு வரையிலான தொலைநோக்கை செயல்படுத்துவதற்கான ஒரு தளமாகும். மாநாட்டில் 21 குழு உறுப்பினர்கள், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வரும் 120 கைத்தறி பயனாளிகள், நெசவாளர் சேவை மையங்கள், சுமார் 25 மாநில அரசுகள் என கிட்டத்தட்ட 250 பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். ஜவுளி அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகள் (கைத்தறி, பட்டு & ஜவுளி) மற்றும் அதிகாரிகள். கைத்தறித் துறையின் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் உத்திகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், பல்வேறு பங்குதாரர்கள் ஒன்றிணைவதற்கும் ஒரு தளமாகச் செயல்படுவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஒட்டுமொத்த கைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் வளர்ச்சி இயந்திரமாக செயல்படும் அபரிமிதமான ஆற்றலுடன் கைத்தறி துறையை ஒரு முக்கிய துறையாக மேம்படுத்தவும் இது உதவும். தொடக்க விழாவிற்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
Read More »
Matribhumi Samachar Tamil